SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

Hockey Men's Junior WC: திக் திக் கடைசி நிமிடங்கள்; பெல்ஜியமை வென்று அரையிறுதிக்குள் சென்ற இந்தியா!

தமிழ்நாட்டில் நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரானது காலிறுதிச் சுற்றை எட்டியிருக்கிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவில் 6 குழுக்களில் முதலிடம் பிடித்த 6 அணிகள் மற்றும் இரண்டாமிடம் பிடித்த 6 அணிகளில் டாப் 2 அணிகள் என ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை இதில், ஸ்பெயின் vs நியூசிலாந்து போட்டியில் வெல்லும் அணியும், இந்தியா vs பெல்ஜியம் போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதும். அதேபோல், பிரான்ஸ் vs ஜெர்மனி போட்டியில் வெல்லும் அணியும், நெதர்லாந்து vs அர்ஜென்டினா போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதும். இந்த நிலையில், சென்னையில் இன்று பிற்பகல் முதல் காலிறுதிப் போட்டிகள் தொடங்கின. மதியம் 12:30 மணிக்கு ஆரம்பித்த முதல் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினும், நியூசிலாந்தும் மோதின. இப்போட்டியில் ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் அணி 4 - 3 என நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்தது. Bruno Avila hits the target just in time!! ⏰ Spain are through to the semi-finals of the FIH Hockey Men’s Junior World Cup Tamil Nadu 2025 winning 4-3, thanks to Avila’s buzzer beating effort! Stream all the matches live on https://t.co/udLVbj7zoI #Hockey #RisingStars … pic.twitter.com/z7cYJEgxXv — International Hockey Federation (@FIH_Hockey) December 5, 2025 அதைத்தொடர்ந்து, 3 மணியளவில் தொடங்கிய பிரான்ஸ் vs ஜெர்மனி காலிறுதிப் போட்டியில் இரு அணிகளும் ஆட்டநேர முடிவில் தலா 2 கோல் அடித்தன. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட்அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. Jasper Ditzer with another stunner! #Risingstars Germany overcame the French challenge to progress to the semis of the FIH Hockey Men's Junior World Cup Tamil Nadu 2025. Stream all the matches LIVE on https://t.co/71D0pOq2OG #Hockey pic.twitter.com/lwqKErHPE8 — International Hockey Federation (@FIH_Hockey) December 5, 2025 அதில் பிரான்ஸ் தனது முதல் 4 வாய்ப்புகளில் 1 கோல் மட்டுமே அடித்தது. மறுமுனையில் ஜெர்மனி தனது முதல் 4 வாய்ப்புகளில் 3 கோல் அடித்து வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து மாலை 5:30 மணியளவில் நெதர்லாந்து vs அர்ஜென்டினா காலிறுதிப் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் அர்ஜென்டினா 1 - 0 நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 'அடுத்து ஆசியக்கோப்பைல ஆடனும்!' - இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் கார்த்தி பின்னர் கடைசி காலிறுதிப் போட்டியாக இரவு 8 மணிக்கு இந்தியா vs பெல்ஜியம் போட்டி தொடங்கியது. போட்டியின் 12-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்குத் தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தது. அடுத்த 30 நிமிடங்களுக்கு கோல் போட முடியாமல் பின்தங்கிய நிலையில் இந்தியா போராடிக்கொண்டிருந்த வேளையில், கேப்டன் ரோஹித் 44-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். அடுத்த 3-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஷர்தானந்த் திவாரி ஒரு கோல் அடித்தார். 2 - 1 என இந்தியா முன்னிலையுடன் ஆடிவந்த நிலையில், பெல்ஜியம் வீரர் ரோஜ் நாதன் ஆட்டத்தின் கடைசி ஒரு நிமிடத்துக்கு கோல் அடித்தார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் போட்டி 2 - 2 என சமநிலை ஆனதால் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது. Hockey Men's Junior WC - India vs Belgium அதில் பெல்ஜியம் தனது முதல் வாய்ப்பிலேயே கோல், இந்தியா தனது முதல் வாய்ப்பில் கோல் அடிக்கத் தவறியது. ஆனால், ரிவ்யூவில் இந்திய வீரர் பந்தை அடிப்பதற்கு முன்பாகவே கோல் கீப்பர் நகர்ந்ததால் இந்தியாவுக்கு முதல் வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அதில் இந்திய வீரர் கோல் அடித்தார். அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது வாய்ப்புகளில் இரு அணிகளும் கோல் அடித்தன. நான்காவது வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்காத தவற, கடைசி வாய்ப்பிலும் பெல்ஜியம் கோல் அடிக்கத் தவறியது. இந்த சூழலில் 3 - 3 என இரு அணிகளும் இருக்க, இந்தியா தனது கடைசி வாய்ப்பில் கோல் அடித்து 4 - 3 என வென்று அரையிறுதிக்குச் சென்றது. பெனால்ட்டி ஷூட் அவுட்டில் பெல்ஜியத்தின் இரு வாய்ப்புகளை முறியடித்த இந்திய கோல் கீப்பர் பிரின்ஸ் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார். வரும் ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 7) நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில், ஸ்பெயினை இந்தியாவும், ஜெர்மனியை அர்ஜென்டினாவும் எதிர்கொள்ளவிருக்கின்றன. மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album

