Netflix: BatMan முதல் Ben10 வரை - வார்னர் ப்ரோஸை வாங்கும் நெட்ஃப்ளிக்ஸ்; ரூ.6 லட்சம் கோடி ஒப்பந்தம்!
திரைத்துறை வரலாற்றின் மிகப் பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றான வார்னர் ப்ரோஸ் டிஸ்கவரியின் (Warner Bros Discovery) தொலைக்காட்சி மற்றும் திரைப்பட ஸ்டுடியோக்களை, அதன் ஸ்ட்ரீமிங் பிரிவுடன் சேர்த்து 72 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்) வாங்க நெட்ஃபிளிக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. Warner Bros இந்த ஒப்பந்தத்தின் மூலம் திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு முறையை முற்றிலுமாக மாற்றியமைத்த நியூ-ஜென் ஸ்ட்ரீமிங் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஹாலிவுட்டின் பழமையான ஸ்டூடியோக்கள் வருவது கவனிக்கப்படுகிறது. எனினும், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளால் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் மூலம் டிஸ்க்குகளை அனுப்பும் DVD வாடகை நிறுவனமாக நிறுவப்பட்ட Netflix, இப்போது ஸ்ட்ரீமிங் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. பார்வையாளர்கள் பொழுதுபோக்கை அணுகும் முறை மாற்றமடைந்ததே இந்த வளர்ச்சிக்கு காரணம். தி பேட்மேன் | The Batman நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சமீபமாக சரிந்துவரும் நிலையில் இந்த ஒப்பந்தம் அதன் பங்குவிலையை உயர்த்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த இணைப்பு மிகப் பெரியதாக இருந்தாலும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஹெச்.பி.ஓ மேக்ஸ் ஓடிடி தளங்கள் பகிரப்பட்ட (overlap) சந்தாதாரர்களையே அதிகம் கொண்டிருப்பதனால் உடனடியாக மிகப் பெரிய லாபம் இருக்காது எனக் கூறப்படுகிறது. மிக முக்கியமாக இந்த இணைப்பின் மூலம் பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர் வுமன், பென் 10, லூனி ட்யூன்ஸ் கதாப்பாத்திரங்கள், ரிக் அண்ட் மார்டி, ஸ்கூபி டூ, கான்ஜூரிங், மார்டல் காம்பேட் உள்ளிட்ட பல பாத்திரங்களின் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் அடைகிறது. இது ரசிகர்களுக்கு விரும்பத்தக்க திருப்பமாக அமையலாம். Anurag Kashyup: `மாமியார் மருமகள் கதைகளை...' - நெட்ஃபிளிக்ஸ் CEO, ஏக்தா கபூருடன் மோதல் ஏன்?
What To Watch: அங்கம்மாள், களம்காவல், குற்றம் புரிந்தவன் - இந்த வாரம் ரிலீஸ்கள் இவைதான்!
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள்-சீரிஸ்கள் இவைதான். தியேட்டர் வெளியீடுகள் – டிசம்பர் 5 துரந்தர் (Dhurandhar): ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் இந்த பாலிவுட் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. களம்காவல் (Kalamkaval): ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி, விநாயகன், ஜிபின் கோபிநாத் ஆகியோர் நடிப்பில் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. க்ரைம் த்ரில்லர் படமான இதில் மம்மூட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Kalamkaval - Mammootty Kalamkaval Review: கொடூர வில்லனாக மம்மூகா; கதையின் நாயகனாக விநாயகன் - க்ளிக் ஆகிறதா இந்த களம்காவல்? அங்கம்மாள் (Angammal): பெருமாள் முருகனின் 'கொடித்துணி' சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. OTT வெளியீடுகள்: குற்றம் புரிந்தவன் - சோனி லிவ்: பசுபதி, விதார்த், லிசி ஆன்டனி, லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி ஆகியோர் நடித்திருக்கும் இந்த க்ரைம் த்ரில்லர் சீரிஸ் சோனி லிவ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. 7 எபிசோடுகளைக் கொண்ட இந்த சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்டீபன் - நெட்பிளிக்ஸ்: ஸ்மிருதி வெங்கட், கோமதி ப்ரியா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. The Girlfriend - Rashmika Mandanna தி கேர்ள் பிரண்ட்: ``பக்கபலமாக நின்ற அனைத்து ஆண்களுக்கும் - நடிகை ராஷ்மிகாவின் எமோஷனல் கடிதம்! தி கேர்ள்ஃப்ரெண்ட் (The Girlfriend) - நெட்பிளிக்ஸ்: ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ரஷ்மிகா மந்தன்னா, தீக்ஷித் ஷெட்டி, அனு இமானுவேல், ராவ் ரமேஷ், ரோகிணி நடிப்பில் தியேட்டரில் வெளியான இப்படம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தளத்திற்கு இப்போது வந்திருக்கிறது. டைஸ் இரே (Dies Irae) - ஜியோ ஹாட்ஸ்டார்: ராகுல் சதாசிவன் இயக்கத்தில், பிரணவ் மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்போது இத்திரைப்படம் ஜியோசினிமா தளத்தில் வெளியாகியிருக்கிறது. மேற்கண்ட படங்கள் மற்றும் சீரிஸ்களில் உங்களுடைய பேவரைட் எது?

Kalamkaval Movie Review | Mammootty, Vinayakan | Jithin K Jose | Cinema Vikatan

Kalamkaval Review: கொடூர வில்லனாக மம்மூகா; கதையின் நாயகனாக விநாயகன் - க்ளிக் ஆகிறதா இந்த களம்காவல்?
கொலை செய்யும் சீரியல் கில்லரை காவல் அதிகாரி தண்டிப்பதே மம்மூட்டி, விநாயகன் நடித்திருக்கும் இந்த மல்லுவுட் படைப்பின் ஒன்லைன். நாகர்கோவிலில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் ஸ்டீபன் தாஸ் (மம்மூட்டி). காதல் ஆசை காட்டி பெண்களை ஏமாற்றி கொலை செய்யும் சைக்கோ குணம் படைத்த கொடூர வில்லனாகவும் இருக்கிறார். ஒரு சாதிய கலவரத்தை விசாரிக்க இடமாற்றம் செய்யப்பட்டு களத்திற்குள் வருகிறார் ஜெயகிருஷ்ணன் (விநாயகன்). அந்த சாதிக் கலவரத்திற்குக் காரணமானவர் ஒரு பெண் குற்றவாளிதான் என்பதையும் அவர் உறுதிப்படுத்துகிறார். Kalamkaval Review ஆனால், அந்தப் பெண் காணாமல் போன தகவல் அறியும் ஜெயகிருஷ்ணன் அதனைப் பின்தொடர்ந்து விசாரிக்கும்போது அவரைப் போலப் பல பெண்கள் காணாமல் போயிருக்கும் தகவல் தெரியவருகிறது. காணாமல் போன பெண்களுக்கு என்ன ஆனது, அவர்கள் யார், எதற்காக, எப்படிக் கடத்தப்பட்டார்கள் என்பதை ஜெயகிருஷ்ணனின் விசாரணைப் பார்வையிலிருந்து த்ரில்லர் கதையாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜிதின் கே ஜோஷ். Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார்த் காம்போ?! வீட்டார் முன்பு சாந்தமானவராக இருக்கும் ஸ்டீபன், சட்டென 'அந்நியன்' மோடு ஆன் செய்து கொடூர வில்லனாக நடித்து, நம் வெறுப்பை சூட்கேஸ் நிறையச் சம்பாதித்துக்கொள்கிறார். வட்டமாகப் புகைக்கும் காட்சி, அந்த சிகரெட்டை மென்று துப்பும் இடம் என தன்னுடைய வழக்கமான ஸ்டைல் + நக்கல் தொனியில் வில்லனிசத்தை அநாயாசமாகக் கையாண்டிருக்கிறார். அதிலும் அந்தச் சிரிப்பு, அச்சுறுத்தல்! ‘இப்படியான தோற்றத்தில் உங்களைப் பார்ப்போம்னு ஸ்வப்னத்திலும் கண்டதில்லை மம்மூகா!’ பண்புடன் குடும்பஸ்தன் முகம் காட்டும் விநாயகன், முதிர்ச்சியுடன் வழக்குகளைக் கையாளும் இடங்களில் இஸ்த்ரி போட்ட சட்டையைப் போல இறுக்கம் காட்டி க்ளாப்ஸ் வாங்குகிறார். Kalamkaval Review அவருக்கெனப் பிரத்யேகமாக கொடுக்கப்படும் சேட்டைப் பிடித்த கறார் நடிப்பு டோனிலிருந்து விலகி இந்தக் கதாபாத்திரத்திற்கு மனதில் ஆழப் பதியும் நடிப்பைத் தந்திருக்கிறார். விநாயகனின் விசாரணைக்கு உதவும் ஜிபின் கோபிநாத் நடிப்பில் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் தமிழராக வரும் நடிகை ரஜிஷா விஜயன், இந்தக் கதை கோரும் பதற்றத்தை முகத்தில் அளவாகத் தந்து வெற்றிக் கோட்டைத் தொடுகிறார். ஆனால், அந்தப் பதற்றம் தமிழ் உச்சரிப்பிலும் தொடர்வது ஏனோ?! தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியின் நிலவமைப்பைத் திரைச் சட்டகத்திற்குள் காட்சிப்படுத்திய முறையும், கதாபாத்திரங்கள் மனவோட்டங்களுக்கு ஏற்ப அமைத்த பளிச்சிடும் லைட்டிங்கும் ஒளிப்பதிவாளர் ஃபைசல் அலியின் கைவண்ணங்கள்! சீட் எட்ஜ் த்ரில்லர் வடிவ கதையாகக் கோத்த வகையிலும், பல பெண்களை ஸ்டீபன் ஏமாற்றிய கதைகளை அடுத்தடுத்து 'மேட்ச் கட்' செய்து சொன்ன விதத்திலும் ஈர்க்கும் படத்தொகுப்பாளர் பிரவீன் பிரபாகர், ஆரம்பக் காட்சிகளுக்குக் கொடுக்க வேண்டிய நிதானத்தைக் கொடுக்காமல், தொடக்கத்திலேயே உயரப் பறக்கிறார். Kalamkaval Review 2005-ம் ஆண்டைக் காட்சிப்படுத்த கலை இயக்குநர் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திரைப்பட போஸ்டர், அப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகள், வண்டிகள் என அமைத்த விஷயங்கள் நம்மையும் டைம் டிராவல் செய்ய வைத்திருக்கிறது. இசையமைப்பாளர் முஜிப் மஜீத் பின்னணி இசையால் வால்யூம் பொத்தானை முழுவதுமாகத் திருகித் த்ரில் உணர்வைப் பன்மடங்குக் கூட்டுகிறார். அதுவும், அந்த அச்சமூட்டும் ஸ்பெஷல் சத்தத்தில் உள்ளுக்குள் நடுக்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறார். அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! கர்நாடகாவைச் சேர்ந்த சீரியல் கில்லர் சைனைடு மோகனை மையப்படுத்தி மம்மூட்டியின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சாப்டர்களாகப் பிரித்து, அதற்கெனத் தலைப்பிட்டுக் கதையை விவரிக்கிறது இந்தத் திரைப்படம். தொடக்கத்திலேயே படத்தின் முக்கிய ட்விஸ்டை உடைத்துவிடுவதால் ஏமாற்ற மனநிலைக்குத் திரும்பும் பார்வையாளர்களை இறுக்கப் பிடித்துப் புதியதோர் வழியில் த்ரில்லர் கதையைச் சொல்லி சர்ப்ரைஸ் செய்கிறார் இயக்குநர் ஜிதின் கே ஜோஷ். அந்த அளவினையும் எங்கும் கீழிறங்க விடாமல் கவனித்துக்கொண்டு எழுத்தாளராக வென்றிருக்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் ஜிதின் கே ஜோஷ் - ஜிஷ்னு ஶ்ரீகுமார். குற்றவாளியைக் கண்டறிய, வழக்கமான விசாரணைப் பாதையைத் தேர்வு செய்யாமல் முதற் பாதியின் முடிவில் புதிய ரூட்டிற்கு மாற்றியிருப்பது ‘வாவ்’ சொல்ல வைப்பதோடு, அடிப்பொலி இடைவெளி காட்சியாகவும் மாறியிருக்கிறது. Kalamkaval Review ஆனால், ஜெட் வேகத்திற்கு இணையாகப் பறக்கும் தொடக்க விசாரணைக் காட்சிகளை இன்னும் கொஞ்சமேனும் நிதானத்துடன் தெளிவாக விளக்கியிருக்கலாம். விசாரணைக்காக ஒரு பெண்ணைத் தேடிச் செல்லும் ஜெயகிருஷ்ணன், அங்கிருந்து எப்படி அந்தப் பெண்ணைப் போலவே காணாமல் போன மற்றப் பெண்கள் குறித்துத் தெரிந்துகொள்கிறார் என்பதில் போதிய விவரங்கள் இல்லாதது மைனஸ்! இத்தனை கொடூரச் செயலை நிகழ்த்தும் மம்மூகாவுக்கு அடர்த்தியான பின் கதையைச் சொல்லாமல், மூடி மறைத்திருப்பதும் ஏமாற்றமே. இரண்டாம் பாதியில் விசாரணை களத்தைத் துரிதப்படுத்திச் சொல்லாதது நீண்ட நேரம் படம் பார்த்த உணர்வைத் தருகிறது. இரண்டாம் பாகத்திற்கு லீட் எடுத்த விதமும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. வெயிட்டிங் சேட்டா! மம்மூட்டியின் அச்சமூட்டும் வில்லனிசம் தொடங்கி நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பு, த்ரில்லர் கதைக்குத் தேர்வு செய்த புதியதோர் களம் என இந்த ‘களம்காவல்’ மலையாளத்திலிருந்து கிடைத்திருக்கும் மற்றுமொரு சிறந்த த்ரில்லர் படைப்பு.
Stephen Movie Review | Gomathi Shankar | Mithun | Cinema Vikatan | Netflix Films

