'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு; அச்சத்தில் ஆடிய நிதி நிறுவனங்கள்; என்னதான் பிரச்னை?
உலகெங்கும் இருக்கும் பல மில்லியன் நிறுவனங்களின் இணையதளங்கள் பாதுகாப்பாகவும், வேகமாகவும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முன்னணி கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கான 'Cloudflare'-ன் சேவையில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை அடிக்கடி துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திடீர் துண்டிப்பால் நொடிக்கு பல கோடிகளை ஈட்டிக் கொண்டிருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் 12 நிமிடங்கள் வரை முடங்கிப் போய் இருந்துள்ளது. இந்த 12 நிமிட தற்காலிக முடக்கமெல்லாம் பெரிய விஷயமா என்று தோன்றலாம். ஆனால், நொடிக்கு பில்லியன்களில் பணப்புழக்கம் நடந்து வரும் பங்குச் சந்தை நிறுவனங்களான 'Zerodha, Angel One, Groww', செய்தி நிறுவனங்கள், ஷாப்பிங் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகள் சில நிமிடங்கள் நின்றுபோனது பெரும் பதற்றத்தையும், சைபர் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. Update: Cloudflare global outage resolved Kite services have been restored. You can now trade normally. We regret the inconvenience caused. https://t.co/gvDqEtCtWJ — Zerodha (@zerodhaonline) December 5, 2025 இந்த திடீர் இணையதள துண்டிப்புக்குக் காரணம் இணையதள தகவல்களைத் திருடும் சைபர் அட்டாக்காக இருக்குமோ அல்லது மொத்தமாக இணையதளத்தை முடக்கும் ஏதேனும் வைரஸ் அட்டாக்காக இருக்குமோ என கொஞ்ச நேரத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் பதறிபோய் இருந்தனர். இந்தியா, அமெரிக்கா, லண்டன் என பல்வேறு நாடுகளிலும் இந்த பதற்றம் வந்துபோயிருக்கிறது. பலரும் பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தபோது இப்படி நடந்துவிட்டதாகவும், ஆன்லைன் ஆர்டர், டிஜிட்டல் செய்தி இணையதள துண்டிப்பு உள்ளிட்ட சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவித்து வருகின்றனர். Cloudflare நிறுவனம் விளக்கம் இந்நிலையில் இது சைபர் அட்டாக் இல்லை, தொழில்நுட்பக் கோளாறுதான். இணையதள சர்வர்களில் ஏற்பட்ட அதிக இயக்கத்தால் ஏற்பட்ட பிரச்னையாக இருக்கலாம். இதைச் சரிசெய்யும் பராமரிப்புப் பணியால் இப்போது அனைத்தையும் ரீ செட் செய்ததால் இப்படி சில நிமிடங்கள் சேவை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது. நீங்கள் சந்தித்த இந்த இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில் இதற்கான சரியான தொழில்நுட்பக் காரணங்கள் கண்டறியப்பட்டு இப்பிரச்னை முழுமையாகச் சரிசெய்யப்படும் என்று கூறியிருக்கிறது 'Cloudflare' நிறுவனம். இது முதல் முறை அல்ல இது போல் கடந்த நவம்பர் மாதத்திலும் நடந்திருக்கிறது. குறிப்பாக நவம்பர் 18ஆம் தேதி இதேபோல் சேவை துண்டிப்பு ஏற்பட்டது. அதனால், பல முன்னணி நிதி நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகப் புகார் குவிந்தன. Cloudflare என்னதான் பிரச்னை? என்னதான் பிரச்னை? கடந்த மாதம் நவம்பர் 18ஆம் தேதி இதேபோல் 'Cloudflare'-ல் சேவை துண்டிப்பு நடந்தது. அதற்குக் காரணம் சைபர் அட்டாக் அல்லது ஹேக்கர்களோ, வெளி ஆட்களோ காரணம் இல்லை. 