``எடப்பாடி முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவுக்கு தெரியும், ஆகவே'' - புகழேந்தி சொல்வது என்ன?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இபிஎஸ், ஓபிஎஸ் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வா.புகழேந்தி அதிமுக தொண்டர்கள் எந்த காலத்திலும் பாஜக-வுடன் கூட்டணியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அதனை நாங்கள் ஆதரிக்க மாட்டோம், எதிர்த்து நிற்போம். 'புது கட்சி தொடங்க மாட்டேன், நான் அப்படி சொல்லவில்லை' என்று கூறியுள்ளது வியப்பாக இருக்கிறது. இவரை அருகில் வைத்துக் கொண்டு சொன்னவர் வைத்திலிங்கம், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வைத்திலிங்கம் சொன்னதை அப்படியே மறைக்கிறார் ஓபிஎஸ், அதேபோல மூத்த தலைவர் பண்ருட்டியார், 'தேசிய ஜனநாயக கூட்டணியோடு இனி கூட்டணி இல்லை' என்று கூறினார். 'ஒரு மாதம் பொறுமையாக இருப்போம். பழனிசாமி ஒத்துவரவில்லை என்றால் தனி கட்சி ஆரம்பிப்போம் என்று வைத்திலிங்கம் மிகத் தெளிவாக சொன்னாரா இல்லையா, தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, கட்சியாக மாறும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், இப்போது அமித் ஷாவை நேரில் சந்தித்து வந்ததாக ஓபிஎஸ் சொல்கிறார். எல்லாமே முன்னுக்கு பின் முரணாக நடக்கிறது, சொந்தக் கட்சி விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று கூறிய உள்துறை அமைச்சர், கே ஏ செங்கோட்டையனை அழைத்து பேசுகிறார். ஓபிஎஸ்சை அழைத்து பேசுகிறார். ஜெயலலிதா நினைவிடத்தில் புகழேந்தி எப்படியும் பழனிசாமி, முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவிற்கு தெரியும். ஆகவே இப்பொழுது ஓபிஎஸ்-ஐ தயார் நிலையில் வைத்துக் கொள்ளத்தான் அழைத்து சந்தித்திருக்கிறார் என்பது ஆதாரப்பூர்வமாக தெரிகிறது. மேலும் மதச்சார்பற்ற கட்சிகள் உதவியோடு மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளை நிலை நிறுத்தும் வகையில் ஆட்சி அமைக்க பாடுபடுவோம். என்று தெரிவித்தார். செங்கோட்டையன் பக்கம் அதிமுக-வினர் கூடுவார்கள்; பழனிசாமி ஓரம்கட்டப்படுவார் - புகழேந்தி காட்டம்!

Thiruparankundram - `ஆகம விதிகள் என்னாச்சு?' - INDIA கூட்டணி | MODI Press Meet? | Putin Parliament

`Vijay வருவார்'கணக்கு போடும் Edapadi! புது ட்விஸ்ட்! | Elangovan Explains

`100 பில்லியன் டாலர் டார்கெட்; மேக்இன் இந்தியா; புதிய வர்த்தக வழித்தடங்கள்'- புதின் விசிட் ஹைலைட்ஸ்
உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். அவரின் வருகையைத் தொடர்ந்து டெல்லியில் ரஷ்யா - இந்தியா 23-வது உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னர் புதினும், பிரதமர் மோடியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி 2030-க்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தகம்! ``அரசுகளுக்கிடையேயான மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் ஈர்க்கத்தக்க தொகுப்பில் இருதரப்பும் (ரஷ்யா - இந்தியா) கையெழுத்திட்டுள்ளன. அவை பெரும்பாலானவை பொருளாதாரக் கூட்டுறவை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 64 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இது முந்தைய காலகட்டத்தை விட 12 சதவிகிதம் அதிகம். இரு தரப்பும் அதை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு வைத்துள்ளது. அந்த இலக்கை அடைய 2030 வரை ரஷ்ய - இந்திய பொருளாதார கூட்டுறவு திட்டத்தில் எங்கள் அணுகுமுறையை நாங்கள் ஒத்திசைத்துள்ளோம். இரு நாடுகளும் தங்களின் தேசிய நாணயங்களை பெருமளவில் பயன்படுத்துகின்றன. 96 சதவிகித பரிவர்த்தனைகள் ரூபாய் மற்றும் ரூபிள்களில் நடத்தப்படுகின்றன. புதின் - மோடி இந்தியாவின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றின் நம்பகமான சப்ளையராக ரஷ்யா உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்குவதற்கான ஒரு முதன்மைத் திட்டத்தை ரஷ்யா உருவாக்கி வருகிறது. ரஷ்யாவும் இந்தியாவும் புதிய வர்த்தக வழித்தடங்களை நிறுவ இணைந்து