விகடன் 5 Dec 2025 10:35 pm

மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album

ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள். ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்

விகடன் 5 Dec 2025 7:57 pm

The Ashes: சதம் அடித்த ஜோ ரூட்: 'எங்கள் கண்களை காப்பாற்றிவிட்டீர்கள்' - ஹைடன் மகளின் 'கலகல'பதிவு

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடக்கும் புகழ்பெற்ற தொடர் ஆஷஸ் டெஸ்ட் (The Ashes). இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கிடையே நூற்றாண்டைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் இந்த ஆஷஸ் தொடர் நவம்பர் 21 தொடங்கி ஜனவரி 8 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் இதுவரை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை என்பது, இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு குறையாகவே இருந்தது. ஜோ ரூட் இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், ``இந்த போட்டியில் ஜோ ரூட் நிச்சயம் சதம் அடிப்பார். அப்படி அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றால், நான் MCG (மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்) மைதானத்தை நிர்வாணமாக வலம் வருகிறேன்” எனச் சவால் விட்டிருந்தார். இந்த சவாலை தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த மேத்யூ ஹைடனின் மகள், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை டேக் செய்து, ``தயவுசெய்து ஒரு சதமாவது அடித்துவிடுங்கள் என ஜாலியாகத் தெரிவித்திருந்தார். கடைசியாக 2010-11ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, அதன்பிறகு ஒரு ஆஷஸ் தொடரைக்கூட வெல்லவில்லை. இந்த நிலையில்தான் நேற்று காபா மைதானத்தில் பிங்க் பால் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், நிதானமாக ஆடி சதம் அடித்தார். மேத்யூ ஹைடன் இதன் மூலம் 10 ஆண்டுகால ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஏமாற்றத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேய்டனை ஒரு வினோதமான சங்கடத்திலிருந்தும் காப்பாற்றியிருக்கிறார். ஜோ ரூட் சதம் அடித்தவுடன் ஹேய்டனின் மகள் நகைச்சுவையாக தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ``ரூட், நன்றி. நீங்கள் எங்கள் எல்லோரின் கண்களையும் காப்பாற்றிவிட்டீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வேடிக்கையான பதிவு சமூக ஊடங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து மேத்யூ ஹைடன் தனது எக்ஸ் பக்கத்தில் சிரித்துக்கொண்டே, ``ஆஸ்திரேலியாவில் சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே... இந்த சதம் அடிக்க உங்களுக்கு நிறைய நேரம் பிடித்தது. உண்மையில் என்னைவிட இந்த விஷயத்தில் 'ஸ்கின் இன் தி கேம்' வேறு யாருக்கும் இல்லை. நான் உங்களுக்காக வேண்டிக்கொண்டிருந்தேன். எனவே வாழ்த்துக்கள். பத்து அரைசதங்கள். இறுதியாக ஒரு சதம். எனக் குறிப்பிட்டிருந்தார். 'அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நினைக்க வைப்பவர்' - சிராஜை பாராட்டிய ஜோ ரூட்