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார்த் காம்போ?!
அரசு மருத்துவமனையில் மருந்தாளராக பணிபுரியும் பாஸ்கரன் (பசுபதி) தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருந்தாளராக இருக்கும் அவருடைய பணிக்காலமும் முடிவை எட்டுகிறது. தனக்குக் கிடைக்கவிருக்கும் ஓய்வூதியப் பணத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பேரனுக்கு, சிகிச்சை செய்யத் திட்டமிடுகிறார். பென்ஷன் பணம் தடையில்லாமல் விரைவாகக் கிடைப்பதற்கு எந்த வழக்குகளிலும், பிரச்னைகளிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என பிரச்னைகளிலிருந்து விலகி இருக்கிறார் பாஸ்கரன். ஆனால், அந்த நேரத்தில் அவருக்குத் தொடர்பில்லாத ஒரு பிரச்னை, அவரின் வீட்டுக் கதவுகளைத் தட்டுகிறது. Kuttram Purindhavan Review இந்தப் பிரச்னை பேரனின் சிகிச்சையைப் பாதித்துவிடுமோ என்கிற பயத்தில் அதை மறைக்க முயல்கிறார். அதனால் மீளமுடியாத குற்றவுணர்ச்சியிலும் அவர் சிக்கிக் கொள்கிறார். மற்றொரு பக்கம், டி.எஸ்.பி-க்கு ஓட்டுநர் வேலை செய்யும் காவல் அதிகாரி கௌதம் (விதார்த்), அவருடைய கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தினால் இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய முயல்கிறார். இந்தப் பிரச்னை பாஸ்கரனை எங்குக் கொண்டு செல்கிறது, குற்றவாளியை கௌதம் கண்டுபிடித்தாரா என்பதை ஏழு எபிசோடுகளில் சொல்லியிருக்கிறது சோனி லிவ் தளத்தில் வெளியாகியிருக்கும் இந்தத் தமிழ் வெப் சீரிஸ். பேரனுக்காகத் துடிக்கும் தாத்தாவாக, குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கலங்குபவராகக் கதாபாத்திரம் கோரும் விஷயங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார் பசுபதி. மனதளவில் பதற்றமிருந்தாலும் அதனை முகத்தில் காட்டிவிடாமல் கட்டுப்படுத்தும் இடத்திலும், தான் செய்த தவற்றை உணர்ந்து இரும்பாகி நிற்கும் இடத்திலும் மிஸ்டர் பெர்ஃபெக்ட் என நிரூபித்திருக்கிறார் பசுபதி. பொறுமை, ஆற்றாமை, அப்பாவித்தனம் என தன் கதாபாத்திரத்திற்குச் சகல உணர்வுகளையும் தந்திருக்கிறார் விதார்த். காவல் துறையில் இருக்கும் அதிகாரப் படிநிலைகளின்படி, உயரதிகாரிகள் அவர்களைவிடப் பதவி குறைந்தவர்களைப் பயன்படுத்துவதையும், அவர்களுக்குக் கொடுக்கும் அழுத்தங்களையும் பிரதிபலிப்பவராக நடிப்பில் பரிதாபங்களைச் சம்பாதித்து, ஸ்டார்களை வாங்கிக் குத்திக்கொள்கிறார். வெல்டன் விதார்த்! Kuttram Purindhavan Review பாஸ்கரனின் துணைவியாக வரும் லிசி ஆண்டனி பயத்துடனும் பதைபதைப்புடனும் சீரிஸின் இறுதி வரை நடித்து, கதாபாத்திரத்தைப் பொறுப்பாகக் கரை சேர்க்கிறார். மகளை எண்ணி ஏங்கும் லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி, தன் நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்தை அழுத்தமானதாக மாற்றியிருக்கிறார். அதுவும் ‘மெர்சி எங்க போனா மெர்சி, எப்போ வருவ!’ எனத் துயரமிகுந்த வசனத்தைப் பேசும் இடங்களில் பார்ப்போர் இதயங்களைக் கனமாக்கிவிடுகிறார். இவர்களைத் தாண்டி ஜெயக்குமார், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, மறைந்த நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி என அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். சிறிய அறைக்குள் நிகழும் டிராமாவை ஃப்ரேம்-க்குள் புகுத்திய விதம், வீட்டிற்குள் இரவு நேர உணர்வைக் கூட்டக் கையாண்டிருக்கும் லைட்டிங், கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பார்வையாளருக்குக் கடத்தக் கையாண்ட நுணுக்கம் என ஒளிப்பதிவாளர் ஃபரூக் பாட்ஷா நேர்த்தியான பணியை எங்கும் பிசகாமல் செய்திருக்கிறார். த்ரில் உணர்வுடனே திரைக்கதையை நகர்த்தி, ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என அடுக்கிக் கதை சொல்லியிருக்கிறார் படத்தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசன். Kuttram Purindhavan Review ஒவ்வொரு எபிசோடின் இறுதியிலும் இவரின் கத்திரி செய்திருக்கும் மேஜிக்குகள் அடுத்தடுத்த எபிசோடுகளைத் தொடர்ந்து பார்க்க வைக்கும் வகையில் எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என், பின்னணி இசையால் த்ரில்லூட்டி, காட்சிகளை வீரியப்படுத்த முயன்று, அதில் வாகையும் சூடுகிறார்! குற்றவாளியைத் துப்புகளால் கண்டறியும் வழக்கமான க்ரைம் சீரிஸ் ஒன்லைனையே இயக்குநர் செல்வமணி முனியப்பனின் இந்த சீரிஸும் பின்பற்றியிருக்கிறது. ஆனால், அந்தக் களத்திற்குள் நம்மைத் த்ரில்லுடனும், பதைபதைப்புடனும் நகர்த்தும் விதத்தில் திரைக்கதையை ஆழமாகப் பின்னிக் கவனம் ஈர்க்கிறார். நாம் சாதாரணமாகக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் வசனங்களிலும், பொருட்களிலும்கூட சிறு சிறு குறியீடுகளை எவ்விதத் துருத்தலும் இன்றிச் சேர்த்து, அதன் மூலம் ட்விஸ்ட்களுக்கு 'லீட்' எடுத்த விதம் நல்லதொரு எழுத்து. அதில் டீடெய்லிங் கூட்டிய விதமும் சிறப்பு! Kuttram Purindhavan Review ஆனால், ஓரிரு இடங்களில் அந்த ட்விஸ்ட்களுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளால் சர்ப்ரைஸ் மீட்டரிலிருந்து விலகி சுவாரஸ்யத்தைக் குறைத்துக் கொள்கின்றன. அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! அதே சமயம், இடைப்பட்ட இரண்டு எபிசோடுகள் ஒரே நேர்கோட்டில் மீண்டும் மீண்டும் பயணிக்கும் தட்டையான கதையாக விரிவது மைனஸ். ஆனால், அடுத்தடுத்த எபிசோடுகளிலேயே அதைச் சரிசெய்து, பரபரப்புடன் நகரும் த்ரில் மற்றும் எமோஷனல் காட்சிகளால் பிஞ்ச் வாட்ச் செய்யத் தூண்டுகிறார்கள். ஃப்ளாஷ்பேக் கதைகளை இரு பார்வையில் சொல்லும்போது அதற்கெனத் தனித்தனி இடங்களை எடுத்துக்கொள்ளாமல் 'பேரலல்' கோணத்தில் கோர்வையாகச் சொன்ன ஐடியாவுக்கு க்ளாப்ஸ்! Kuttram Purindhavan Review 'நான் எவ்வளவு கெட்டவன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்!', உள்ளிட்ட சில வசனங்கள், பலவற்றை நமக்கு உணர்த்துவதோடு கதைக் கருவுக்கும் ஆழம் சேர்கின்றன. பெரும்பாலான இடங்களில் லாஜிக் விஷயங்களைப் பக்குவமாகக் கையாண்டிருப்பதெல்லாம் ஓகே! ஆனால், முக்கியக் குற்றவாளி, தான் நிகழ்த்தும் கொடூரச் செயல்களிலிருந்து எப்படி அத்தனை பக்குவமாகத் தப்பிக்கிறார்? அவருக்கு எப்படி பாஸ்கரனைப் பற்றிய விஷயங்கள் தெரியவருகின்றன? ஓர் இடத்தில்கூட சிக்காமல் அவர் தப்பிக்கும் ரகசியம் என்னவோ? இது போன்ற லாஜிக்கற்ற விஷயங்களைக் கொடுத்து நம்மை ஏமாற்றும் குற்றத்தை நிகழ்த்துவது ஏனோ! அதேபோல குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை முதிர்ச்சியாகவும், கவனமாகவும் அணுகாதது தவறான போக்கு. அதைக் காட்சிப்படுத்துவதில் இன்னுமே கண்ணியம் காட்டியிருக்கலாம். பேசும் அரசியல் சார்ந்த ஒரு சில குறைகள் இருப்பினும் அடர்த்தியான எழுத்தாலும், நல்ல திரையாக்கத்தாலும் இந்த ‘குற்றம் புரிந்தவன்’ நம்மை பிஞ்ச் வாட்ச் செய்ய வாஞ்சையாக அழைக்கிறான்.

Angammal Movie Review | Geetha Kailasam | Vipin Radhakrishnan | Mohammed Maqbool Mansoor | Vikatan

‘மூன்வாக்’படத்தில் 5 பாடல்களை பாடிய இசைப்புயல்!
‘மூன்வாக்’ படத்தில் 5 பாடல்களை பாடிய இசைப்புயல்! ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை மிகவும் ஈர்த்தன என்பது தெரிந்ததே. அவ்வகையில் ‘காதலன்’ படத்தின் மூலம் இணைந்து, தொடர்ந்த கூட்டணியில் ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’ ஆகிய படங்களும், பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. ‘மின்சார கனவு’ படத்துக்கு பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும்...
அப்பாவையே மிஞ்சிடுவான் போல ‘சிக்மா’படத்தில் ஜேசன் சஞ்சய் கேமியோ ? செம வைபா இருக்குமாம்
அப்பாவையே மிஞ்சிடுவான் போல ‘சிக்மா’ படத்தில் ஜேசன் சஞ்சய் கேமியோ ? செம வைபா இருக்குமாம் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தன் முதல் படத்தை இயக்கி வருகின்றார். ‘சிக்மா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கின்றார். லைகா தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ‘சிக்மா’ வெளியாகும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில், ‘சிக்மா’ பத்தில் ஒரு குத்துப்பாடல் தமனின் இசையில்...
“குட் நியூஸ்”அரசன்’படப்பிடிப்பு December 8 ஸ்டார்ட் உற்சாகத்தில்ரசிகர்கள்..!
“குட் நியூஸ்” அரசன்’ படப்பிடிப்பு December 8 ஸ்டார்ட் உற்சாகத்தில்ரசிகர்கள்..! கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘அரசன்’ ஷுட்டிங் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘அரசன்’ படப்பிடிப்பு தற்போது வரை ஷுட்டிங் துவங்கப்படாமல் இருக்கும் நிலை. சிம்பு வெளிநாட்டில் இருக்கிறார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விரைவில் திரும்புவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘அரசன்’ ஷுட்டிங் வரும் 9-ந்தேதி...
'மேக்னா'ஸ் ஃபார்ம்: கால்நடை வளர்ப்பு, மீன் பண்ணை! - இயற்கை விவசாயத்தில் 'பொன்மகள் வந்தாள்'மேக்னா
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' சீரியலில் நடித்த மேக்னாவை நினைவிருக்கிறதா? அப்பாவி மருமகளாக வந்து அனைவரின் ஆதரவையும் அள்ளினாரே, அவரேதான். பிறகு 'பொன்மகள் வந்தாள்' சீரியலிலும் நடித்தார். ஆனால் அதன்பிறகு தமிழ் சீரியல் ஏரியாவில் ஆளையே பார்க்க முடியவில்லை. எங்கிருக்கிறார் எனத் தேடிப் பிடித்துப் பேசினோம். மேக்னா இப்ப ரெண்டு புராஜெக்ட் போயிட்டிருக்கு! ''தமிழ் சினிமாவுல எனக்கு நல்ல அறிமுகம்தான் கிடைச்சது. ஆனாலும் சில சந்தர்ப்ப சூழல்ல தொடர்ந்து அங்க பண்ண முடியல. அதனால சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்பிட்டேன். மலையாள சேனல்கள் சில ஷோக்கள் பண்ணிட்டிருந்த எனக்கு சீரியல் வாய்ப்பும் வந்தது. இப்ப ரெண்டு புராஜெக்ட் போயிட்டிருக்கு. மலையாள சினிமாவுலயும் கேட்டுட்டு இருக்காங்க. 'மேக்னா'ஸ் ஃபார்ம்' தமிழ் இன்டஸ்ட்ரியில வேலை செய்யப் பிடிக்கும்னாலும் தொடர்ந்து வாய்ப்பு இருந்தாதானே அங்க இருக்க முடியும்? இப்ப சொந்த ஊர்ல வீட்டோட இருக்கிற ஒரு சந்தோஷமும் சேர்ந்துகிடுச்சு. இன்னொரு முக்கியமான விஷயம்... நடிப்போட எனக்குப் பிடிச்ச இன்னொரு விஷயத்தையும் இங்க பண்ணிட்டிருக்கேன். அது இயற்கை விவசாயம். மேக்னா இது என்னுடைய ரொம்ப நாள் ஆசை. வீட்டுக்குத் தேவையான காய்கறிகளுக்காச்சும் தோட்டம் வாங்கி விவசயம் செய்யணும்னு நினைச்சேன். அதுக்கு கையில கொஞ்சம் காசு சேரணும்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன். கொஞ்சம் காசு சேர்ந்ததும் எங்க ஊர்லயே ஒரு ஆறு இருக்கு. அந்த ஆற்றின் கரையில் கொஞ்சம் நிலம் வாங்கி 'மேக்னா'ஸ் ஃபார்ம்'னு தொடங்கியாச்சு. காய்கறிகள், பழங்கள், கீரை பயிரிடறதோட விவசாய வேலைகளுக்குத் தேவைப்படுகிற கால்நடைகளும் வளர்க்கிறோம். என் அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்காங்க. ஆத்துக்குளள கூடு அமைச்சு மீன் பண்ணையும் வச்சிருக்கேன். முதல்ல வீட்டுக்கு மட்டும்னு தொடங்கினாலும் இப்ப பிசினஸ்ங்கிற இடத்துக்கு கொஞ்சம் நகர்ந்திருக்கு. செடிகளுக்கு ரசாயான உரங்கள்ங்கிற பேச்சுக்கே இடமில்லை. சீரியல் ஷூட்டிங், அதை விட்டா இயற்கை விவசாயம்னு லைஃப் சந்தோஷமா போயிட்டிருக்கு'' என்கிறார். ``எங்க டைவர்ஸுக்கு இதுதான் காரணம்!'' - 'பொன்மகள் வந்தாள்' சீரியல் விக்கி - மேக்னா பஞ்சாயத்து