செயல்படுகின்றன. இது, ரஷ்யா மற்றும் பெலாரஸிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்கு சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் (INSTC) வழித்தடத்தை உருவாக்க புதிய பயனுள்ள சர்வதேச போக்குவரத்து தளவாட வழித்தடங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு ரஷ்யா சப்போர்ட்! தொழில், இயந்திரம், உற்பத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி ஆகியவற்றில் நாங்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பிரதமர் மோடியின் தனித்துவமான திட்டமான 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கட்டமைப்பில் ரஷ்யா தனது தொழில்துறை பொருள்களின் உற்பத்தியையும் நிறுவும். புதின் - மோடி ஜனநாயகப் பன்முக உலக ஒழுங்கை ஊக்குவித்தல், ஐ.நா சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச சட்டத்தின் கொள்கைகளைப் பாதுகாத்தல் என ரஷ்யாவும் இந்தியாவும் சுதந்திரமான மற்றும் தன்னிறைவு பெற்ற வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன. இந்தியா அடுத்த ஆண்டு பிரிக்ஸ் (BRICS) தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது இந்தியாவை ரஷ்யா முழுமையாக ஆதரிக்கும். தற்போதைய வருகையும், கையெழுத்தான ஒப்பந்தங்களும் ரஷ்யா - இந்தியா மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உதவும் என்று என்னால் நம்பிக்கையுடன் தெரிவிக்க முடியும் என்று கூறினார். ``இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன! - மோடி
திருப்பரங்குன்றம்: சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை - பவன் கல்யாண் வருத்தம்!
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் விழாவில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் ஆனால் மலையின் உச்சியில் இருக்கக் கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்தது திமுக அரசு. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சர்ச்சை குறித்து ட்வீட் செய்துள்ள பவன் கல்யாண், திருப்பரங்குன்றம் முருகனின் ஆறு படைவீடுகளில் முதன்மையானது. இந்து மரபுகள், சடங்குகளை கேலி செய்வது சில குழுக்களின் வழக்கமாகிவிட்டது. இந்துக்கள் தங்களது நம்பிக்கையை பின்பற்ற நீதிமன்றத்தை நாட வேண்டியிருப்பது வருத்தத்துக்குரிய நிலை. Thirupparankundram is the First of the Six Abodes of Lord Murugan (Kartikeya). The practice of lighting lamps atop the hill during the Tamil month of Karthigai is an ancient tradition of Hindus. It is sad and ironic that today the Hindus in Bharat have to seek judicial… pic.twitter.com/CNwWNPDjHZ — Pawan Kalyan (@PawanKalyan) December 5, 2025 தீர்க்கமான சட்டப் போராட்டத்திற்கு பிறகும் தீபமேற்றும் சடங்கை சொந்த நாட்டில் செய்ய முடியவில்லை. சாதி, பிராந்தியம், மொழியால் பிளவுபட்டுள்ளவரை இந்துக்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் இருக்கும். ஒரு புனித நாள் கொண்டாட்டத்தை வேறு நேரத்திற்கு மாற்ற முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார். திருப்பரங்குன்றம்: ஆடு, கோழி பலியிட அறநிலையத்துறை எதிர்ப்பு ஏன்? - திமுகவை கேள்வி எழுப்பும் சீமான்

Indigo: மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம் - பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்ததால், பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், 'டிசம்பர் 5 மிகக் கடுமையான நாள்' என்று குறிப்பிட்டு இன்று மாலை பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பீட்டர் எல்பெர்ஸ். தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேலான விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பீட்டர் எல்பெர்ஸ் தெரிவித்துள்ளார். Indigo CEO பேசியதென்ன? Indigo CEP Pieter Elbers சனிக்கிழமையும் இந்தச் சிக்கல் தொடரும் என்றாலும், 1000க்கும் குறைவான எண்ணிக்கையிலே விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். இண்டிகோ நிறுவனம், தினசரி