விகடன் 5 Dec 2025 10:03 am

IND vs SA: `358 அடிச்சும் பத்தல'சொதப்பல் பவுலிங்; வீணான ருத்துராஜ், கோலி சதம்; ஈஸியாக வென்ற தெ.ஆ

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் இன்று நடைபெற்றது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் ஆடிய ரியான் ரிக்கில்டன், சுப்ராயன், பார்ட்மன் ஆகியோர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டு, டெம்பா பவுமா, கேஷவ் மகாராஜ், லுங்கி இங்கிடி ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பவுலிங்கைத் தேர்வு செய்தார். Ruturaj Gaikwad அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், கடந்த போட்டியில் அரைசதமடித்த ரோஹித் சர்மா 14 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியிலும் பெரிதாக ரன் அடிக்காமல் 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார். பவர்பிளே முடிவில் 66 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்தது. இந்த நேரத்தில் கோலியுடன் இணைந்தார் ருத்துராஜ் கெய்க்வாட். இருவருமே தென்னாப்பிரிக்காவின் பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்து அரைசதம் அடித்து பார்ட்னர்ஷிப்பையும் 100 ரன்களைக் கடக்க வைத்தனர். தொடர்ந்து இருவரும் போட்டி போட்டு அதிரடியாக ஆட, ருத்துராஜ் 77 பந்துகளில் ஒருநாள் போட்டி கரியரில் தனது முதல் சதத்தை அடித்தார். அடுத்த ஒரு ஓவரிலேயே ருத்துராஜ் அவுட்டானார். கோலி - ருத்துராஜ் ஜோடி 195 ரன்கள் குவித்தது. அதையடுத்து, கோலியுடன் கேப்டன் கே.எல்.ராகுல் கைகோர்க்க, கோலி இந்தப் போட்டியிலும் சதமடித்து 102 ரன்களில் அவுட்டானர். Virat Kohli அவரைத்தொடர்ந்து வந்த வேகத்தில் 1 ரன்னில் வாஷிங்டன் சுந்தரும் ரன் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் கே.எல். ராகுல் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது இந்தியா. கடந்த போட்டியில் 350 என்ற டார்கெட்டுக்கு நெருக்கமாக வந்து வெறும் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா, இப்போட்டியில் 359 ரன்கள் டார்கெட்டை வெற்றிகரமாக செஸ் செய்யும் நோக்கில் களமிறங்கியது. ஒருமுனையில் எய்டன் மார்க்ரம் நல்ல அடித்தளம் போட ஆரம்பிக்க, மறுமுனையில் குயின்டன் டிகாக் 8 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஆனால் அவரின் விக்கெட்டுக்குப் பிறகுதான், மார்க்ரமும், பவுமாவும் சேர்ந்து இந்திய பவுலர்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடக்க, அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பவுமா 46 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் அவுட்டானார். Aiden Markram அடுத்து வந்த மேத்யூ பிரீட்ஸ்கே மார்க்ரமுக்கு உறுதுணையாக ஆட மார்க்ரம் சதமடித்தார். ஆனால், சதமடித்த வேகத்திலேயே ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் மார்க்ரம் அவுட்டானார். இந்த நேரத்தில் களமிறங்கிய அதிரடி வீரர் டெவால்ட் பிரேவிஸ் வேகமாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். யாராலும் நிறுத்த முடியாத அளவுக்கு சிக்ஸர்களாகப் பறக்கவிட்ட பிரேவிஸ் 33 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்தார். ஆனால், குல்தீப் ஓவரில் அடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்க முயன்று ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். IND vs SA: நேற்றைய ஆட்டத்தில் 2016-18 ஆம் ஆண்டுகளின் கோலி வெர்ஷனைப் பார்த்தோம் - குல்தீப் யாதவ் இருப்பினும் தென்னாப்பிரிக்காவின் ரன் வேகம் குறையவில்லை. பிரீட்ஸ்கே தேவையான இடத்தில் பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார். தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளுக்கு 300-ஐக் கடந்த சென்றுகொண்டிருந்த வேளையில், பிரீட்ஸ்கேயை 68 ரன்களில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கினார் பிரசித்தி கிருஷ்ணா. அடுத்து வந்த மார்கோ யான்செனை 2 ரன்களில் அர்ஷ்தீப் அவுட்டாக்கவே ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 31 பந்துகளில் 31 தேவை என்ற சூழலில் டோனி டி சார்ஸி ரன் ஓடுகையில் எதிர்பாராத விதமாக தசைப்பிடிப்பு ஏற்பட்டு களத்திலிருந்து வெளியேறினார். Dewald Brevis - Matthew Breetzke கேஷவ் மகராஜ் களத்துக்குள் வந்தார். அப்போது ஆல்ரெடி கிரீஸில் இருந்த கார்பின் போஷ் கடந்த போட்டியைப் போலவே இப்போட்டியிலும் இந்தியாவை அச்சுறுத்தத் தொடங்கினர். தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 5 ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்ஷித் ராணா வீசிய 46-வது ஓவரில் போஷ் பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் எளிதாக 9 ரன்கள் வந்தது. அப்படியே அழுத்தம் இந்தியாவின் பக்கம் திரும்பு வேளையில் அர்ஷ்தீப் உள்ளே வந்து 47-வது ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டும் கொடுத்து கட்டுப்படுத்தினார். அதற்கடுத்த ஓவரில் போஷும், மகாராஜும் நிதானமாக சிங்கிள் சிங்கிளாக ஓடியே 7 ரன்களை சேர்த்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 12 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட அவர்கள் இருவரும் 49-வது ஓவரில் பதட்டமே படாமல் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் நீதமாக 5 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் வெறும் 3 ரன்கள் தேவைப்பட அதை முதல் இரு பந்திலேயே எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் ஒருநாள் தொடரை 1 - 1 என தென்னாப்பிரிக்கா சமன் செய்திருக்கிறது. டிசம்பர் 6-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் கடைசிப் போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி

விகடன் 3 Dec 2025 10:41 pm

MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி

கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆனது. சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு, 2015, 2019 அடுத்தடுத்த உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதியோடு வெளியேறி ஏமாற்றம் தந்த இந்தியா, 2023-ல் சொந்த மண்ணில் இறுதிப்போட்டி வரை முன்னேறி மீண்டும் ஏமாற்றம் தந்தது. கபில் தேவ் - தோனி - ஹர்மன்பிரீத் கவுர் இதற்கு மத்தியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கடந்த மாதம் சொந்த மண்ணில் மகளிர் உலகக் கோப்பையை வென்று அரை நூற்றாண்டு கனவை நிறைவேற்றியது. இந்த நிலையில், தான் கேப்டனாகப் பதவி வகித்த காலத்தில் இருந்த 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனான தோனி, இந்திய மகளிர் அணியும் ஆடவர் அணியும் இன்னும் 100 கோப்பைகளை வெல்ல ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியதோடு, தன் கிரிக்கெட் வாழ்வின் மிக நெகிழ்வான தருணம் குறித்து பேசியுள்ளார். 2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்? குஜராத்தின் பருல் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற மிஷன் பாசிபிள் (Mission Possible) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2011 உலகக் கோப்பையில் இறுதிபோட்டியின் கடைசி நிமிடங்களை நினைவுகூர்ந்த தோனி , ``மும்பை வான்கடே ஸ்டேடியம் அவ்வளவு பெரிய ஸ்டேடியம் இல்லை. எல்லா சத்தமும் உள்ளேயே இருக்கும். அன்று இறுதிப் போட்டியில் கடைசி பந்துக்கு 15 - 20 நிமிடங்களுக்கு முன்பு ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் `வந்தே மாதரம்' பாடல் பாடத் தொடங்கினர். தோனி ஸ்டேடியத்தில் ஒரு மூலையில் அந்தப் பாடல் தொடங்கி நிறைய குரல்களுடன் ஒரு மெக்சிகன் அலை போல நகர்ந்து வந்தது. அந்தச் சத்தத்துக்கு நடுவில் நிற்கும்போது அது நகர்வதை உங்களால் உணர முடியும். என் கிரிக்கெட் வாழ்வில் மிகச் சிறப்பான தருணம் அது. அந்த சமயத்தில் எனக்கு இருந்த மிகச் சிறந்த நெகிழ்வான உணர்வு என்று அதைக் கூறுவேன். 2011 ஒருநாள் உலகக் கோப்பை - தோனி எமோஷனலாக மிகவும் நெகிழ்ந்தேன். அந்த மாதிரியான தருணத்தை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம். இந்தியா மீண்டும் வெல்லும். மகளிர் அணி மற்றும் ஆடவர் அணி இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியேயும் வெற்றி பெறுவார்கள். கடவுள் அவர்களை 100 முறை வெற்றிபெறச் செய்யட்டும் என்று கூறினார். 2011 CWC Final: யுவி-க்கு முன்னாடி தோனி இறங்கியதற்கு 2 காரணங்கள் இருக்கிறது - சச்சின் ஓபன் டாக்