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை..!
கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை..! கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ படத்தை ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ என்ற படமும் உருவாகி வருகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த...
`Favourite Onscreen Pair' VIKA - Swaminathan | Lakshmi Priya | Vikatan Tele Awards 2024

BB Tamil 9: Day 60: முடியாத முக்கோணக் காதல்; பாரு அட்ராசிட்டி - கானா வினோத்தின் முரட்டு சம்பவங்கள்!
வீக்லி டாஸ்க் முடியும் ஒவ்வொரு முறையும் ‘ஹப்பாடா’ என்று போட்டியாளர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள். ஆனால் அப்படி மகிழ வேண்டியது பார்வையாளர்கள்தான். ‘இப்போதாவது முடிந்து தொலைத்ததே’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுமளவிற்கு ஒவ்வொரு டாஸ்க்கையும் போட்டியாளர்கள் பயங்கரமாக சொதப்புகிறார்கள். நாள் 60 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? சுபிக்ஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே சபரி நெக்லஸை திருடியது விதிமீறல். பொதுவாக நியாயமாக நடந்து கொள்ளும் சபரியே இப்படிச் செய்தது அதிர்ச்சியானது. எதிரணியினரைப் பழிவாங்கும் ஆத்திரத்தில் செய்தது நன்றாகவே தெரிகிறது. எனவே இதை நிராகரித்த பிக் பாஸ், சபரியை சிறைக்கு அனுப்பியது நியாயமான முடிவு. ‘முக்கோணக் காதலை முடித்து விடலாம்’ என்று விடிய விடிய பேசினாலும் பாரு - அரோரா சண்டை எளிதில் முடியாது போலிருக்கிறது. ரெட்ரோ சினிமா அணி ஒளித்து வைத்திருக்கும் நெக்லஸை தேடுகிறேன் பேர்வழி என்று வந்த பாரு, அரோராவின் படுக்கையில் இருக்கும் பொருட்களை சோதனை செய்து ‘தோண்ட தோண்ட இன்னும் எத்தனை வருமோ?” என்று டபுள் மீனிங்கில் பேசி வம்புக்கு இழுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அரோரா, ‘என் பொருட்களை தொடும் உரிமை உனக்கு கிடையாது’ என்று ஆட்சேபித்தார். ‘பொருள்’ என்பது கம்ருதீன் என்பது மாதிரியும் நமக்குப் பொருளாகியது. ‘டிரஸ்ஸ நோண்டுங்க. என்னை நோண்டாதீங்க’ என்று அரோரா ஆட்சேபிக்க, “இந்த ஆட்டத்துல இதெல்லாம் சகஜம். தெரிஞ்சுதானே வந்திருப்பீங்க?” என்று அட்ராசிட்டியை தொடர்ந்தார் பாரு. அந்தச் சமயத்தில் கம்மு வர, வீட்டுக்குள் நுழைந்த அப்பாவை தூக்கச் சொல்லி கை நீட்டும் பாப்பா போல பாரு கையை நீட்டி ‘என்னாச்சு பேபி?’ என்று வந்து கட்டிக் கொண்டார் கம்மு. இந்தச் செயல் அரோராவை வெறுப்பேற்றுவதற்காக என்பது வெளிப்படை. அரோராவை வம்பிழுத்து அட்ராசிட்டி செய்த பாரு ‘அவங்க ரெண்டு பேரும் பிரெண்டா இருக்கட்டும். ஆனா என் முன்னாடி கட்டிப் பிடிச்சு டான்ஸ் ஆடினா.. எனக்கு ஹர்ட் ஆகுது’ என்று முன்னர் கதறிய பாரு, தான் அனுபவித்த அதே வலியை இன்னொருவருக்கு தருவதற்கு துளி கூட தயங்கவில்லை. அரோ அழுவதற்கான ஆரம்பங்களைச் செய்ய ‘இதுதான் சாக்கு’ என்று FJவும் வினோத்தும் ஓடி வந்து அரோவை கட்டிப்பிடித்து சமாதானம் செய்ய முயற்சித்தார்கள். “பாரு.. இப்படித்தான் எமோஷனலா விளையாடுவா. விடு” என்றார் FJ. “பேசிக்கிட்டே இருக்கா.. எனக்கு மண்டை வெடிக்குது” என்று கதறினார் அரோ. “அவன் போறேன்னு சொன்னப்ப நீ அழுதல்ல.. அப்ப ஃபீலிங்க்ஸ்தானே?” என்று சந்தர்ப்பம் புரியாமல் வினோத் கேட்க “அவன் என் நண்பன்தான்” என்ற அரோ, திடீரென தலையில் பயங்கரமாக அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். “ஒரு பிரெண்டா நல்லது கெட்டதெல்லாம் அவனுக்கு சொன்னேன்.. நீ ஹீரோவா ஆக வேண்டியவன். அதற்கு உண்டான வேலையைப் பாருன்னு மோட்டிவேட் பண்ணேன்” என்பது அரோவின் கதறல். (வேலையைப் பாருன்னு சொன்னா, பாருவைப் பார்க்க ஆரம்பிக்க விட்டார் போல கம்மு!) ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’?” ஒட்டுக் கேட்டு மாட்டிக் கொண்ட கனி சான்ட்ரா, வியானா, ரம்யா ஆகிய மூவரும் அமர்ந்து புறணி பேசிக் கொண்டிருந்தனர். “எங்க பார்த்தாலும் சுபிக்ஷா வந்து உக்காந்துக்கறா.. அதனாலதான் அவளை ஸ்னூப்பி டாக்’குன்னு சொன்னேன்’ என்று சான்ட்ரா சொல்வதெல்லாம் அநியாயம். இந்தச் சமயத்தில் ஒரு சம்பவம். இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பிக் பாஸிற்கு அடுத்தபடியாக காது கொடுத்து ஒட்டுக் கேட்டார் கனி. அநாகரிகமான செயல். பிறகு மாட்டிக் கொண்டவுடன் இளித்தபடி சென்றார். துவைத்த துணியை காயப்போடாத விஷயத்தில் ரம்யா சொன்னபடி செய்த விக்ரமை டார்கெட் செய்து பாரு வசைபாடிக் கொண்டிருந்தார். “சுயபுத்தி இல்லையா?” என்றெல்லாம் பாரு வம்பிழுக்க, பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் விக்ரம். “நீதான் இதுக்கான எல்லையை நிர்ணயிக்கணும். இல்லைன்னா ஓவரா பேசுவா” என்று விக்ரமிடம் சொன்னார் கனி. “யாராவது கேரக்டர்ல இருந்து வெளியேறினா, பஸ்ஸர் அடிச்சு அவங்களை டாஸ்க்ல இருந்து வெளியேத்திடுவேன்’ என்றெல்லாம் சீன் போட்ட பிக் பாஸ், அதைச் செய்யவில்லை. அந்தப் பொறுப்பை போட்டியாளர்களிடமே தள்ளி விட்டார். அப்போதுதானே சண்டை நடந்து கன்டென்ட் கிடைக்கும்?! FJ அதிரடி குற்றச்சாட்டு ‘பாருவிற்கு லவ் பண்ணவே நேரம் சரியா இருந்தது’ ‘மாடர்ன் சினிமா அணியில்’ சிறப்பாக செய்யாதவர் யார்?’ என்கிற கேள்விக்கு மெஜாரிட்டியான கைகள் FJவை நோக்கியே நீண்டன. FJ பதில் சொல்லும் போது பாருவின் பெயரைச் சொல்லி விட்டு ‘கம்ருதீன் கூட லவ் பண்ணவே இவங்களுக்கு நேரம் சரியா இருந்தது’ என்று புகார் சொல்ல, சும்மாவே ஆடும் பாரு, சலங்கை கட்டிக் கொண்டு ஆடினார். “என் கேரக்டரை தப்பா சொல்றான்’ என்று FJ மீது ஆத்திரமடைந்தார் பாரு. ‘எத்தனை முறை சொல்லியிருக்கேன். மைக்கை ஆஃப் பண்ணிட்டு பேசாதீங்க’ என்று பிக் பாஸிடம் திட்டு வாங்கும் அளவிற்கு ரொமான்ஸை சிறப்பாக செய்த பாரு - கம்மு ஜோடி இதற்காகப் பொங்குவது நகைச்சுவை. அடுத்த அறிவிப்பைச் சொல்ல பிக் பாஸ் முயற்சித்தாலும் பாருவின் ஆத்திரம் அடங்காமல் பேசிக் கொண்டேயிருக்க, FJவும் அதற்கு மல்லுக்கட்டினார். ‘சைலன்ஸ்.. சைலன்ஸ்’ என்று உடல்நலக்குறைவாக இருந்த ரம்யா கத்த வேண்டியதாக இருந்தது. போட்டியில் இருந்து FJ வெளியேற்றப்பட்டார். “நான் என்ன பண்ணேன்னு மக்களுக்குத் தெரியும். என் டாஸ்க்கை பண்ணிட்டுதான் இருந்தேன்” என்று புலம்பினார் FJ. FJவுடன் ஏழாம் பொருத்தம் என்றாலும் விடாமல் நோண்ட ஆரம்பித்தார் பாரு. “ஏன் டாஸ்க் சரியாப் பண்ணாம ஒதுங்கியிருந்தே. ஏதாவது காரணம் இருக்கா?” என்று பாரு கேட்க “என்னோடது இன்ட்ரோவொ்ட் கேரக்டர். அதை வெச்சு பண்ணிட்டுதான் இருந்தேன். நான் சும்மா இல்லை. உன்னை மாதிரி மத்தவங்களை நோண்ட மாட்டேன். பிடிக்கலைன்னா தனியா போய்டுவேன்” என்று FJ பதிலடி கொடுக்க மீண்டும் சண்டை. சந்தைக் கடை சண்டை FJவை வெறுப்பேற்றிய பாரு பாருவின் அலப்பறையால் தான் பாதிக்கப்படவில்லை என்று காண்பித்துக் கொள்வதற்காக உரத்த குரலில் பாடினார் FJ. ஒருவரை வெறுப்பேற்றுவது எப்படி என்பதில் பாருவிற்கு பிஹெச்டி பட்டமே தரலாம். இந்த டாஸ்க் முடியும் சமயத்தில், ரெட்ரோ அணி செய்ததைப் போலவே, மாடர்ன் அணியும் ஓடிச் சென்று போர்வையை மூடி நெக்லஸை எடுக்க முயற்சித்தார்கள். ரெட்ரோ அணியாவது யாரும் இல்லாத சமயத்தில் இதைச் செய்தது. ஆனால் மாடர்ன் அணியோ ‘பட்டப்பகலில் வழிப்பறி’ என்பது மாதிரி அனைவரும் இருக்கும் போதே போர்வையை மூடி எடுக்க முயன்றது அபத்தமான மற்றும் அநியாயமான ஸ்ட்ராட்டஜி. இது தொடர்பாக அமித்திற்கும் வினோத்திற்கும் இடையே மோதல். வினோத்திற்கும் பிரஜனுக்கும் இடையே பயங்கர சண்டை. இந்தப் பஞ்சாயத்து நடக்கும் போதே வினோத்தும் கம்ருதீனும் மீண்டும் போர்வையை தூக்கிக் கொண்டு ஓட, அதைத் தடுக்க முயன்றதில் சுபிக்ஷாவின் காலில் அடிபட்டு அழ ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் ஹீரோவும் ஹீரோயினும் முத்தமிட நெருங்கும் போது காமிரா விலகி அருகிலுள்ள செடி பூக்களைக் காட்டும். அது போல இந்த வன்முறைக் காட்சிகளின் போது வீட்டிலுள்ள இன்டீரியர் காட்சிகளை காமிரா காட்டிக் கொண்டிருந்தது. கானா வினோத் செய்த முரட்டுத்தன சம்பவங்கள் வீடே சந்தைக் கடையாக மாறி ஆளாளுக்கு கத்திக் கொண்டிருக்க ‘சைலன்ஸ்’ என்று கத்தி அமைதியைக் கொண்டு வர போராடினார் சபரி. “நாங்க இன்னமும் எடுக்கலேன்னு எப்படியெல்லாம் கலாய்க்கறீங்க.. அப்ப எப்படித்தான் நெக்லஸ எடுக்கறது?” என்று தாங்கள் செய்த முரட்டுத்தனத்திற்கு சப்பைக் கட்டு கட்டினார் கம்ருதீன். இவர்களைச் சமாளிக்க முடியாமல் “என்னால முடியல.. உடம்பு சரியில்லாம இவங்களை மேய்க்கறது கஷ்டமா இருக்கு” என்று அழ ஆரம்பித்தார் வீட்டு ‘தல’ ரம்யா. ஒருவழியாக திரும்பி வந்த ரம்யா கண்ணீர் காயாமல் கூட்டத்திடம் பேச ஆரம்பிக்க “அது ஏன் எங்களைப் பார்த்து சொல்றீங்க?” என்று பாரு அலப்பறையை ஆரம்பிக்க மீண்டும் கலாட்டா. ‘பிக் பாஸ் ஏதோ சொல்லப் போறாரு.. சும்மா இருங்க’ என்று கத்தியும் பாருவும் FJவும் உக்கிரமாக சண்டை போட்டுக் கொண்டார்கள். செல்லப் பிள்ளையான விக்ரமை கன்ஃபெஷன் ரூமிற்கு கூப்பிட்டார் பிக் பாஸ். டாஸ்க் லெட்டரை கொண்டு வந்த விக்ரம், இவர்கள் செய்த கலாட்டா காரணமாக “ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு உடனே வாங்க.. இல்லைன்னா சாவுங்க” என்று அதுவரை அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளியில் கொட்டினார். இவர்களின் சந்தைக் கடை இரைச்சலைப் பார்த்தால் நமக்குமே அப்படித்தான் எரிச்சல் வந்தது. எவிக்ஷனை எதிர்கொள்ளும் மாடர்ன் சினிமா அணி ரெட்ரோ சினிமா அணி வெற்றி ஆங்கில எழுத்துக்களை சரியாக அடுக்குவதின் மூலம் உணவுப் பொருளின் பெயரை உருவாக்கி அதை கீழே சரியாமல் கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட உணவு ஜெயித்த அணிக்கு கிடைக்கும். இதில் ரெட்ரோ சினிமா அணி வெற்றி பெற்றது. இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டாஸ்க்கிலும் ரெட்ரோ சினிமா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணியில் உள்ள அனைவரும் நாமினேஷன் ஆபத்திலிருந்து தப்புவார்கள். போலவே இந்த டாஸ்க்கில் தோற்ற மாடர்ன் சினிமா அணியில் உள்ள அனைவரும் எவிக்ஷன் ஆபத்தை எதிர்கொள்வார்கள். ‘இத்துடன் இந்த டாஸ்க் முடிந்தது’ என்று சொன்னதை விடவும் ‘சந்தைக் கடை டாஸ்க் முடிந்தது’ என்று சொல்லியிருக்கலாம். அத்தனை சண்டை. சற்று அடாவடி பேர்வழியாக இருந்தாலும் தனது காமெடி பன்ச்களின் மூலம் கவனத்தைக் கவர்ந்த வினோத், இந்த இரண்டு நாட்களில் கம்ரூதீனைப் போல முரட்டுத்தனமாக கோபம் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொண்டார் எனலாம். பிரஜன், திவ்யா, அமித், ஆதிரை என்று பலரிடமும் இன்று உக்கிரமான சண்டை போட்டார். டாஸ்க் முடிந்து அநாதையாக கிடந்த நெக்லஸைப் பார்த்து “கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் உன்னைக் கைப்பற்ற அத்தனை சண்டை நடந்தது. இப்ப பார்த்தியா… உன்னை அப்படியே போட்டுட்டு போயிட்டாங்க. இதுதான் மனுஷ குணம்” என்று நெக்லஸை கொஞ்சுவதின் மூலம் காதல் தத்துவம் பேசிக் கொண்டிருந்தார் அரோ. சீசனின் ஆரம்பத்திலேயே விக்ரம் சொன்னது போல, இந்த சீசனில் கிரியேட்டிவிட்டியை விடவும் நெகட்டிவிட்டிதான் அதிகமாக இருக்கிறது. இதன் உற்பத்தியாளர்களாக பாரு போன்றவர்களைச் சொல்லலாம்.!