சுமார் 2,300 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளை வழங்கி வருகிறது. விமானச் சேவைகள் தாமதமாவது மற்றும் ரத்து செய்யப்படுவதால் ஏற்பட்டுள்ள பெரும் சிரமத்துக்காக வீடியோ மூலம் மன்னிப்புக் கோரிய பீட்டர் எல்பெர்ஸ், கடந்த சில நாட்களாக நாங்கள் கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டோம், டிசம்பர் 5 ஆம் தேதி மிக மோசமானது, இதன் விளைவாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, இது எங்கள் தினசரியில் பாதிக்கும் மேல். இண்டிகோ சார்பாக, ஏற்பட்ட சிரமத்திற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழல் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், நாங்கள் எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என்பதில்தான் எங்கள் கவனம் உள்ளது. எனப் பேசியுள்ளார். #WATCH | On flight services disruption, IndiGo CEO Peter Elbers says, "It will take some time to return to a full normal situation, which we do anticipate between 10-15 December..." "Dec 5 was the most severely impacted day with the number of cancellations well over 1000. I… pic.twitter.com/J45QLxjV2y — ANI (@ANI) December 5, 2025 அத்துடன் நிலைமையை சமாளிக்க மூன்று முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். முதலாவதாக, வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வது மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது. இதற்காக சமூக ஊடகங்களில் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இது பற்றிய விரிவான தகவல், பணம் திரும்ப வழங்குதல், விமான ரத்து விவரங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர் ஆதரவு நடவடிக்கைகள் பற்றிய தகவல் இப்போது அனுப்பப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். இரண்டாவதாக, நேற்று ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக, பயணிகள் பெரும்பாலும் நாட்டின் பெரிய விமான நிலையங்களிலேயே சிக்கித் தவித்தனர். இன்று அவர்களுக்குப் பயணத்தை உறுதி செய்வதில் எங்கள் கவனம் இருந்தது. இது நிச்சயம் எட்டப்படும். விமானச் சேவை ரத்து செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள், விமான நிலையங்களுக்கு வர வேண்டாம் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனக் கோரியுள்ளார். இறுதியாக, மூன்றாவதாக, நாளை காலை முதல் ஃப்ரெஷ்ஷாக விமானச் சேவையைத் தொடங்க, விமானப் பணியாளர்களையும் விமானங்களையும் சரியாக அந்தந்த இடங்களில் ஒருங்கிணைப்பதற்காகவே இன்று அதிக அளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ விமானம் கடந்த சில நாள்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனால், நாளையில் இருந்து படிப்படியாக நிலைமை மேம்பட வேண்டும் என்பதற்காக, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் விமானங்களை ரத்து செய்து, எங்கள் அமைப்புகள் மற்றும் அட்டவணைகள் அனைத்தையும் மறுசீரமைக்க (Reboot) இன்று முடிவு நடவடிக்கை மேற்கொண்டோம் என்றார். இந்த நடவடிக்கைகள் மூலம் நாளை 1000க்கும் குறைவான விமானங்களே ரத்து செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிலைமை படிப்படியாக முன்னேறி டிசம்பர் 10-15 தேதிகளுக்குள் இயல்புநிலை திரும்பும் எனக் கூறியுள்ளார். விமான நிலையங்களில் பெரும் குழப்பமான சூழல் நிலவிய நிலையில், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உடனடியாகத் தலையிட்டு, விமானிகளுக்கான இரவுப் பணிக் கடமை விதிகளிலிருந்து இண்டிகோவுக்குத் தற்காலிக விலக்கு அளித்தது. மேலும், வாராந்திர ஓய்வு நேரத்துக்காக விடுமுறைகளைப் பயன்படுத்துவதற்கும் அது அனுமதி அளித்தது. இதற்காக DGCAவுக்கு நன்றி தெரிவித்தார் அவர். இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும், பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!

பயங்காட்டும் வியூக தரப்பு? ; சைலன்ட் மோடில் விஜய்! - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி ஏன்?
திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. தமிழகமே விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யை தவிர அத்தனை அரசியல் கட்சியினரும் கருத்து கூறிவிட்டனர். விஜய் பாஜக-வை கொள்கை எதிரி என்றார். திமுக-வை அரசியல் எதிரி என்றார். ஆனால், இருதரப்பும் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த விவகாரத்தில் விஜய் எந்தக் கருத்தையும் கூறாமல் இருப்பதால் தவெக நிர்வாகிகளும் தொண்டர்களுமே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். விஜய்யின் அமைதிக்கான காரணம் என்னவென்பதை விசாரித்தோம். TVK Vijay திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு சில மீட்டர்கள் தூரத்தில் தீபம் ஏற்றுவோம் என பாஜக மற்றும் சில இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்ற உத்தரவோடு போர்க்கொடி தூக்க, காவல்துறையினர் மேல்முறையீட்டை காரணங்காட்டி அவர்களை தடுத்து நிறுத்தியிருந்தனர். இந்த விவகாரம்தான் கடந்த இரண்டு நாட்களாக ஹாட் டாபிக். நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்தும் எதிர்த்தும் ஏனைய கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை உறுதியாக பேசி வருகின்றனர். ஆனால், விஜய் இதுவரைக்கும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. விஜய் மட்டுமல்ல, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர், அருண் ராஜ் என தவெகவின் முக்கிய நிர்வாகிகள் யாருமே திருப்பரங்குன்றம் குறித்து வாய் திறக்கவில்லை. யாருமே ஒரு ட்வீட் கூட போடவில்லை. TVK Vijay திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் தரப்பு மௌனம் காப்பது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரியில் திருப்பரங்குன்றம் மலை அருகே இந்துத்துவ அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அது பெரிய பேசுபொருளான போதும் விஜய் ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை. அப்போதும் விஜய் தரப்பு முழுமையாக அமைதியாகவே இருந்தது. இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்சு கொடுத்தோம். 'தமிழகமே பற்றி எரிந்துகொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் நாமும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து களமாட வேண்டும் என்றும்தான் தலைமைக்கு தெரியப்படுத்தினோம். ஆனால், தலைமை இந்த விவகாரத்தை வேறு விதமாக பார்க்கிறது. Vijay: `தைப்பூசத்துக்கு வாழ்த்து; திருப்பரங்குன்றம் பிரச்னையில் சைலன்ட்'- என்ன நினைக்கிறார் விஜய்? எங்கள் தலைவரை பாஜகவினர் ஏற்கனவே ஒரு காலக்கட்டத்தில் 'ஜோசப் விஜய்' என மதரீதியாக அட்டாக் செய்திருக்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரம் இரண்டு மதங்கள் சம்பந்தப்பட்டது. இதில் எதோ ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதை பாஜக எங்களுக்கு எதிராக மதரீதியான தாக்குதலாக மாற்றும் வாய்ப்பை கொடுத்துவிடக் கூடாது. அதனால்தான் தலைமையிலிருந்து நிர்வாகிகள் எல்லாரையும் இந்த விவகாரத்தில் கொஞ்சம் அமைதியாக இருக்கும்படி கூறியிருக்கின்றனர். TVK Vijay அடுத்த சில நாட்கள் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் எப்படி செல்கிறது என்பதைப் பார்த்துவிட்டு தலைவர் விளக்கமாக ஒரு அறிக்கையை கொடுப்பார்' என்றனர். 'ஜோசப் விஜய்' என பாஜக வண்டியை விஜய் பக்கமாகவே திருப்பி விடுவார்களோ என விஜய்யின் வியூக தரப்பு தயங்குகிறதாம். மேலும், இந்த திருப்பரங்குன்றம் விவகாரமே திமுக, பாஜகவும் இணைந்து தவெகவுக்கும் விரித்திருக்கும் வலை என்கிற ரேஞ்சுக்கு யோசித்து வியூக தரப்பு பம்முகிறதாம். அதை ஏற்றுக்கொண்டதால்தான் விஜய்யும் கனத்த மௌனம் காக்கிறாராம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடர்ச்சியான அமைதி, கவின் குமார் ஆணவப்படுகொலை விவகாரத்தில் ஒரு ட்வீட் கூட போடாமல் நழுவிய சம்பவங்களால் தவெகவின் முக்கிய நிர்வாகிகளே கொஞ்சம் நெருடலாக உணர்கிறார்களாம். TVK Vijay இப்படியெல்லாம் அலட்சியமாக இருந்துவிட்டு நாளை பிரசாரத்தில் தலித், சிறுபான்மையினர் பிரச்னைகள் குறித்து பேசினால் எப்படி எடுபடும் என தங்களுக்குள் ஆதங்கமும்பட்டுக் கொள்கிறார்கள். விஜய்யின் அமைதியை வைத்து மற்றக் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவரை ட்ரோல் செய்தும் வருகின்றனர். இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்படும் வியூக தரப்புக்கு எதிராக வெளிப்படையாக பேச முடியாமல் முணுமுணுப்போடு கடந்து செல்கின்றனர் முக்கிய நிர்வாகிகள் சிலர். TVK : `சொன்னீங்களே செஞ்சீங்களா விஜய்?' - தவெகவுக்கு 5 கேள்விகள்