'Cloudflare' நிறுவனமே காரணம். இதைத் தெரிந்துகொள்ள 'Cloudflare' எனும் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும். இணையதளத்திற்கும் - பயன்பாட்டாளருக்கும் இடையே தகவல்களைப் பாதுகாப்பாகவும், வேகமாகவும் கடத்துவது தான் இந்த கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கின் வேலை. தகவல்களைப் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் சரியான நபரிடம் கொண்டு சேர்ப்பதே இதன் வேலை. நேரடியாக இணையதளங்களின் சர்வரை, பயனர் அணுகினால் அது பாதுகாப்பு பிரச்னைகளை ஏற்படுத்தும், வேகமாக உலகெங்கும் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும், அதிகமானோர் பயன்படுத்துவதும் சிரமம். அதனால்தான் இந்த கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் இணையதளத்தில் இருந்து தகவல்களைப் பல்வேறு சர்வர்கள் மூலம் பயனர்களுக்கு அனுப்புகிறது. இணையதளங்களை எந்தவொரு சைபர் அட்டாக்கும் நேரடியாகத் தாக்குவதைத் தடுக்கும் வேலையைச் செய்கிறது. உதாரணமாக : ரகசியமான தகவல்களை பாதுகாப்பாக வேறு ஊரில் இருக்கும் ஒருவருக்குச் சொல்ல வேண்டும் என்றால் நம்பிக்கைக்குரிய ஆளிடம் சொல்லி அனுப்புவோம். அந்த நம்பிக்கைக்குரிய ஆள் தான் இந்த 'Cloudflare' எனும் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் என்று புரிந்துகொள்ளலாம். Cloudflare இந்த Cloudflare-ன் முதல் வேலை இணையதளத்தைப் பயன்படுத்துவது மனிதர்களா அல்லது பாட்களா என்று கண்டறிவது தான். பாட்கள் என்று கண்டறிந்தால் அது நல்ல பாட்களா அல்லது பாதுகாப்பை அச்சுறுத்தும் பாட்களா என்று வகைப்படுத்தி கெட்ட பாட்களுக்குத் தகவல்களை அணுகும் அனுமதியை மறுக்க வேண்டும். நல்ல பாட்கள் பயனர்களின் இணையதளப் பயன்பாட்டிற்குத் தகவல்களைக் கூடுதலாகச் சேகரித்துக் கொடுக்கும். கெட்ட பாட்கள் மூலம் ஹேக்கர்கள், சைபர் அட்டாக், வைரஸ் அட்டாக் நடக்கும். தேவையில்லாமல் நாம் தொடும் பாதுகாப்பற்ற தகவல்கள், பணம் பறிக்கும் லிங்குகள் எல்லாம் கெட்ட சர்வர்களா எடுத்துக் கொள்ளப்படும். இதைக் கண்டறியும் Cloudflare-ன் அமைப்பு தான் 'clickhouse database'. இதில் புதிய புதிய பாட்கள், பாதுகாப்பு தொடர்பான அப்டேட்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த அமைப்பில் தான் 'Cloudflare' தவறான அப்டேட் ஒன்றைச் செய்திருக்கிறது. அதன் மூலம் தகவல்களைக் கண்டறியும் 'bot management system' அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு Cloudflare-ல் இப்படியான பிரச்னைகள் வந்துகொண்டிருக்கின்றன. 'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு விவகாரம் இது போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதுகாப்பு, நிதி இழப்பு உள்ளிட்ட பெரும் பிரச்னைகளை 'Cloudflare' சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சந்திக்க நேரிடும். இது போன்ற பிரச்னைகள் இனி நடக்காமல் சரிசெய்யவில்லை என்றால் 'Cloudflare' சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் வேறு கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் நிறுவனங்களின் சேவைக்கு மாற நேரிட்டு 'Cloudflare' வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

``இந்தியாவின் 2-வது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட்'' -துணிக்கடை பொம்மையில் அரசு பள்ளி மாணவர் சாதனை
உலகில் ஒரு மூளைமுடுக்கு எங்கும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ). அதற்கேற்ப, ஏஐ-ன் நன்மைகளையும் அதன் பயன்பாடுகளையும் புரிந்துகொண்டு, பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆர்வத்துடன் நிகழ்த்தி வருகின்றனர் மாணவர்கள். அவ்வகையில், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் ஏஐ ரோபோட்டிக் டீச்சரை உருவாக்கி பாராட்டுகளைப் பெற்று வருகிறார். ஏஐ ரோபோட் டீச்சர் சுந்தர் பிச்சையின் மாஸ்டர் பிளான்; இந்தியாவில் ₹1.25 லட்சம் கோடியில் 'Google AI Hub' - என்ன ஸ்பெஷல்? கிராமப்புறங்களை நோக்கி AI தொழில்நுட்பம் உத்தரப்பிரதேச மாநிலம், புலந்துசகரை சேர்ந்த அரசு பள்ளியில் படிக்கும் ஆதித்யா என்ற மாணவர் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். இவர் இப்போது 12ஆம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு ரோபோடிக்ஸ் துறையில் எந்தவிதமான பயிற்சியும், முன் அனுபவமும் கிடையாது. அவரிடம் இருந்தது எல்லாம், கிராமப்புற மாணவர்களும் தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய எண்ணமே. 