விகடன் 3 Dec 2025 4:30 pm

IND vs SA: ``இதையெல்லாம் தலைக்கு ஏற்றினால் கிரிக்கெட் ஆட முடியாது - விமர்சனங்களுக்கு ஹர்ஷித் பதிலடி

2024 ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்தபோது சற்று வெளிச்சத்துக்கு வந்தவர் ஹர்ஷித் ராணா. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, போர்டர்–கவாஸ்கர் டெஸ்ட் தொடர், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில் ஹர்ஷித் ராணா ஆடவைக்கப்பட்டார். இதுமட்டுமல்லாமல், சமீபத்தில் இந்தியா ஆடிய பெரும்பாலான தொடர்களின் 15 பேர் அணிப் பட்டியலில் இடம்பெற்ற மூன்று–நான்கு வீரர்களில் ஹர்ஷித் ராணாவும் ஒருவர். இந்திய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் - ஹர்ஷித் ராணா உள்ளூர் கிரிக்கெட்டில் தங்களை நிரூபித்த அபிமன்யு ஈஸ்வரன், சர்ஃபராஸ் கான் போன்ற வீரர்களை 15 பேர் பட்டியலில் கூட தேர்வு செய்யாத நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டிலும் இந்திய அணியிலும் பெரிய அளவில் சோபிக்காத ஹர்ஷித் ராணாவை தொடர்ச்சியாக அணியில் தேர்வு செய்வது விமர்சனப் பொருளாகியுள்ளது. குறிப்பாக ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் இதில் கம்பீரின் தலையீடு அதிகமாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஒரே ஒரு முறை மவுனம் கலைத்த கம்பீர், “தங்களின் யூடியூப் சேனலை ஓடவைப்பதற்காக 23 வயது வீரரை தனிப்பட்ட முறையில் டார்கெட் செய்வது வெட்கக்கேடு. உங்களுக்கு என்னை டார்கெட் செய்ய வேண்டுமென்றால் செய்யுங்கள். அந்த 23 வயது குழந்தையை விட்டுவிடுங்கள். யூடியூப் சேனலுக்காக எதையாவது பேசாதீர்கள். அவனுடைய அப்பா ஒன்றும் தேர்வுக்குழுவில் உள்ள நபர் அல்ல,” என்று பொதுப்படையாகவும், சிலரை மறைமுகமாகவும் விமர்சித்தார். Harshit Rana - ஹர்ஷித் ராணா இத்தகைய சூழலில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், தன்மீதான விமர்சனங்களுக்கு ஹர்ஷித் ராணா எதிர்வினை ஆற்றியுள்ளார். `என்னை டார்கெட் பண்ணுங்க, ஆனா அந்த 23 வயது குழந்தையை விட்ருங்க’- ஹர்ஷித் ராணாவுக்காக கொதித்த கம்பீர் நேற்று (டிசம்பர் 2) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஹர்ஷித் ராணா , ``இதையெல்லாம் காதில் வாங்கி தலையில் ஏற்றிக்கொண்டு களத்துக்கு வந்தால் என்னால் கிரிக்கெட் ஆட முடியாது. முடிந்தவரை அவற்றைத் தவிர்க்க முயற்சிக்கிறேன். களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். வெளியே என்ன நடக்கிறது அல்லது என்னைப் பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. Harshit Rana - ஹர்ஷித் ராணா எனது கடின உழைப்பிலும், களத்தில் என்ன செய்யப் போகிறேன் என்பதிலும் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன். புதிய பந்தில் மோர்னே மோர்கலுடன் (பந்துவீச்சு பயிற்சியாளர்) நிறைய பயிற்சி செய்து வருகிறேன். அர்ஷ்தீப்புடன் நிறைய உரையாடுகிறேன். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. பயிற்சியின் போது அவர் எனக்கு உதவி செய்து என்னை வழிநடத்துகிறார் என்று கூறினார். INDvENG: நானும் ரோஹித்தும் இதைத்தான் பேசினோம் -அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷித்