விஜயா செய்த கேவலமான வேலையால் கொந்தளித்த அண்ணாமலை, மீனா சொன்ன விஷயம் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, முத்து எல்லோரும் கிரிஸை வீட்டில் தங்குவதற்கு ஒத்துக்கொண்டார்கள். வழக்கம் போல மனோஜ்- வித்யா தான் வேண்டாம் என்று சண்டை போட்டார்கள். பின் அண்ணாமலை, கிரிஷை அங்கேயே தங்க வைத்தார். அதற்குப்பின் விஜயா, கிரிஷை இங்கிருந்து எப்படியாவது அனுப்பி விடணும் என்று ரோகிணியிடம் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் பார்வதி- சிவன் இருவரும் சேர்ந்து குழந்தைகளுக்கு கதை சொல்லி வீடியோ எடுத்து போட்டார்கள். இது எல்லாம் பார்த்து விஜயாவிற்கு […] The post விஜயா செய்த கேவலமான வேலையால் கொந்தளித்த அண்ணாமலை, மீனா சொன்ன விஷயம் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
``ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தூங்குகிறேன் அதனால்.!'' - வேலைப்பளு குறித்து ராஷ்மிகா மந்தனா
2016-ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் 'The Girlfriend' படம் வெளியாகியிருந்தது. The Girlfriend movie இந்நிலையில் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்திற்கு ராஷ்மிகா பேட்டி அளித்திருக்கிறார். இந்த வருடம் எனக்கு சிறப்பான வருடமாக இருக்கிறது. என்னுடைய ஐந்து படங்கள் இந்த வருடம் வெளியாகி இருக்கின்றன. சில படங்கள் திட்டமிட்டு நடந்தன. சில படங்கள் யதார்த்தமாக அமைந்தன. அந்த அனைத்து படங்களும் எனக்கு முக்கியமான படங்கள் தான். என் கரியரின் தொடக்கத்தில் இந்த மாதிரியான படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று என்னை நான் சுருக்கிக்கொள்ளவில்லை. அதன் பிரதிபலிப்பு தான் தற்போது ஒரு வருடத்தில் எனக்கு ஐந்து படங்கள் வெளியாகி இருக்கின்றன. பெரிய படங்களில் நடிப்பதை மட்டும் நான் என்னுடைய வெற்றியாக உணரவில்லை. 'The Girlfriend' மாதிரியான படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பதை நான் என்னுடைய வெற்றியாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து வேலைப்பளு குறித்து பேசிய ராஷ்மிகா, தொடர்ந்து வேலை செய்துகொண்டு இருப்பதால் தூங்கக்கூட நேரம் கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு 4, 5 மணி நேரம் தான் தூங்குகிறேன். இதனால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதெல்லாம் வேலைப்பளுவால் தான் நடக்கிறது. இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். Rashmika: திருமணம் பற்றிய தகவலை நான் மறுக்கவில்லை, அதே சமயம்!- ராஷ்மிகா மந்தனா
தங்கமயிலின் நாடகத்தால் ருத்ரதாண்டவம் ஆடும் சரவணன், அதிர்ச்சியில் பாண்டியன் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், சரவணன் இடையே சண்டை வந்தது. ஒரு கட்டத்தில் சரவணன், தங்கமயிலை அவருடைய அம்மா வீட்டிற்கு போக சொன்னார். அப்போது வந்த பாண்டியன், என்ன பிரச்சனை? என்ன நடக்கிறது? என்று விசாரித்தார். சரவணன் உண்மையை சொல்ல வந்தார். உடனே தங்கமயில், என்னுடைய அப்பாவை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி பிரச்சினையை மாற்றி விட்டார். இதனால் கோபத்தில் பாண்டியன், சரவணனை திட்டினார். சுகன்யா, பாண்டியன் […] The post தங்கமயிலின் நாடகத்தால் ருத்ரதாண்டவம் ஆடும் சரவணன், அதிர்ச்சியில் பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
குற்ற உணர்ச்சியில் தமிழிடம் மன்னிப்பு கேட்கும் சேது, காவியா எடுக்கும் முடிவு என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸின் சுயரூபம் வெளியே வந்ததால் ஆத்திரம் தாங்க முடியாமல் ராஜாங்கம் அவரை அடித்தார். அதற்குப்பின் போஸுக்கு கொடுக்க வேண்டிய ஒரு கோடி ரூபாய் பணத்தை தமிழ்ச்செல்வி இடம் ராஜாங்கம் கொடுத்தார். தமிழ்ச்செல்வி, இந்த பணம் உங்களுடைய உயிருக்கு விலை கிடையாது. எனக்கு இந்த பணம் தேவையில்லை என்றார். உடனே அப்பத்தா, தமிழ்ச்செல்விக்கு வேண்டாம் என்றாலும் அவருடைய பெயரில் இந்த பணத்தை போட்டு விடுவேன். தமிழ் செல்வி அந்த பணத்தை […] The post குற்ற உணர்ச்சியில் தமிழிடம் மன்னிப்பு கேட்கும் சேது, காவியா எடுக்கும் முடிவு என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
நிலா செய்த வேலையால் பயத்தில் புலம்பி தவிக்கும் சோழன், காயத்ரி என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நான் என்ன தவறு செய்தேன். இது பொய்யான திருமணம் தானே. விவாகரத்து வாங்கிக் கொண்டு நிலா சென்று விடுவார். இந்த கல்யாணத்தை அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் ஒரு பெண்ணுடன் பேசியதில் என்ன தவறு. நான் அந்த பெண்ணை காதலிக்கவில்லை. தோழியாக தான் நான் பழகினேன் என்றெல்லாம் சொன்னார். நிலா, நீங்கள் சொல்வது உண்மைதான். இது போலியான கல்யாணம் தான். நீங்கள் காயத்திரி உடன் பேசுங்கள், […] The post நிலா செய்த வேலையால் பயத்தில் புலம்பி தவிக்கும் சோழன், காயத்ரி என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
விஜய் தேவர்கொண்டாவுடனான திருமணம் பற்றி நான் மறுக்கவில்லை, ஆனால் –ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே ராஷ்மிகாவின் காதல் கிசுகிசுகள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ராஷ்மிகா அவர்கள் ஐந்து வருடத்திற்கும் மேலாக தன்னுடன் நடித்த நடிகர் விஜய் தேவர் கொண்டாவை தான் காதலிக்கிறார், டேட்டிங் செய்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. அதற்கு ஏற்ப இருவருமே பல இடங்களில் ஒன்றாக சென்ற […] The post விஜய் தேவர்கொண்டாவுடனான திருமணம் பற்றி நான் மறுக்கவில்லை, ஆனால் – ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு!
தனது குக்கிராமத்தின் முதல் டாக்டரான பவளமுத்து (சரண்), நகரத்தில் வசிக்கும் வசதியான வீட்டுப் பெண்ணான ஜாஸ்மினை (முல்லையரசி) காதலிக்கிறான். ஊரிலிருக்கும் அவனது அம்மா அங்கம்மாள் (கீதா கைலாசம்) வாழ்நாள் முழுவதும் ரவிக்கை போட்டதே இல்லை. இந்நிலையில் திருமணம் பேச ஜாஸ்மின் வீட்டார் அவர்கள் வீட்டிற்கு வரும் நாள் நெருங்குகிறது. இதனால் ‘இப்படியொரு அம்மாவைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்?’ எனப் பவளமுத்து தயங்க, அவனது அண்ணி சாரதாவுடன் சேர்ந்து அங்கம்மாளின் மனதை மாற்ற திட்டம் தீட்டுகிறார்கள். யார் இந்த அங்கம்மாள், அவர் மகனின் ஆசைப்படி ரவிக்கை போட்டுக்கொண்டாரா, இல்லையா என்பதை பிடிவாதமும் பாசமும் கலந்து சொல்லியிருக்கிறது படம். அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review யாருக்கும் எதற்கும் அஞ்சாத தைரியம், தன் இருப்பு கைவிட்டுப் போகிறதோ என்கிற குழப்ப நிலை, தூய நரை பேசும் காதல் என நடிப்பில் நவரசக் கோலத்தைப் பச்சை குத்திச் செல்கிறார் கீதா கைலாசம். பற்றவைத்த சுருட்டின் நெருப்பாகப் பேச்சில் சுடுபவர், அகம் சார்ந்த உணர்வுகளைச் சாம்பல் நிறப் புகையாகத் தேவையான குழப்பத்தோடு நடிப்பில் ஊதித் தள்ளுகிறார். Angammal: அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு! - கீதா கைலாசம் எந்த இடத்திலும் கதாபாத்திரத்தை விட்டு வெளியே வராத அவரது நடிப்புக்கு உச்சாணிப்பூவைக் கொடுத்துவிடலாம். ‘அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்’ என்கிற மனப்போராட்டத்துடன், தனது எண்ணங்களைத் தாயாரிடம் திணிக்கும் மகனாகத் தனது நடிப்பினால் நியாயம் செய்து வெறுப்பினைச் சம்பாதித்துக்கொள்கிறார் சரண். பாரபட்சம் காட்டும் தாயாரின் ஓரவஞ்சனையை உடைத்துப் பேசுமிடத்தில் நம் பரிதாபத்தைச் சம்பாதிக்கும் பரணிக்கு பெயர் சொல்லும் கதாபாத்திரம்! ஆதிக்கத்துக்குள் ஆதிக்கம் என்பதாக அத்தையின் அதட்டலுக்கு நடுங்குகிற பெண்ணாக வரும் தென்றல் ரகுநாதனும், அதற்கு அப்படியே எதிர்த்துருவமாக காதலனின் பாதுகாப்பின்மையைக் கேள்வி கேட்கும் யுவதியாக முல்லையரசியும் மனதைக் கவர்கிறார்கள். அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review ஓரக்கண்ணில் ரகசியப் பார்வையுடன் ‘அன்பிற்கு வயதில்லை’ என்பதாக மனதைக் கவரும் வினோத் ஆனந்த், பாட்டியின் மடிசாயும் அன்பு பேத்தி யாஸ்மின், துணைக் கதாபாத்திரங்களாக வரும் செல்வி, யுவராணி ஆகிய அனைவரும் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். Angammal Movie Exclusive: இங்கே ஒவ்வொரு மனுஷனும், மனுஷியும் ஒரு கதைதான்! சாந்தமான நீலநிற ஒளியுணர்வோடு மலையடிவாரத்தின் எழில் கொஞ்சும் பசுமை, இரவின் நிழல் பேசும் மெர்குரி வெளிச்சம் எனத் தெளிந்த நீரோடையில் தெரியும் கூழாங்கற்களைப் போல கவித்துவமான ஃப்ரேம்களை வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஞ்சோய் சாமுவேல். மேற்பூச்சு இல்லாத பிரதீப் சங்கரின் படத்தொகுப்பு நல்லதொரு திரைமொழி! டிவிஎஸ் சேம்ப்பில் இருக்கும் கறுப்பு நம்பர் பிளேட், வாக்மேன் கேசட், மண்ணெண்ணெய் விளக்கு, தியேட்டர் போஸ்டர், வெள்ளைத் துணி பேனர் ஆகிய பொருட்களின் மூலம் கதை நடக்கும் காலத்தை காட்சிகளில் சொல்ல உதவியிருக்கிறார் கலை இயக்குநர் கோபி கருணாநிதி. அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review ‘உச்சிமலை காற்றே’ என்று ஆரம்பத்தில் தென்றலாக வருடும் தாலாட்டு போன்ற பாடல், இறுதிக்காட்சி நெருங்க, நெருங்க நிறம் மாறி, அதுவே நம்மைச் சுழன்றடிப்பது போலப் பார்த்துக் கொள்கிறார் இசையமைப்பாளர் முகமது மக்புல் மன்சூர். மௌனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பின்னணி இசையுடன், திரைக்கதைக்கு ஒத்து ஊதும் நாதஸ்வர இசையும் படத்துக்கு வலுசேர்க்கிறது. ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம்: சாதிய பாகுபாட்டினைப் பேசும் நல்லதொரு எழுத்து; ஆனால், திரைமொழி?! அதேபோல ‘ஊ…’ என அடித்து வீசும் பேய்க்காற்றின் சத்தம், பல்லி கத்தும் இடம், தீ பற்றி எரிவது, சலசலக்கும் ஓடை என உருவமில்லா கதைசொல்லியாக ஒலியை வடிவமைத்திருக்கிறார் லெனின் வளப்பாட். பழங்கால ஆடைகளின் பேட்டர்ன், கதையின் மையமாக இருக்கும் வாயால் புடவை, ரவிக்கை, மேக்கப்பில் இயல்பாகத் தெரியும் பல்லின் கறை என அனைத்து துறைகளிலும் எடுத்திருக்கும் சிரத்தை படத்தில் பிரதிபலிக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையைத் தழுவி, திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன். ‘ரவிக்கை சட்டை அணிய மறுக்கும் தாயார்’ என்கிற மெல்லிய கருவில், கிராமத்தின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது திரைக்கதை. அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review எடுத்த எடுப்பிலேயே ‘ரவிக்கை’தான் பிரச்னை என்று சொல்லிவிட்டாலும், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் ரசிக்கும்படியாக எழுதப்பட்டு கதையோடு நம்மைப் பயணிக்க வைக்கிறது. பால்குடி மறக்க வைக்கும் அம்மா தொடங்கி, சேலை மறைவில் இறுதிச் சடங்கு நடைபெறும் பாட்டி வரையிலும் பெண்ணின் உடல் சார்ந்த உரையாடல்களை நிறுத்தாமல் நகர்த்திச் செல்கிறது படத்தின் ஸ்டேஜிங். ஒருவரின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் மற்றவர்களுக்காக அலைக்கழிக்கும் வாழ்வின் மீது கேள்வி எழுப்பிய விதம் அட்டகாசம்! ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?! தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காத தாயின் நிழலில் தஞ்சம் கொண்ட மகனாக பரணி உடையும் இடம்... அப்போது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள்ளும் இருக்கும் கறுப்பு - வெள்ளைப் பக்கங்கள் வெளியாவதைப் படமாக்கிய விதம் போன்றவற்றால் உச்சம் தொடுகிறது மேக்கிங்! மூன்று தலைமுறை பெண்களுக்கு நடுவில் இருக்கும் இடைவெளியை ஆண் ஆதிக்கம், பாசம், காதல் ஆகிய நுண்ணிய உணர்வுகளால் நிரப்பி அதை உரையாடலுக்கும் உட்படுத்துகிறது எழுத்து. அதோடு பின்காலனியம், உலகமயமாக்கல் ஆகியவற்றைத் தாண்டி ‘விருப்பம், தேர்வு’ என்ற புள்ளியில் பிடிவாதமாக நிற்கிற பெண்ணின் குணத்தைக் கச்சிதமாகப் பதிவுசெய்திருக்கிறது திரைமொழி. அதேபோல ‘உச்சிமலை காற்று - காணாமல் போகும் மனிதர்கள்’ என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வாய்மொழிக் கதையை க்ளைமாக்ஸில் இணைத்த விதமும் அழகு! இருப்பினும் ஒரு புள்ளியில் முடிந்துவிட்ட இறுதிக் காட்சியை இத்தனை நீட்டியிருக்க வேண்டுமா என்கிற கேள்வியும், வட்டார வழக்கில் ஆங்காங்கே ஏற்படும் குழப்பங்களும் படத்தின் தன்மையைச் சிதைக்கின்றன. அங்கம்மாள் விமர்சனம் | Angammal Review புதுமையான திரைமொழி என்றாலும், தொடக்கமும் முடிவும் இல்லாத சில காட்சியமைப்புகள், முக்கியமான தருணங்களைச் சொல்லவரும் காட்சிகளை இன்னுமே அழுத்தமாகப் பதிவு செய்யாதது போன்றவை ஏமாற்றமே! குறைகள் இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாகவும், திரைக்கதையாகவும் நல்ல தரத்தில் உருவாகியிருக்கும் இந்த ‘அங்கம்மாள்’, நம் கலை ரசனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முக்கியப் படைப்பாக மனதில் வந்து அமர்கிறாள்.