'சோஃபி' வகுப்பில் மாணவர்கள் உற்சாகம் தினமும் பள்ளி முடித்து அனைவரும் வீட்டுக்குச் சென்ற பின்பும், ஆதித்யா மட்டும் சர்க்யூட்டும் கையுமாக இருந்து பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். பல முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு பெண் வடிவத்தில் ரோபோட் டீச்சரை உருவாக்கி அதற்கு 'சோஃபி' என்றும் பெயர் வைத்துள்ளார். இந்த ஏஐ சோஃபி டீச்சர் நடத்தும் வகுப்புகளில் மாணவ–மாணவியர்கள் உற்சாகமாக கவனித்து, பல சுவாரசியமான கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. #WATCH | Bulandshahr, UP | A 17-year-old student from Shiv Charan Inter College, Aditya Kumar, has built an AI teacher robot named Sophie, equipped with an LLM chipset. The robot says, "I am an AI teacher robot. My name is Sophie, and I was invented by Aditya. I teach at… pic.twitter.com/ArJYSsf39F — ANI (@ANI) November 29, 2025 துணிக்கடை பொம்மை டு ரோபோட் டீச்சர் துணிக்கடை மேனிக்யூன் பொம்மையை ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் கருவியுடன் இணைத்து, இதை அவர் உருவாக்கியுள்ளார். சோஃபியின் முக்கிய செயல்பாடு, பெரிய ரோபோட்டிக்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்தும் அதே வகையான LLM சிப்செட் மூலம் இயங்குகிறது. இது ரோபோவால் கேள்விகளைப் புரிந்துகொண்டு இயல்பாக பதிலளிக்க உதவுகிறது. அன்றாடப் பொருட்களான பழைய லேப்டாப் பாகங்கள், எளிய சென்சார்கள் மற்றும் ஸ்பீக்கர் மாடியூல்கள் ஆகியவற்றை பயன்படுத்தியே இதை அவர் உருவாக்கியுள்ளார். தற்போது, சோஃபியால் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள முடிகிறது. இப்போதைக்கு இந்தி மொழியிலும், எதிர்கால புதுப்பிப்புகளில் மற்ற மொழிகளிலும் பேச முடியும். பொது அறிவு, இயற்பியல் மற்றும் அடிப்படைக் கணக்கு உட்பட பல்வேறு பாடங்களில் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், மனித ஆசிரியர்கள் இல்லாதபோது வகுப்புகள் தடைபடாமல் இருக்கவும், மாற்று ஆசிரியராகச் செயல்படவும் இது பயனுள்ளதாக இருக்கும். முதற்கட்டமாக மாதிரி ஐடியாகவே இருக்கும் இது; எதிர்காலத்தில் முழுமையான ஏஐ டீச்சர் ரோபோட்டாக உருவாக வேண்டும் என்பதே ஆதித்யாவின் கனவே இருக்கிறது. ஏஐ ரோபோட் டீச்சர் AI கெட்டது என்கிறார்கள். ஆனால் AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் - விஜய் ஆண்டனி 'விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும்' ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆதித்யாவின் தந்தை காம்பவுண்டர் வேலை பார்க்கிறார். ரோபோட்டை தயார் செய்து முடிக்கும் வரை ஏற்பட்ட செலவுகளை ஆதித்யாவுக்காக அவரது தந்தை கடன் வாங்கி உதவியுள்ளார். இதுகுறித்து பேசும் ஆதித்யா, “இது இந்தியாவின் இரண்டாவது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட். சில நேரங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், மாணவர்களுக்கு அன்றைய வகுப்புகள் இல்லாமலே போகிறது. இந்தப் பிரச்சனையை தீர்க்கவே நான் இதை உருவாக்கியுள்ளேன். விண்வெளி ஆராய்ச்சியாளராவதே என்னுடைய லட்சியம்” என்று கூறினார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆராய்ச்சி ஆய்வகங்களை நிறுவி இளம் சயின்டிஸ்ட்களை உருவாக்க வேண்டும், மற்றும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசிற்கு வேண்டுகோள் வைத்துள்ளார். ஆதித்யாவின் இந்த ஆர்வத்தை பலரும் பாராட்டி, ஊக்குவித்து வருகின்றனர்.