விகடன் 3 Dec 2025 12:03 pm

Hockey Men's Junior WC: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா; மற்ற 7 அணிகள் எவை?

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நவம்பர் 28-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும் இத்தொடரில் பங்கேற்றுள்ள 24 அணிகள் மொத்தம் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், `பி' குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் இரு லீக் போட்டிகளில் சிலி அணியை 7 - 0 எனவும், ஓமன் அணியை 14 - 0 எனவும் வீழ்த்தியது. ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை - இந்தியா vs சுவிட்சர்லாந்து இந்த நிலையில், லீக் சுற்றின் கடைசி போட்டியாகவும், தனது கடைசி லீக் போட்டியாகவும் மதுரையில் சுவிட்சர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. இந்திய அணியைப் போலவே தனது முதல் இரு லீக் போட்டிகளை வென்ற சுவிட்சர்லாந்து அணி இந்த ஆட்டத்தில் இந்தியாவிடம் தடுமாறியது. ஆட்டத்தின் முதற்பாதியில் 4 - 0 என முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாம் பாதியிலும் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுத்ததோடு கூடுதலாக ஒரு கோல் அடித்து 5 - 0 என வென்றது. தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் மூலம் `பி' குழுவில் முதலிடத்துக்கு முன்னேறியது இந்தியா. ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை - இந்தியா vs சுவிட்சர்லாந்து நேற்று நடைபெற்ற மற்ற போட்டிகளில், கொரியாவை 3 - 1 என ஆஸ்திரேலியாவும், மலேசியாவை 3 -1 என இங்கிலாந்தும், வங்காளதேசத்தை 3 - 2 என பிரான்ஸும், ஆஸ்திரியாவை 11 - 0 என நெதர்லாந்தும், ஓமனை 2 - 0 என சிலியும், எகிப்தை 10 - 0 பெல்ஜியமும், நமீபியாவை 13 - 0 ஸ்பெயினும் வென்றன. லீக் போட்டிகள் 6 குழுவிலும் முதலிடம் பிடித்த 6 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, `ஏ' குழுவில் முதலிடம் பிடித்த ஜெர்மனி, `பி' குழுவில் முதலிடம் பிடித்த இந்தியா, `சி' குழுவில் முதலிடம் பிடித்த அர்ஜென்டினா, `டி' குழுவில் முதலிடம் பிடித்த ஸ்பெயின், `இ' குழுவில் முதலிடம் பிடித்த நெதர்லாந்து, `எஃப்' குழுவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் ஆகிய 6 அணிகள் காலிறுத்திச் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. 'அடுத்து ஆசியக்கோப்பைல ஆடனும்!' - இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் கார்த்தி மேலும், காலிறுதிச் சுற்றுக்கு காலியாக இருக்கும் 2 இடங்களுக்கு ஒவ்வொரு குழுவிலும் இரண்டாமிடம் பிடித்த அணிகளில் டாப் 2 இரண்டு அணிகள் முன்னேறும். அதன்படி, `சி' குழுவில் இரண்டாமிடம் பிடித்த நியூசிலாந்தும், `டி' குழுவில் இரண்டாமிடம் பிடித்த பெல்ஜியமும் காலிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன. இந்த இரு அணிகளுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்த மற்ற நான்கு அணிகளும், ஒவ்வொரு குழுவிலும் மூன்றாமிடம் பிடித்த 6 அணிகளில் டாப் 4 அணிகளும் 9 முதல் 16-ம் இடத்துக்கான போட்டியில் மோதும். இந்திய வீரர்கள் மீதமிருக்கும் 8 அணிகள் 17 முதல் 24-ம் இடத்துக்கான போட்டியில் மோதும். நாளை மறுநாள் (டிசம்பர் 5) சென்னையில் காலிறுதிப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இதில், இந்தியா தனது காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும். இப்போட்டிக்கு முன்பாக ஸ்பெயின் vs நியூசிலாந்து, பிரான்ஸ் vs ஜெர்மனி, நெதர்லாந்து vs அர்ஜென்டினா என 3 காலிறுதிப் போட்டிகள் நடைபெறும். Ind vs SA: அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன் - ரோஹித் குறித்து சுவாரஸ்யம் பகிரும் பவுமா