BB Tamil 9: வினோத்துக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்குறதை ஏத்துக்கவே முடியாது- காட்டமான ஆதிரை
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்வதி இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் எந்த இரண்டு நபர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மேடையில் ஃபைனல் ரிசல்ட்டிற்காக நிற்பார்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது. BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா கேம்மை புரிஞ்சுகிட்டு விளையாடுற விக்கல்ஸ் விக்ரம் இருப்பாங்க என விக்ரமை கனியும், அரோராவும் சொல்கின்றனர். விக்கல்ஸ் விக்ரம் பார்வதியையும், ரம்யா பிரஜினையும் சொல்கின்றனர். அதேபோல என் கூட 20 வருஷமா இருக்கிற என்னோட கோ கன்டஸ்டன்ட் சாண்ட்ரா அந்த மேடையில இருப்பாங்க என பிரஜின் சொல்கிறார். வினோத் தவிர பார்வதி, கம்ருதீன், வியானா மூவரும் வினோத்தை சொல்கின்றனர். காமெடி பண்றாருங்கிறதுக்காக டைட்டில் வின்னர் பட்டத்தை வினோத்துக்கு கொடுக்குறதை என்னால ஏத்துக்கவே முடியாது என ஆதிரை காட்டமாக பேசுகிறார். BB Tamil 9: ``நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு'' - FJ பார்வதி மோதல்; கலவரமான பிக் பாஸ் வீடு

AVM Saravanan-ன் சாதனையும், புகழும் என்றென்றும் இந்த மண்ணுலகம் பேசும்! | Life Story |Cinema Vikatan
வசமாக சிக்கி கொண்ட போஸ், பழிவாங்க துடிக்கும் காவியா, அடுத்து என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸின் சுயரூபம் வெளியே வந்ததால் ஆத்திரம் தாங்க முடியாமல் ராஜாங்கம் அவரை அடித்தார். அதற்குப்பின் போஸுக்கு கொடுக்க வேண்டிய ஒரு கோடி ரூபாய் பணத்தை தமிழ்ச்செல்வி இடம் ராஜாங்கம் கொடுத்தார். தமிழ்ச்செல்வி, இந்த பணம் உங்களுடைய உயிருக்கு விலை கிடையாது. எனக்கு இந்த பணம் தேவையில்லை என்றார். உடனே அப்பத்தா, தமிழ்ச்செல்விக்கு வேண்டாம் என்றாலும் அவருடைய பெயரில் இந்த பணத்தை போட்டு விடுவேன். தமிழ் செல்வி அந்த பணத்தை […] The post வசமாக சிக்கி கொண்ட போஸ், பழிவாங்க துடிக்கும் காவியா, அடுத்து என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
Akhanda 2 Release: சிரமத்திற்கு மன்னிக்கவும்'' - படக்குழு கொடுத்த 'ஷாக்'; ரசிகர்கள் ஏமாற்றம்
நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் திரைப்படம் 'அகண்டா 2: தாண்டவம்'. 2021-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு. சம்யுக்தா மேனன், ஆதி ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். 'அகண்டா 2: தாண்டவம்' இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் வெளியிடப்படவில்லை. Nandamuri Balakrishna இந்நிலையில், 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் ப்ளஸ் நிறுவனம், பட வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான ட்வீட்டில், ``தவிர்க்க முடியாத காரணங்களால் அகண்டா 2 திட்டமிட்டபடி வெளியிடப்படாது என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களுக்கு ஒரு வேதனையான தருணம், மேலும் படத்திற்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு ரசிகர் மற்றும் திரைப்பட ஆர்வலருக்கும் இது ஏற்படுத்தும் ஏமாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தை விரைவில் தீர்க்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். ஏற்பட்ட சிரமத்திற்கு எங்கள் மன்னிப்பு. உங்கள் ஆதரவு எங்களுக்கு உத்வேகமளிக்கிறது. விரைவில் ஒரு நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்வோம் என உறுதியளிக்கிறோம். எனக் குறிப்பிட்டிருக்கிறது. Akhanda 2: ''தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது - சென்னையில் பாலைய்யா
சோழனை கல்யாணம் செய்து கொள்ள நினைக்கும் காயத்ரி, நிலா எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தன்னுடைய தரப்பு நியாயத்தை பாண்டியனிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வானதி அங்கு வந்து விட்டார். பின் சோழன்-காயத்ரி லவ்வை பற்றி கேட்டு வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோரும் அவரவர்கள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டிற்கு வந்த காயத்ரி நண்பர்கள், உங்களுக்கு திருமணம் ஆனதை ஏமாத்தி காதலித்தீர்களா? அவள் ரூமை விட்டு வெளியே […] The post சோழனை கல்யாணம் செய்து கொள்ள நினைக்கும் காயத்ரி, நிலா எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
“ஜன நாயகன் vs பராசக்தி”ஜன நாயகன் வெளியான சில நாட்களிலேயே 500 கோடி லாபம் தரும் : கோலிவுட் கணிப்பு..!
“ஜன நாயகன் vs பராசக்தி” ஜன நாயகன் வெளியான சில நாட்களிலேயே 500 கோடி லாபம் தரும் : கோலிவுட் கணிப்பு..! விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் பெருந்தொகைகளை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். அந்த தொகைக்கு அவர்களுக்கு லாபம் கிடைக்க ‘ஜனநாயகன்’ படம் குறைந்தது ரூ.500 கோடி வசூலிக்க வேண்டும் என கணிக்கப்படுகிறது. ரூ.500 கோடி வசூல் செய்தால் தான் விநியோகஸ்தர்களுக்கு லாபகரமான படமாக இருக்கும் என...