Rain Upadate: 'இன்று இடியுடன் கூடிய கனமழை' - எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை அருகே, தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயலின் எச்சம் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியதால் கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழந்து, குறைந்த அழுத்த பகுதியாக மாறியிருக்கிறது. Rain Alert - மழை திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? இந்நிலையில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்றைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை 05-12-2025ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. வானிலை ரிப்போர்ட் Wonderla: ``புயல், மின்தடை; 25 ஆண்டுகால அனுபவத்தில் இப்படி நடந்ததில்லை'' -மன்னிப்பு கேட்ட வொண்டர்லா இதுதவிர இன்று காலை வெளியான வானிலை அறிக்கையின்படி, இன்று இடியுடன் கூடிய கனமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும். மிதமான மழை விழுப்புரம், கடலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது. பருவமழை டிசம்பர் 9 அல்லது 10ஆம் தேதிகளில் அடுத்த மழையைக் கொண்டுவரும் என்று கூறப்பட்டிருக்கிறது.
புதுச்சேரி: நகரப் பகுதியில் ஓய்வெடுக்கும் பழம்தின்னி வவ்வால்கள்! | Photo Album
மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள் 200 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் விழுந்ததால் வெளியேறிய வௌவால்கள்; கிராம மக்கள் சோகம்!
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று `ஆரஞ்சு அலர்ட்'?
சென்னையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களுக்கும் பொருந்தும். தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். இங்கே 'மஞ்சள் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. மழை ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம் சென்னை வானிலை மையத்தின் நேற்றைய அப்டேட்டின் படி, இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டிருந்தது. pic.twitter.com/AsraWY4Haf — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 4, 2025 ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது?
Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு'அலர்ட்!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து... தற்போது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்பகுதியில் தென்மேற்கு திசையில் மெல்ல நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்குள், இது இன்னமும் வலுவிழுந்து குறைந்த அழுத்த பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மழை வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி? எங்கெல்லாம் கனமழை? இன்று திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கே மிக கனமழை பெய்யலாம். வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் கனமழை பெய்யலாம். நாளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. HEAVY RAINFALL WARNINGS pic.twitter.com/CDEfJu1JXM — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 3, 2025 `டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன?
சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு'அலர்ட்!
தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, மதுரை, தேனி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. மழை Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் ஏன் இன்னும் சென்னையில் மழை? தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை அருகே, தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயலின் எச்சம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது மெதுவாக நகர்ந்து வருகிறது. வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைக்கும், இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்திற்கும் குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையின் தென்மேற்கு திசை நோக்கி மெல்ல நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 6 மணிநேரத்திற்குள், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழந்து, நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெல்லாம் விடுமுறை? பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது?
Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கும் டிட்வா புயல் (Cyclone Ditwah), தென்மேற்கு வங்கக் கடலில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. நேற்றிரவு 11:30 மணி நிலவரப்படி மணிக்கு சுமார் 3 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. டிட்வா புயல் - கடல் சீற்றம் டிட்வா புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோயம்பத்தூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அதேபோல், வேலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Ditwah: சென்னையின் முக்கிய இடங்களில் தேங்கிய மழைநீர் | Spot Visit படங்கள்
Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது?
> இனி உற்பத்தி ஆகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அரசின் சைபர் பாதுகாப்பு ஆப்பான 'சஞ்சார் சாத்தி' கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். > இந்த ஆப்பை பயனாளர்கள் அன்இன்ஸ்டாலோ, டிஸ்ஏபிளோ செய்ய முடியாத மாதிரி இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். > ஏற்கெனவே உற்பத்தியான ஸ்மார்ட் போன்கள் மற்றும் விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் இந்த ஆப்பை சாப்ட்வேர் அப்டேட் மூலம் இன்ஸ்டால் செய்ய வேண்டும். - இவை ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்திய அரசின் சமீபத்திய உத்தரவு என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. Sanchar Saathi - Cybersecurity App Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் இந்திய அரசு இப்படி வலியுறுத்தும் சஞ்சார் சாத்தி ஆப்பில் என்ன இருக்கிறது, என்னவெல்லாம் செய்யும் என்கிற பார்வை இதோ... இந்த ஆப் முக்கியமாக 5 விஷயங்களை வைத்து செயல்படுகிறது. முதலாவது, சந்தேக போன்கால்களை ரிப்போர்ட் செய்வது... லாட்டரி ஆஃபர், லோன் ஆஃபர், வேலை ஆஃபர், KYC அப்டேட் என ஏதாவது சந்தேகப்படுவது மாதிரியான போன்கால் வந்தால், காவல் நிலையத்திற்கோ, சைபர் கிரைமுக்கோ செல்ல வேண்டாம். இந்த ஆப்பில் உள்ள 'Report Suspected Fraud Communication' ஆப்ஷனில் எளிதாகப் புகாரளிக்கலாம். இரண்டாவது, தொலைந்த மொபைல் போனை பிளாக் செய்வது... மொபைல் போனில் முக்கிய தகவல்கள், போட்டோக்கள் உள்ளன. ஆனால், அது தொலைந்துவிட்டது. அந்தத் தகவல்களையோ, போட்டோகளையோ யாரும் ஆக்சஸ் செய்யாமல் இந்த ஆப்பிலேயே தடுத்துவிடலாம். இந்த ஆப்பில் இருக்கும் 'Block your Lost/Stolen Mobile Handset' ஆப்ஷன் மூலம், உங்கள் மொபைல் மற்றும் மொபைல் எண் குறித்த தகவல்களைக் கொடுத்து பிளாக் செய்துவிடலாம். மொபைல் போன் திரும்ப கிடைத்ததும், அன்பிளாக் செய்ய அலைய வேண்டாம். இதே ஆப்பிலேயே அதை