விகடன் 3 Dec 2025 6:06 am

Messi India Tour: மெஸ்ஸியுடன் மோத தயாராகும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த்; வைரலாகும் பயிற்சி வீடியோ!

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு எதிராகப் போட்டியிடத் தயாராகும் வகையில், நாள்தோறும் கால்பந்து பயிற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Messi: G.O.A.T India Tour ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள 'G.O.A.T. இந்தியா டூர் 2025' நிகழ்ச்சியின்போது மெஸ்ஸியுடன் முதல்வர் மோதவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த உலகக் கோப்பை சாம்பியன் மெஸ்ஸி, டிசம்பர் 13 முதல் 15 வரை கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் நடக்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார் என்கிறது மனோரமா செய்திதளம். CM Revanth Reddy practiced at the MCHRD grounds today as he gears up for the football match against Messi’s team on the 13th. https://t.co/YLWUqIgezj pic.twitter.com/uiONy9Wa1s — Naveena (@TheNaveena) December 1, 2025 பிரபலங்கள் பங்கேற்கும் போட்டிகள் (Celebrity Matches) மற்றும் பல வேடிக்கையான பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் மெஸ்ஸி கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சுற்றுப்பயணத்தில் நான்காவது இந்திய நகரமாக ஹைதராபாத் இணைக்கப்பட்ட நிலையில், தங்கள் மாநிலம் மெஸ்ஸியை வரவேற்கத் தயாராக இருப்பதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார். இதுகுறித்த அவரது பதிவில், டிசம்பர் 13 அன்று ஹைதராபாத்தில் 'G.O.A.T.' லியோனல் மெஸ்ஸியை வரவேற்று விருந்தளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த ஜாம்பவானை நம் மண்ணில் காண வேண்டும் என்று கனவு கண்ட ஒவ்வொரு கால்பந்து ரசிகருக்கும், நம் நகரத்துக்கும் இதுவொரு அற்புதமான தருணம் எனக் குறிப்பிட்டிருந்தார். Revanth Reddy Football Practice ஆனால், முதல்வர் ரேவந்த் ஹைதராபாத்தை மட்டும் தயார் செய்யவில்லை, அவரே போட்டிக்குத் தயாராகும் வகையில் பயிற்சி எடுத்து வருவதுதான் சுவாரஸ்யமான செய்தி. கால்பந்து மைதானத்தில் போட்டிக்குப் பிறகு இளைஞர்களுடன் ரேவந்த் ரெட்டி இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சருக்கான தனது அலுவலக நேரத்திற்குப் பிறகு பயிற்சிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. போட்டியில் முதல்வர் ரேவந்த், தனது சட்டையில் 'எண் 9' (No 9) என்ற எண்ணை அணிவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்தப் போட்டியை 'M10 vs RR 9' (மெஸ்ஸி 10-க்கு எதிராக ரேவந்த் ரெட்டி 9) போர் என்று பரபரப்பாக்கி வருகின்றனர். Ronaldo: `மெஸ்ஸி உங்களை விடச் சிறந்த வீரரா?' - கேள்விக்கு ரொனால்டோவின் அதிரடி பதில்

விகடன் 2 Dec 2025 5:50 pm