ரசிகர்கள் எதிர்பார்த்த பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ்..!
ரசிகர்கள் எதிர்பார்த்த பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ்..! ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப்படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதனிடையில் ஜனநாயகன் ஆடியோ லான்ச் டிசம்பர் 28-ந்தேசி மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா அப்டேடிற்காக ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர். ‘பராசக்தி’ பட ஆடியோ லான்ச்சை ஜனவரி முதல் வாரத்தில் நடத்த படக்குழுவினர்...
லோகேஷ் × அல்லு அர்ஜுன்! வெறித்தனமான கூட்டணி.. சூர்யாவை மறந்த லோகேஷ் கனகராஜ்..!
லோகேஷ் அல்லு அர்ஜுன்! வெறித்தனமான கூட்டணி.. சூர்யாவை மறந்த லோகேஷ் கனகராஜ்..! சூர்யா நடிப்பில் ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் ‘இரும்புக் கை மாயாவி’ படத்தை இயக்குவதற்கு சூழல் அமையாமல் போனது. இந்நிலையில், இதே ஸ்கிரிப்ட்டை வைத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்...
விஜயாவின் சதி வேலையை அறிந்த முத்து, அண்ணாமலை எடுக்க போகும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நீத்து,சுருதியை வெறுப்பேற்றுவதற்காகவே பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அதை பெரிதாக சுருதி எடுத்துக் கொள்ளவில்லை. ரவிக்கு அங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டு லட்சுமி, முத்துவின் வீட்டிற்கு வந்தார். ரோகினி உள்ளுக்குள் பயந்து கொண்டுதான் இருந்தார். பின் லட்சுமி, என்னுடைய மகள் இறந்து விட்டார். க்ரிஷ், முத்துவுடன் இருக்க ஆசைப்படுகிறான் என்று சொல்லி எமோஷனலாக கதைகளை சொன்னார். இதை எல்லாம் கேட்டு மீனாவிற்கு […] The post விஜயாவின் சதி வேலையை அறிந்த முத்து, அண்ணாமலை எடுக்க போகும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியை அதளபாதாளதிற்க்கு தள்ளிய சன் டிவி சீரியல்கள் –டாப் 5 லிஸ்ட் இதோ
டிஆர்பி ரேட்டிங்கில் 2025 ஆம் ஆண்டில் 47வது வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியை அதளபாதாளதிற்க்கு தள்ளிய சன் டிவி சீரியல்கள் – டாப் 5 லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .
Celebrities share their memories with AVM Saravanan at his funeral | Cinema Vikatan
AVM Saravanan: ``ஏவி.எம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி நான் - கமல் இரங்கல்
தமிழ் சினிமாவின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் இன்று இயற்கை எய்தினார். ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் ஏவி.எம் சரவணன் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஏவிஎம் சரவணன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வீடியோவில் கமல் ஹாசன் , ``திரு. ஏவி.எம் சரவணன் அவர்களுக்கும், எனக்கும் உள்ள உறவு என் அண்ணன் சந்திரஹாசன் அவர்களுக்கும், சாருஹாசன் அவர்களுக்கும், எனக்கும் உள்ள உறவு போன்றது. இந்த உறவுக்கு என்ன பொருள் சொல்வது? இவர்களுக்கு எந்த மாதிரியான மரியாதை தருவது? என்ற ஒரு குழப்பம் சிறுவயதில் ஏற்பட்டதுண்டு. நான் என் 20 வயதைத் தாண்டும்போது, இவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை என்ன என்பதை என் அடிமனது முடிவு செய்துவிட்டது. AVM: ``என் கஷ்ட காலங்களில் - ஏவிஎம் சரவணன் குறித்து கலங்கிய ரஜினி ஒரு தகப்பனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைத்தான் இவர்களுக்குத் தருவது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்படித்தான் என் மனதில் நினைத்துக் கொண்டு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். திரு. குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாகவே நான் உரிமை கொண்டாடுகிறேன். இப்படி உரிமை கொண்டாடும் நான் தனி மரம் அல்ல. ஏ.வி.எம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி. இன்று வளர்ந்து வந்திருக்கிறேன். கமல் ஹாசன் பெருங்கலைஞர்கள் விட்டுச் சென்ற அடிச்சுவட்டில் என் சிறு பாதத்தை எப்படிப் பதித்து நடக்க வேண்டும் என்று பல பெரிய ஆசான்கள் எனக்கு இந்த வளாகத்தில், இந்தத் தோப்பில் இன்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். பேர் சொல்லும் பிள்ளையாக சரவணன் ஐயா அவர்கள் இருந்திருக்கிறார்கள். அவரின் சகோதரர்களும்தான். அது போன்ற ஒரு பிள்ளையாக நானும் இருக்க ஆசைப்படுகிறேன். AVM Saravanan: முரட்டு காளை, அயன், சிவாஜி - தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய சரவணன் என் ஆசையெல்லாம் இந்தத் தோப்பின் மூன்றாம் தலைமுறை தோன்றியிருக்கிறது. அவர்களும் என்னைப் போன்ற பல செடிகளை நட்டு இந்தப் பெரும் பள்ளியின் பெயர் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். இதுதான் அண்ணாரின் மக்களாக நாம் செய்யும் கடமை என்று நான் நம்புகிறேன். மற்றபடி அந்த ஏவி.எம் வளாகமும், அங்கு வேலை செய்து ரிட்டையர் ஆனவர்களுக்கும், வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள் எல்லோருக்கும் இருக்கும் சோகம், அதில் நானும் பங்கு கொள்கிறேன். உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி : pic.twitter.com/XWNx731BJc — Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2025 வெளி உலகத்திற்கு இதுபோன்ற பின்னணி ஆளுமைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் அவரை வணங்குவதற்கான காரணம் எங்கள் வாழ்க்கையைப் பார்த்தாலே புரிந்துவிடும். முக்கியமாக எங்கள் கலை வாழ்க்கை. அவருக்கு நன்றி சொல்லும் ஒரே வழி அவர் கண்ட பாதையில் வீறுநடை போட்டு நடப்பதுதான். நன்றி ஐயா, அனைத்திற்கும் என்று தெரிவித்திருக்கிறார். AVM Saravanan: ``ஷூட்டிங் ஸ்பாட்டுல ஆர்ட்டிஸ்ட்டுகளை பாராட்ட மாட்டார் ஏன்னா... - நடிகை ராணி
Rashmika: திருமணம் பற்றிய தகவலை நான் மறுக்கவில்லை, அதே சமயம்!- ராஷ்மிகா மந்தனா
2016-ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் 'The Girlfriend' படம் வெளியாகியிருந்தது. இதனிடையே ‘கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா இருவரும் சில வருடங்களாக காதலித்து வருவதாகத் தகவல் வெளியானது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இதனை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை அதே சமயம் மறுக்கவும் இல்லை. சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் பிப்ரவரியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்திற்கு ராஷ்மிகா பேட்டி அளித்திருக்கிறார். அதில் விஜய் தேவரகொண்டா உடனான திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “திருமணம் பற்றிய தகவலை நான் இப்போது உறுதிப்படுத்தவும், மறுக்கவும் விரும்பவில்லை. அதை பற்றி பேச வேண்டிய நேரம் வந்தால் கண்டிப்பாக தெரிவிப்போம்” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், நான் விஜய் தேவரகொண்டாவிடம் வேலை விஷயமாக நிறைய பேசமாட்டேன். விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா 80 சதவிகித நேரம் வேலையைப் பற்றி நான் வீட்டில் பேச மாட்டேன். வேலை சார்ந்த ஏதாவது ஒரு விஷயம் எனக்கு மனதில் சுமையாக இருந்தால், மட்டும் ஆலோசனைக்காக விஜய் தேவரகொண்டாவிடம் கேட்பேன். நான் வேலைக்கு 100 சதவிகிதம் கொடுப்பவள், ஆனால் வீட்டில் இருக்கும்போது வேலையை பற்றி பேச மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த கோவில் கட்ட காரணம் சிம்புவா? மனம் திறந்த நடிகர் கனல் கண்ணன் –வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்தவர் கனல் கண்ணன். இவர் ஸ்டண்ட் மாஸ்டராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் வந்து கனல் கண்ணன் அசத்தியிருக்கிறார். 1991 ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன் படத்தின் மூலம் தான் சண்டை பயிற்சி இயக்குனராக தமிழ் சினிமாவில் கனல் கண்ணன் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பின்பு இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி […] The post இந்த கோவில் கட்ட காரணம் சிம்புவா? மனம் திறந்த நடிகர் கனல் கண்ணன் – வைரலாகும் வீடியோ appeared first on Tamil Behind Talkies .
சரவணனை வெளுத்து வாங்கும் பாண்டியன், சுகன்யா செய்யும் சதி வேலை –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அப்பத்தா, குமாரை திட்டி அறிவுரை சொன்னார். அதற்குப்பின் மீனாவிற்கு போன் செய்து கோமதி விசாரித்தார். அதற்குப்பின் கோமதி, அரசி இருவரும் கோயிலுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அந்த வழியாக வந்த பழனி, கோமதி இடம் பேசப்போனார். கோபத்தில் கோமதி, பழனியை மோசமாக திட்டினார். இருந்தாலுமே பழனி, தன் தரப்பு நியாயத்தை சொல்லி புரிய வைக்க பார்த்தார். ஆனால், கோமதி கேட்கவே இல்லை திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். கதிர்-ராஜி பேசிக் […] The post சரவணனை வெளுத்து வாங்கும் பாண்டியன், சுகன்யா செய்யும் சதி வேலை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
AVM Saravanan: ``ஷூட்டிங் ஸ்பாட்டுல ஆர்ட்டிஸ்ட்டுகளை பாராட்ட மாட்டார் ஏன்னா... - நடிகை ராணி
சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களையும் தயாரித்திருக்கிறது ஏவிஎம் நிறுவ்னம். 'சொர்க்கம்', 'ஆசை' உள்ளிட்ட ஏவிஎம் தயாரித்த பல தொடர்களில் நடித்த நடிகை ராணியிடம் பேசினோம். ''டிவி நடிகர் நடிகைகளுக்கு வேலை தரணும்கிற நோக்கத்துலதான் சீரியல் தயாரிப்புல ஏவிஎம் நிறுவனம் இறங்குனதா என் அப்பா சொல்வார். ஷூட்டிங் ஷெட்யூல், சம்பளம் எல்லாமே அவ்வளவு ஒரு புரஃபஷனலா இருக்கும். ராணி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்பவாவது திடீர்னு வந்துட்டுப் போவார். ஒரு ஆர்ட்டிஸ்ட்டை பாராட்டணும்னாகூட ஷூட்டிங் ஸ்பாட்டுல பார்க்குற இடத்துல அதைச் செய்ய மாட்டார். அப்படி பண்றது தப்புன்னு சொல்வார். ஆபீஸுக்கு கூப்பிட்டு விட்டுதான் 'நல்லா பண்றீங்க'னு சொல்லி பாராட்டுவார். சம்பள விஷயத்துல யாருக்கும் எந்தவொரு பிரச்னையும் இருக்காது. ஏவிஎம் நிறுவனத்துல ஒர்க் பண்றோம்னா பேங்க் லோன் உடனே கிடைக்கும். அதேபோல ஏவிஎம் மெகா சீரியல்னா 15 நாள் வேலை கியாரண்டி. இன்னைக்கு மாதிரி சூழல் கிடையாது. அவரும் ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன் உட்பட எல்லார் மீதும் அக்கறையா இருப்பார். யூனிட்டும் படு நேர்த்தியா இருக்கும். சரவணன் என்னைப் பொறுத்தவரை அம்மா வீடுனனு சொல்வேன். ஒரு குழந்தைக்கு சாப்பாடு தர்றது அம்மாதானே. ஏவிஎம் தயாரிச்ச முக்கால்வாசி தொடர்கள்ல எனக்கு கேரக்டர் தந்திடுவாங்க. அதனாலதான் அம்மா வீடுன்னு சொல்றேன். அவரோட நாலஞ்சு தடவைதான் பேசியிருப்பேன். நான் இன்டஸ்ட்ரியில பார்த்தவங்கள்ல அவ்வளவு ஒரு மேன்மையான மனுஷன். அவங்க சீரியல் தயாரிப்புல இருந்து ஒதுங்கினாங்கன்னு கேள்விப்பட்டப்போ எனக்கு அவ்வளவு வருத்தமா இருந்தது. சரவணன் சார் அவருடைய அப்பாவுக்குப் பிறகு தொழிலை எப்படிக் கட்டிக் காத்தாரோ அதேபோல அவருடைய பிள்ளைகளும் பண்ணியிருக்கலாம். அந்த ஸ்டூடியோ வேறு வேறு இடங்களா மாறுகிற காட்சிகளைப் பார்க்குறப்ப அவ்வளவு பாரமா இருக்கு மனசு'' என்கிறார் இவர்.

சோழனை கதிகலங்க வைக்க நிலா சொன்ன விஷயம், காயத்ரி நிலை என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், சோழன் செய்தது தவறு தான். நீ எதையும் யோசிக்காதே என்றெல்லாம் அறிவுரை சொல்லி அந்த பெண்ணை அனுப்பி வைத்தார். பின் இந்த விஷயத்தை எல்லாம் பல்லவன் நிலாவிற்கு போன் செய்து சொன்னார். கோபத்தில் நிலா, தேவையில்லாத வேலை செய்தால் அனுபவித்து தான் ஆகணும். சோழன் அவஸ்தைப்படட்டும் என்று திட்டி போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி இருவரும் போனில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானதி […] The post சோழனை கதிகலங்க வைக்க நிலா சொன்ன விஷயம், காயத்ரி நிலை என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
AVM Saravanan மறைவு : அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இறுதி அஞ்சலி
AVM Saravanan: முரட்டு காளை, அயன், சிவாஜி - தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய சரவணன்
முதுபெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இயற்கை எய்தியிருக்கிறார். தந்தை ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை அடுத்தடுத்த உயரங்களுக்குக் எடுத்துச்சென்ற பெருமை ஏ.வி.எம். சரவணனுக்கு உண்டு. தந்தை தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை ஸ்டுடியோவாக அடுத்த கட்டங்களுக்கு வளர்த்தெடுத்த புகழும் சரவணனையே சேரும். எப்போதும் நிற்காமல் சுற்றும் உருண்டை வடிவ ஏ.வி.எம். க்ளோப், பரப்பான சினிமா வேலைகள் நடக்கும் ஷூட்டிங் ஃப்ளோர் என இவருடைய காலத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோ ஆற்காடு சாலையின் அடையாளமாகவும் திகழ்ந்தது. சிறுவயதில் டி.வியில் படம் பார்த்த பலராலும் ஏ.வி.எம். க்ளோப்பை மறக்கமுடியாது. ஏ.வி.எம் சரவணன் சினிமாவில் உருவான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என உணர்ந்து தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியவர் சரவணன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் எனத் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் தொடங்கி ஏ.வி.எம். தயாரிப்பில் பணியாற்றிய பலரும் சரவணனின் பண்பு குறித்து அவ்வளவு மெச்சிப் பேசுவார்கள். ஒரு திரைப்படத்தின் உதவி இயக்குநர் தொடங்கிக் கடைக்கோடி ஊழியர் வரைக்கும் சமமான மரியாதையைக் கொடுக்க விரும்புவாராம் சரவணன். மெல்லிய தேகம், வெள்ளை நிற உடை, கட்டிய கைகள்தான் சரவணனின் அடையாளம். புதுமுக இயக்குநரோ, சீனியர் இயக்குநரோ, யார் வந்தாலும் கட்டிய கைகளை அவிழ்க்கவே மாட்டார். இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது “நம்மைச் சந்திக்கப் பெரிய ஆட்களும், சிறிய ஆட்களும் வருவார்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சிறியவர்களின் முன்னால் நாம் மமதையாகத் தெரிந்துவிடக் கூடாது” எனக் கூறி வியக்க வைத்திருக்கிறார். ஏ.வி.எம் சரவணன் தந்தை சொன்ன எல்லையைத் தாண்டவே மாட்டார் சரவணன். “அப்புச்சி சொல்றதை நாங்க மீறிச் செய்ய மாட்டோம். அப்புச்சி அதை அப்படிச் செய்யச் சொல்லியிருக்கார்” என ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் இருந்தவரை அவர் பேச்சை இவர் மீறியது கிடையாதாம். தொடர்ந்த சில திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் சில காலம் தயாரிப்பிலிருந்து விலகி இருக்கலாம் என அறிவுரை சொல்லியிருக்கிறார் மெய்யப்ப செட்டியார். அதனையே சரவணனும் பின்பற்றினார். பிறகு, மீண்டும் தயாரிப்பின் பக்கம் முடிவு செய்த ஏ.வி.எம். நிறுவனம் இரண்டு படங்களை கமிட் செய்தது. அந்த இரண்டு படங்களுக்குமே கமல்தான் கதாநாயகன். ஆனால், அப்போது இயக்குநர்களின் கமிட்மென்ட் காரணங்களால் தாமதமாகிக்கொண்டே சென்றது. அந்த நேரத்தில் சரவணன், பஞ்சு அருணாச்சலம் மூலமாக ரஜினியின் கால்ஷீட் பெற முயற்சித்திருக்கிறார்.தனக்கு முதல் வாய்ப்புக் கொடுத்த நிறுவனம் என்னும் நன்றியுணர்விற்காகத் தன்னிடம் இருந்த ரஜினி கால்ஷீட்டை அவர் ஏ.வி.எம். நிறுவனத்திற்கு விட்டுக்கொடுத்தார். அப்படித்தான் ஏ.வி.எம். தயாரிப்பில் ‘முரட்டுக் காளை’ திரைப்படம் நிகழ்ந்தது. ஏ.வி.எம். - ரஜினி ஹிட் வரிசைக்குத் தொடக்கமிட்டதும் இத்திரைப்படம்தான். பஞ்சு அருணாச்சலத்திடம் சரவணன் ரஜினியின் கால்ஷீட் கேட்டதற்குப் பின்னால் பெரிய கதை இருக்கிறது. சரவணன், ஏ.வி.எம். நிறுவனத்தின் புகழை உயரப் பறக்க வைக்கவேண்டும் என விரும்பினார். மீண்டும் தயாரிப்புப் பக்கம் உறுதிப்பாட்டுடன் அடுத்தடுத்துத் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த ஆசைகள் தாமதமாகிக்கொண்டே போனது. அப்படியான வேளையில் சரவணனுக்குள் ஒரு பயமும் எழுந்தது. ஏ.வி.எம் சரவணன் அந்தச் சூழலை ஒருமுறை விளக்கியவர், “ரொம்ப நாளைக்குப் பிறகு இண்டஸ்ட்ரி நல்லா இருக்கு. நாம திரும்பவும் படம் எடுக்கலாம்’ங்கிற எண்ணத்துக்கு அப்புச்சி வந்தாங்க. ஆனா, கமிட் பண்ணின அந்த இரண்டு படங்களும் தள்ளிப்போகுது. இப்ப ரஜினியும் ‘அடுத்த வருஷம் கால்ஷீட் தர்றேன்’னு சொன்ன விஷயத்தை அப்புச்சிகிட்ட சொன்னா, அவர் மூட் அவுட் ஆகி, ‘நமக்கும் படம் எடுக்கிறதுக்கும் ராசி இல்லைபோல. நல்லா வசதியா இருக்கோம். போதும், நீங்க பேசாம ஸ்டுடியோவை மட்டும் கவனிச்சுக்கங்க’னு சொல்லிட்டார்னா எந்தக் காலத்துலயும் இனி நாங்க படம் எடுக்க முடியாது. ஏன்னா, அப்புச்சி பேச்சை நாங்க தட்ட மாட்டோம்னு உங்களுக்கே தெரியும்!” எனச் சொல்லியிருக்கிறார். தந்தை முடிவை மாற்றவிடக்கூடாது என்ற யோசனையில்தான் பஞ்சு அருணாச்சலத்திடம் வெளிப்படையாகவே ரஜினி கால்ஷீட்டை விட்டுத் தரக் கேட்டிருக்கிறார். சரவணனின் தாத்தா அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் பல்பொருள் அங்காடியை வைத்திருக்கிறார். தாத்தாவின் ஐடியாவைத்தான் சரவணனும் பிற்காலத்தில் பின்பற்றினார். ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து வகையான உணர்வுகளையும் சரவணன் தயாரித்த படைப்புகள் உள்ளடக்கியது. சரவணனின் சரியான திட்டமிடல்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நிறுவனத்தை மெருகேற்றியது எனக் கோலோச்சத் தொடங்கியது ஏ.வி.எம். நிறுவனம். அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் கால்ஷீட்கள் அனைத்துமே ஏ.வி.எம். நிறுவனத்தின் கைகளில் இருக்கும். Rajini - AVM Saravan காலமாற்றத்திற்கேற்ப வித்தியாசமானப் படங்களையும், மக்களின் ரசனைகளுக்கேற்ப புதிய வகையான படைப்புகளைத் தந்துவிட யோசித்துத்தான் சரவணன் ஷங்கர் - ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்திற்காக இணைந்தார். அப்படத்தை அத்தனை பிரமாண்டமாக எடுக்க முடிந்ததற்கும் காரணம் சரவணன்தான். கட்டிங் எட்ஜ் கிராபிக்ஸ், ARRI கேமிராக்கள், ‘வாஜி வாஜி’ பாடலுக்கான பிரமாண்ட செட் என 'சிவாஜி'-யில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்க வைத்தவர் சரவணன். - தமிழ் சினிமாவில் அவர் பெயர் ஆழப்பதிந்திருக்கும்!
AVM Saravanan: அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்- கண்ணீரில் சிவகுமார்
ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே கிடையாது. சிவாஜி, கமல்ஹாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நான் உட்பட பல பேரை ஏ.வி.எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த நிறுவனத்தில் நடிக்காத நடிகர்களே கிடையாது. இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். ஏ.வி.எம் சரவணன் 1965-ல் என்னை இந்த நிறுவனம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது. என்னுடைய சொந்தபெயர் பழனிசாமி. இந்தப் பெயரை சிவகுமார் என்று மாற்றி வைத்தவர் ஏ.வி.எம் சரவணன் சார்தான். அவரின் நியாபக அர்த்தமாகத்தான் சூர்யாவிற்கு சரவணன் என்று பெயர் வைத்தேன். என்னுடைய முதல் படத்தில் நான் நடித்த சில காட்சிகளை எடுத்துவிட்டார்கள். அதனால் நான் அழுதேன். அப்போது சரவணன் சார் என்னிடம் மன்னித்து விடுங்கள் சிவகுமார். சீக்கிரமே உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுப்போம் என்று சொன்னார். அதன்பிறகு 'உயர்ந்த மனிதன்' என்ற ஒரு படத்தில் நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. என்னுடைய அடுத்த தலைமுறையில் சூர்யாவிற்கு 'பேரழகன்', 'அயன்' படங்களைக் கொடுத்தார்கள். சிவகுமார் - சூர்யா இரண்டுமே வெற்றி படங்கள். சூர்யா வாழ்வில் மறக்கமுடியாத இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எனது முதல் படத்தின் சம்பளம் 1000 ரூபாய். ஆனால் சூர்யாவிற்கு அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் பல ஹிட்டான படங்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். 88 வருட வாழ்க்கையை சரவணன் சார் நிறைவாக வாழ்ந்துவிட்டு இறந்திருக்கிறார். அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். AVM Saravanan: 66 ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார்- இயக்குநர் வசந்த்

BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன்
சினிமா கேரக்டர்களைத் தந்து ‘இதையாவது ஒழுங்கா பண்ணுங்க’ என்றால் அதிலும் ஒரே சண்டை போட்டு நாறடிக்கிறார்கள். அரோரா கூட இருக்கும் வரைக்கும் கொஞ்சம் திருந்தி வாழ்ந்த கம்ருதீன், பாருவுடன் முழுதாக இணைந்த பிறகு நச்சு பரவி மீண்டும் ரவுடி அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த வாரத்தில் ரெட் கார்டு கொடுத்து அவரை அனுப்பினாலும் தவறில்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 59 ‘நெக்லஸை எடுத்து தரேன்’ என்று வினோத்தும் பிரஜனும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். மேஜர் சுந்தர்ராஜன் பாத்திரத்தைத்தான் பிரஜன் செய்கிறார் என்பது காலை எக்கி எக்கி பேசுவதில் இருந்து தாமதமாகத்தான் உணர முடிந்தது. அவரது உருவத்திற்கு கெட்டப் பொருந்தவில்லை. நாகேஷ் இன்ஸ்பெக்டர் ரோலில் இருப்பது போல. திருமதி. சக்திவேல் கம்ருதீன் என்கிற பெயரை வைத்துக் கொண்டிருக்கிற பாரு, கேரக்டருடன் மிகவும் ஒன்றி விட்டார் போலிருக்கிறது. கம்முவிற்கு கழுத்து மசாஜ் செய்து ரொமான்ஸ் கொண்டிருந்த பாருவைப் பார்க்க தம்பதிகள் மாதிரியே இருந்தது. இவர்களின் உல்லாச நேரத்தைப் பயன்படுத்தி நெக்லஸ் திருட வந்த சுபிக்ஷா, சபரி முழித்துக் கொண்டவுடன் விலகி விட்டார். போர்வையை முழுக்க போர்த்திக் கொண்டு பாத்ரூம் பக்கம் சென்றிருந்த பெண்களை வினோத் பயமுறுத்திக் கொண்டிருந்தார். அவர் அத்தனை சிரமப்பட தேவையேயில்லை. அந்த விக்கை போட்டுக் கொண்டு அப்படியே சென்றிருந்தால் கூட போதும். ‘வீல்’ என்று அலறிய அரோராவும் சுபிக்ஷாவும் ‘ஏன் இப்படி பயமுறுத்தறீங்க. டாஸ்க்தான்னாலும் இதெல்லாம் நல்லாவேயில்லை’ என்று ஆட்சேபித்தார்கள். மல்லுக்கட்டிய சுபிக்ஷா நாற்காலிக்காக சண்டை போட்ட சான்ட்ரா சான்ட்ரா வருங்காலத்தில் அரசியல்வாதியாக வருவார் போலிருக்கிறது. அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் வந்து அமர்ந்த சுபிக்ஷாவிடம் “இது நான் உக்காந்த சேர். எழுந்திரு” என்று அடம் பிடித்தார். “வேற சோ் எடுத்துக்கங்களேன்’ என்றும் கேட்காமல் சுபிக்ஷாவின் மடியிலேயே அமர்ந்து அழும்பு செய்ய இருவருக்கும் மோதல். “அடிக்கறாங்கப்பா” என்று கதறினார் சுபிக்ஷா. இது தொடர்பாக பிரஜனுக்கும் சான்ட்ராவிற்கும் கூட சிறிய சண்டை. இருவரும் உண்மையாகவே மனவருத்தத்தில் விலகியிருக்கிறார்களா, அல்லது ‘ஒண்ணா ஆடறாங்க’ என்கிற புகாரை உடைத்தெறிவதற்காக இப்படி பிளான் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. சான்ட்ரா செய்த அலப்பறையால் சுபிக்ஷா அழ ‘என் குழந்தையை அடிச்சீங்களாமே?’ என்று சப்போர்ட்டிற்கு வந்தார் கனி. இந்தச் சண்டை அப்படியே வளர்ந்து ஆதிரைக்கும் வினோத்திற்குமாக மாறியது. “ஏன் அப்படி பயமுறுத்தினீங்க?” என்று ஆதிரை கேட்க “யாரை ஏய்ன்னு சொல்ற.. ஏய்.. ஏய்..” என்று வினோத் AI மோடில் கத்த “வாட்டர் மெலன் வெளியே போனதுக்கு நீங்கதான் காரணம்” என்று ஆதிரை புகார் சொல்ல “அதுக்கு அவர்தான் காரணம். உன்னால எத்தனை போ் போனாங்க தெரியுமா.. அதனாலதான் உன்னை மக்கள் வெளியே அனுப்பினாங்க” என்று வினோத்தும் மல்லுக்கட்ட, அன்றைய தினம் சண்டையுடன் சுபமாக ஆரம்பித்தது. ஆதிரையை வினோத் ஒருமையிலும் அவமரியாதையாகவும் பேசியதால் ஆதிரைக்கு ஆதரவாக திவ்யா பேசியது நன்று. “இப்படி கத்தினாதான் அவங்க எழுந்து உள்ளே போவாங்க. நாம நெக்லஸ எடுக்கலாம். அதனாலதான் அப்படி பண்ணேன்” என்று சான்ட்ராவிடம் பிறகு சமாளித்துக் கொண்டிருந்தார் வினோத். ‘எங்க கிட்ட வேஸ்ட்டா கிரியேட்டிவிட்டி எதிர்பார்க்கறீங்களே பிக் பாஸ்’ - விக்ரம் சுயபகடி நாள் 59. “கிச்சன் டீம்ல இருக்கறவங்களே பாத்திரம் கழுவும் வேலையையும் செய்யறாங்க.. நீங்க போய் செய்யலாமில்ல” என்று சான்ட்ராவை வம்புக்கு இழுத்தார் விக்ரம். “நான் நேத்தே என் வேலையை முடிச்சிட்டேன், உங்க வேலையைப் பாருங்க” என்று சான்ட்ரா பதில் சொல்ல இருவருக்கும் மோதல். இன்ஸ்பெக்டர் பிரஜன் இதை தட்டிக் கேட்காமல் சும்மா இருந்ததால் “ஏன்யா போலீஸூ.. பார்த்துட்டுதானே இருக்கே. தொட்டிலையும் ஆட்டிட்டு பிள்ளையும் கிள்ளி விடறே. எரியற நெருப்புல எண்ணைய்ய ஊத்தறே” என்று சான்ட்ரா கோபிக்க, “நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது மேடம். என்னை உள்ளே இழுக்காதீங்க” என்று பிரஜன் எஸ்கேப் ஆக, சான்ட்ரா கண்கலங்கினார். இப்படி கச்சா முச்சா என்று சண்டையுடன் டாஸ்க் நகர்வதால் “நாங்க பாட்டுக்கு ஷூட்டிங் போயிட்டு பேட்டா வாங்கிட்டு காலத்தைக் கழி்ச்சிட்டு இருந்தோம். எங்களை கூப்பிட்டு வந்து கிரியேட்டிவ்வா டாஸ்க் பண்ணச் சொல்றீங்க.. நாங்க என்ன வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்.. அதெல்லாம் வராது பிக் பாஸ்.. இப்படி அப்பிராணியா இருக்கீங்களே” என்று தனிமையில் புலம்புவதின் மூலம் சிரிக்க வைத்தார் விக்ரம். டாஸ்க்கை இவர்கள் மொக்கையாக கொண்டு செல்வது பிக் பாஸிற்கும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே சபையைக் கூப்பிட்டு “டாஸ்க்ல இருந்து வெளியே வந்து ஹவுஸ்மேட்ஸா மாறுங்க.. ஸாரி.. ஏற்கெனவே பாதி போ் அப்படித்தான் இருக்கீங்க” என்று ஆரம்பத்திலேயே ஊமைக்குத்தாக குத்தினார். ஹவுஸ்மேட்ஸ்களிடம் உக்கிரத்துடன் பேசிய பிக் பாஸ் பிறகு நேரடியாக கடப்பாறைக் குத்துகள் இறங்கின. ‘ஒரு டாஸ்க் லெட்டரை கொடுத்து படிக்கச் சொல்லி ரெண்டு மணி நேரம் ஆச்சு.. உங்களுக்காக நாங்க நேரம் செலவு செஞ்சு கேரக்டர்கள் தந்து, அதுக்கு டிரஸ் எல்லாம் தைச்சு.. கொடுத்தா.. ஒரு உபயோகமும் இல்லை. வழக்கமா போடற சண்டையைத்தான் போடறீங்க.. சிம்ப்லி வேஸ்ட். .. “... இங்க இருக்கவங்கள்ல சில போ் ஆக்டர்ஸ்.. சில போ் அதற்கு முயற்சி செய்யறவங்க.. உங்களுக்காக ஒரு மேடை அமைச்சுக் கொடுத்தா அதை பயன்படுத்திக்க தெரியல. I don't see any fire. உங்களுக்காக சேது கிட்ட பேசி சப்போர்ட் பண்ணி சத்தியம் பண்ணி நான் அசிங்கப்பட்டதுதான் மிச்சம்… “... இனிமே டாஸ்க் நடுவுல பஸ்ஸர் அடிக்கும். கேரக்டர்ல இருந்து வெளியே வர்றவங்க போட்டில இருந்து வெளியேத்தப்படுவாங்க.. இதையெல்லாம் நான் செய்யக்கூடாது. ஆனா செய்ய வெச்சிட்டீங்க.. வினோத்.. ஆரம்பம்லாம் நல்லாத்தானே இருந்தது.. என்ன ஆச்சு.. இதை நான் எந்த சீசன்லயும் சொன்னது கிடையாது. I disown each and everyone of you. இதை நீங்கதான் இனி சம்பாதிக்கணும். Earn it” என்று கோபமாக சொல்லி விட்டு விலகினார் பிக் பாஸ். சுபிக்ஷா அழ, விக்ரம் கண் கலங்கி நீர் கசிய, மற்றவர்கள் மௌனமாக தலைகுனிந்திருந்தனர். “பேய் மாதிரி பயமுறுத்தியது தப்பா போயிடுச்சு. நைட்டு சரியா தூங்கலை பாஸ். அதான்” என்று மன்னிப்பு கேட்டார் வினோத். “உங்க பேரை காப்பாத்தலை. மன்னிச்சிடுங்க பிக் பாஸ்” என்று இன்னொரு மூலையில் அழுது கொண்டிருந்தார் ரம்யா. டாஸ்க் லெட்டருக்காக கன்ஃபெஷன் ரூமிற்குச் சென்ற கம்ருதீன், சும்மா திரும்பி வராமல் “பாஸ்.. நான் பண்றது ஓகேவா.. ஏதாவது மாத்திக்கணுமா?” என்று ஒழுங்குப் பிள்ளை போல கேட்க “உன்னையே மாத்த வேண்டியதுதான்’ என்று மைண்ட் வாய்ஸிற்குள் அலறினாரோ, என்னமோ “எனக்குத் தெரியாது. உங்களுக்கும் எனக்கும் பர்சனலா ஒண்ணும் கிடையாது” என்று சொல்லி வெளியே துரத்தினார். கலவரம் ஆரம்பம் நெக்லஸை கைப்பற்றிய ரெட்ரோ சினிமா அணி அனைத்தையும் துடைத்துக் கொண்டு வெளியே வந்த கம்மு. டாஸ்க் லெட்டரை உற்சாகமாக வாசிக்க ஆரம்பித்தார். (எப்புட்றா!.. பாரு சகவாசம்!) ‘மாத்தி.. மாத்தி.. மாத்தி’ என்கிற விளையாட்டு டாஸ்க். முட்டையும் பந்தையும் போட்டியாளர் கையில் வைத்திருக்க வேண்டும். பிக் பாஸ் எதைச் சொல்கிறாரோ அந்தப் பொருளை தூக்கிப் போட்டு பிடிக்க வேண்டும். மாற்றிப் போட்டு பிடித்தால் அவுட். இன்னொரு விளையாட்டில் கையில் லாலிபாப்பும் சோப்பும் தரப்படும். பிக் பாஸ் lick என்று சொல்லும் போது லாலிபாப்பை சுவைக்க வேண்டும். ‘Smell என்றால் சோப்பை நுகர வேண்டும். (நல்ல வேளை இதை தமிழில் சொல்லியிருந்தால் கந்தரகோளமாகியிருக்கும்!) இந்த ஆட்டத்தில் ரெட்ரோ அணி வெற்றி பெற்று 5 புள்ளிகள் பெற்றது. ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் நடந்து கொண்டிருந்த இந்த டாஸ்க் முடியும் சமயத்தில் பிரஜனும் சுபிக்ஷாவும் விரைவாக ஓடி லிவ்விங் ரூமிற்கு வந்தார்கள். மற்றவர்கள் வெளியே வராதபடி விக்ரம் கதவைப் பிடித்துக் கொண்டார். இதை முன்பே பிளான் செய்திருப்பார்கள் போல. எதிரணியின் நெக்லஸை திருடிய பிரஜன், போக்கு காட்டி பாத்ரூம் ஏரியாவில் ஒளித்து வைத்தார். பின்னாலேயே ஓடிவந்த சபரியும் வினோத்தும் சோதனை போட்டும் கிடைக்கவில்லை. பதிலுக்கு பழிவாங்க நினைத்த சபரி, சுபிக்ஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெக்லஸை எடுத்து போங்காட்டம் ஆடினார். “என் கண் முன்னாடியே எடுத்தாரு” என்று ஆட்சேபம் செய்தார் சுபிக்ஷா. கதவை அடைத்து நின்றதால் வினோத்திற்கும் விக்ரமிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பஞ்சாயத்து கூடியது. “அவங்க நெக்லஸ் எடுத்த விதம் சரியில்ல. அப்படின்னா நாங்க செஞ்சதும் கரெக்ட்டுதான். பிக் பாஸ் தப்புன்னு சொன்னா நெக்லஸை திருப்பித் தந்துடறோம்” என்று ரம்யா சொன்னார். ரணகளமாக நடந்த பஞ்சாயத்து - முரட்டுத்தனம் காட்டிய கம்ருதீன் வீட்டு தல பேசிக் கொண்டிருக்கும் போது அதை மதிக்காமல் தன் குரலை ஓங்கி உரக்கச் செய்வதுதான் பாருவின் வழக்கமான ஸ்டைல். இந்தச் சமயத்திலும் அவர் அது போல் எதையோ கத்திக் கொண்டிருக்க “சும்மா இருங்க பாரு.. உங்க பாயிண்ட்டைத்தான் பேசிட்டு இருக்கேன்” என்று ரம்யா பதிலுக்கு கத்த, பதிலுக்கு பாருவும் கத்த வீடு வழக்கம் போல் சந்தைக்கடையாக மாறியது. பாருவிற்கு ஒரு பிரச்சினை என்றவுடன் அவரது பாதுகாவலரான கம்ருதீனும் எழுந்து கத்த “உக்காரு கம்ருதீன்” என்று ரம்யா சொல்ல, இருவருக்கும் சண்டை மூண்டது. ‘போடா.. போடி’ என்று ஏகவசனத்தில் பேசிக் கொண்டார்கள். பாருவின் அட்ராசிட்டியைத் தாங்க முடியாத ரம்யா, ஒரு கட்டத்தில் ‘எதிர் டீம் முன்னாடியே என்னை அசிங்கப்படுத்தறீங்களா.? கால்ல வேணா விழறேன்’ என்று எரிச்சலோடு பாருவின் காலில் விழுந்து விட்டு பிறகு அழுது கொண்டிருந்தார். வீட்டு தல ரம்யாவை, கம்ருதீன் அவமரியாதையாக பேசியதால், திவ்யா எழுந்து வந்தார். ‘தல பேசும் போது மதிக்க மாட்டீங்களா..?” என்று பொதுவாக கேட்க, அதை தனக்கானதாக எடுத்துக் கொண்ட கம்ருதீன் “அவளை இதுல வர வேணாம்ன்னு சொல்லுங்க..” என்று ஆட்சேபிக்க திவ்யாவிற்கும் கம்ருதீனுக்கும் பயங்கர சண்டை ஆரம்பித்தது. “நீ வெளியே கிளம்பு.. நீ கிளம்பு” என்று இருவரும் மோதிக் கொள்ள, எரிச்சல் தாங்காமல் கையில் இருக்கும் பொருளை தூக்கி எறிந்தார் திவ்யா “என்னை அடிக்க வரா.. பாத்தீங்களா?” என்று உக்கிரமான கம்ருதீன் ஆபாச வார்த்தைகளை இறைத்தார். “வார்த்தைகளை விடாத கம்ருதீன்” என்று பிரஜன் தடுத்தாலும் கம்மு அடங்கவில்லை. கூட இருந்து பாரு, கம்முவை தள்ளிக் கொண்டு செல்ல “பாரு.. நீயும் ஒரு பொண்ணுதானே.. இதைக் கேட்க மாட்டியா?” என்று திவ்யா பொங்க “அது வந்து.. நானும் சொல்லிட்டுதான் இருக்கேன்” என்று பம்மினார் பாரு. “அவங்க ரெண்டு பேரும் பண்ணதுக்கு வீக்கெண்டுல கிடைக்கும். நீங்க அமைதியா இருங்க” என்று திவ்யாவை சமாதானப்படுத்தினார் எஃப்ஜே. கம்ருதீன் செய்யும் அட்ராசிட்டி பற்றி வெளியில் பேசிக் கொண்டிருந்தார்கள். “இந்த வாரம் வீக்கெண்ட்ல கம்ருதீன் நல்லா வாங்கி கட்டிக்கப் போறான். அந்த அளவுக்கு வார்த்தையை விட்டிருக்கான்” என்றார் பிரஜன். (இவரே முன்னர் அப்படி அடி வாங்கியவர்தானே?!) “கெமியைக் கூட அடிக்கப் போயிருக்கான். என்னையும் அடிக்க வந்திருக்கான்” என்று பொங்கினார் ஆதிரை. ஆக.. பிக் பாஸ் கழுவி கழுவி ஊற்றியும் கூட, ஒரு FUN TASK-ஐ மீண்டும் மீண்டும் சண்டை போட்டு சந்தைக்கடையாக மாற்றிய பெருமை போட்டியாளர்களைச் சாரும். ‘அகங்காரம்’ என்பதைக் கழற்றி வைக்காமல் மனித குலத்தில் சமாதானம் ஒன்று வரவே சாத்தியமில்லை.!