எளிதாகச் செய்துவிடலாம். மொபைல் போன் WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி மூன்றாவது, உங்கள் பெயரில் எத்தனை மொபைல் எண்கள் பதிவாகி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது... இது இப்போது மிக முக்கிய பிரச்னையாக இருக்கிறது. பிறரது பெயரையும், தகவல்களையும் வைத்து மோசடி பேர்வழிகள் மொபைல் எண் வாங்கிவிடுகின்றனர். ஆனால், அவர்கள் செய்யும் மோசடிகளுக்கு அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள். இதை தடுக்க இந்த ஆப்பிலேயே உங்களது பெயரில் எத்தனை மொபைல் எண்கள் இணைந்திருக்கின்றன என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். நான்காவது, உங்களது மொபைல் போன் எப்படி இருக்கிறது என்பதை சரிபார்ப்பது... உபயோகிக்கும் மொபைல் போனிலோ, வாங்கும் மொபைல் போனிலோ எதாவது மோசடி ஆப்கள் உள்ளதா என்பதை IMEI நம்பரை வைத்தே கண்டுபிடிக்கலாம். ஐந்தாவது, இன்டர்நேஷனல் மொபைல் நம்பர் மோசடியைத் தடுப்பது... இன்டர்நேஷனல் மொபைல் நம்பரில் இருந்து போன்கால் வருவதுபோல இப்போது நிறைய மோசடிகள் நடக்கின்றன. அந்த நம்பர்களை இந்த ஆப் மூலம் ரிப்போர்ட் செய்துவிடலாம். சைபர் மோசடி Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? இந்த ஆப்பில் என்ன நன்மை? ஆன்லைன் மோசடி முதல் மொபைல் போன் திருட்டு வரை காவல் நிலையத்திற்கோ, சைபர் பாதுகாப்பு பிரிவிற்கோ சென்று அலையாமல், முதல் கட்ட நடவடிக்கையை இந்த ஆப்பிலேயே ஈசியா எடுக்க முடியும். அதுவும் பாதிக்கப்பட்ட நபரே எளிதாக செய்ய முடிகிறபோது, இது அவருக்குப் பெரிய நிம்மதியைத் தரும்... ஓரளவு மன உளைச்சலும் குறையும். இன்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கொடுத்துள்ள தகவலின் படி, இந்த ஆப் மூலம் இதுவரை... > 1.75 மோசடி மொபைல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. > கிட்டத்தட்ட 20 லட்சம் தொலைந்த மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. > 7.5 லட்சம் திருடப்பட்ட மொபைல்கள் உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன. அப்புறம் என்ன பிரச்னை? இந்த ஆப் தேவைதான். ஆனால், இதைக் கட்டாயமாகத் திணிப்பது தவறு... இது தனிநபரின் உரிமை மீறல் என்பது எதிர்க்கட்சியின் குரலாக இருக்கிறது. ஆனால், இந்த ஆப்பை வேண்டாமென்றால் டெலீட் செய்துகொள்ளலாம் என்று ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to

`வலுவிழந்த'காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னைக்கு 'மிக கனமழை'அலர்ட்; நாளை எந்த மாவட்டங்களில் மழை?
சென்னையையும், சென்னை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை இன்னும் விட்டப்பாடில்லை. இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி, டிட்வா புயலின் எச்சமாக தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்துவிட்டது. தற்போது அது வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரைக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அது இன்னும் அடுத்த 12 மணிநேரத்திற்கு மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வரும். அதன் பிறகு, நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்தப் பகுதியாக பலவினமடைந்துவிடலாம். மழை சென்னையில் பாதியில் நின்ற மெட்ரோ: தடைப்பட்ட மின்சாரம்; பயணிகள் வெளியேற்றம் - என்ன நடந்தது? இன்று... திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இங்கே அதி கனமழை பெய்யலாம். சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கே மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கு 'மஞ்சள் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கே கனமழை பெய்யலாம். நாளை கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கு மிக கனமழை பெய்யலாம். சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கனமழை பெய்யலாம். 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

24 C