Rajinikanth: சினிமாவை உயிரா நேசிச்சாரு | AVM Saravanan | Cinema Vikatan
விஜயாவின் கேவலமான புத்தியால் கிரிஷை கடத்திய சிந்தாமணி, காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, ஐடியா நன்றாக இருக்கிறது. நான் கிரிஷ் உடைய அம்மா இறந்து விட்டார்ன்னு சொல்கிறேன் என்றார். மீனா, ரோகிணியை பார்த்து முறைத்தார். இன்னொரு பக்கம் சுருதியை வெறுப்பேற்றுவதற்காக நீத்து ரவியை அழைத்துக் கொண்டு சுருதி ரெஸ்டாரண்டுக்கு போனார்கள். அப்போது நீத்து, ரவியை கட்டிப்பிடித்து உங்களால்தான் காம்பெடிஷனில் செலக்ட் ஆகி இருக்கிறேன். ரொம்ப நன்றி என்றெல்லாம் சுருதியை வெறுப்பேற்றும்படி பேசிக் கொண்டிருந்தார். ஆனால், ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. நீத்து,சுருதியை வெறுப்பேற்றுவதற்காகவே […] The post விஜயாவின் கேவலமான புத்தியால் கிரிஷை கடத்திய சிந்தாமணி, காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
AVM Saravanan: தாணு மாதிரியானவங்க தான் தாக்குப்பிடிச்சு படம் எடுக்குறாங்கன்னு சொன்னாரு- வைகோ
ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். குடும்பப்பாங்கான படங்களுக்கு ஏவிஎம் நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்தது. அப்படி எடுத்த படங்களிலேயே புகழைக் குவித்த படம் 'அன்பே வா'. ஆங்கில படம் ஒன்றின் உட்கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களும், சரோஜா தேவி அவர்களும், நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களும் அந்தப்படத்தில் நடித்திருப்பார்கள். ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ இதில் ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 'அன்பே வா' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் 7,8 இடங்களில் சண்டை காட்சிகள் வரும். வாள்வீச்சு, கத்திச் சண்டை என எல்லாம் டூப் போடாமல் அவரே நடித்திருப்பார். ஆனால் இப்போதெல்லாம் சண்டைக் காட்சிகள் அப்படி இருப்பதில்லை. கொடூரமாகக் கொலை செய்கிறார்கள். துண்டு துண்டாக வெட்டி எறிகிறார்கள். எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திலும் ரத்தம் சிந்திய காட்சியே இருக்காது. ஒரே ஒரு படத்தை தவிர அது 'மதுரை வீரன்' படம். அவரது படத்தில் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். அந்தவகையில் ஏவிஎம் ஸ்டுடியோ தயாரிப்பில் வெளியான 'அன்பே வா' படத்தில் சண்டைக் காட்சிகள் அற்புதமாக இருக்கும். இசை ரசிக்கும்படியாக இருக்கும். ஏ.வி.எம் சரவணன் ஏ.வி.எம் குடும்பத்தில் நான் சரவணனிடம் தான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். கலைப்புலி தாணு மாதிரியான ஆட்கள்தான் தாக்குப்பிடித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் இப்போது அதிகமாகப் படம் எடுப்பதில்லை என்று என்னிடம் சரவணன் சொன்னார். நூறாண்டு வாழ வேண்டும் என்று விரும்பினார். அவரை மரணம் என்ற கழுகு கொத்திக்கொண்டு போய்விட்டது. ஏவிஎம் புகழ் கலைத்துறை இருக்கும் வரை நிலைத்திருக்கும் என்று பேசியிருக்கிறார்.
“அகண்டா 2: தாண்டவம்”நந்தமூரி பாலகிருஷ்ணா தமிழ் பத்திரிக்கையாளர் சந்தித்தார்!
“அகண்டா 2: தாண்டவம்” நந்தமூரி பாலகிருஷ்ணா தமிழ் பத்திரிக்கையாளர் சந்தித்தார்! தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.., நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது.., ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க...
காவ்யா வைத்த ஆப்பால் ஆடிப்போன ஈஸ்வரி, போஸின் நிலைமை என்ன? பரபரப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, உண்மையை சொல் போஸ் என்றார். போஸ், நான் தான் மருந்து கொண்டு வந்தேன் என்று மீண்டும் மீண்டும் பொய் சொன்னார். வலி தாங்க முடியாமல் ஈஸ்வரி, சேது சொன்னது தான் உண்மை. போஸ் மருந்து கொண்டு வரவில்லை. தமிழ்செல்வி தான் கொண்டு வந்தார் என்று எல்லா உண்மையும் சொல்லிவிட்டார். வலி தாங்க முடியாமல் போஸ் உண்மையை ஒத்துக் கொண்டார். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் […] The post காவ்யா வைத்த ஆப்பால் ஆடிப்போன ஈஸ்வரி, போஸின் நிலைமை என்ன? பரபரப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

24 C