திருமண வயதை எட்டும் முன்னரே Live-in உறவில் இருக்கலாம்- 18, 19 வயதினர் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
திருமண வயதை எட்டவில்லை என்றாலும் இரண்டு வயதுவந்த நபர்கள் மனம் விரும்பி 'லிவ்-இன்' உறவில் (Live-in Relationship) வாழ்வது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பேசுப்பொருளாகியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் 19 வயது இளைஞரும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அனுப் தாண்டே இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். Rajasthan High Court அவர்களது மனுவில், கடந்த அக்டோபர் 27, 2025 அன்று தாங்கள் ஒரு 'லிவ்-இன்' ஒப்பந்தத்தை செய்துகொண்டதாகவும், அதன்படி சுயமாக விரும்பி ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த உறவுக்குப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தங்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்துவதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இது குறித்து கோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த மனுவை எதிர்த்து வாதிட்ட அரசு வழக்கறிஞர் விவேக் சௌத்ரி, ஆணுக்குரிய திருமணத்தின் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதான 21 வயதை அந்த இளைஞர் இன்னும் எட்டவில்லை என்பதால், அவர் 'லிவ்-இன்' உறவில் இருக்க அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டுள்ளார். Judgement ஆனால், இந்த வாதத்தை நீதிபதி நிராகரித்தார். மனுதாரர்கள் திருமண வயதை எட்டவில்லை என்பதன் ஒரே காரணத்துக்காக, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் அவர்களுக்கு இருக்கும் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மறுக்க முடியாது. என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அரசியலமைப்புச் சட்டக் கடமையாகும் என்று வலியுறுத்திய நீதிபதி அனுப் தாண்டே, இந்தியச் சட்டப்படி, 'லிவ்-இன்' உறவுகள் தடை செய்யப்படவில்லை அல்லது குற்றமாக அறிவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மனுவில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளைச் சரிபார்த்து, அச்சுறுத்தல் குறித்து மதிப்பீடு செய்யவும், தேவைப்பட்டால் இந்த ஜோடிக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும், பீல்வாரா மற்றும் ஜோத்பூர் (கிராமப்புறம்) மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு நீதிபதி தாண்டே உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு குறித்த உங்களது கருத்துக்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்! Brain Rot: Oxford University இன் 'Word of the Year'; இந்த Gen Z வார்த்தையின் அர்த்தம் என்ன?
Putin Visit India: `சிவப்புக் கம்பள வரவேற்பு, பகவத் கீதை பரிசு, 23-வது உச்சி மாநாடு' | Photo Album

Putin: காந்தி உலகம் முழுமைக்குமான சிந்தனையாளர் - புதின் கைப்பட எழுதிய குறிப்பு!
23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லி வருகையின்போது ராஜ் காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். இந்தியாவின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் அகிம்சை கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ரஷ்ய அதிபர் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். putin's note about gandhi ராஜ் காட்டிலிருந்து விடுபெறும் முன்னர் பார்வையாளர்கள் புத்தகத்தில் நெகிழ்ச்சியான குறிப்பை விட்டுச் சென்றுள்ளார் புதின். அதில் உலக அளவில் தலைமைத்துவம் மற்றும் தார்மீக தத்துவத்தில் காந்தியின் தாக்கத்தை அங்கீகரித்துள்ளார். Putin எழுதியது என்ன? மகாத்மா காந்தியை நவீன இந்தியாவின் முக்கிய நிறுவனர்களில் ஒருவராகவும், உலகம் முழுவதுக்கும் பொருத்தமான சிந்தனையாளர்களில் ஒருவராகவும் புதின் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரம், இரக்கம் மற்றும் சேவை குறித்த காந்தியின் கருத்துக்கள் கண்டங்கள் கடந்து, உலகின் சமூகங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாகவும், காந்திய கொள்கைகள் அவர் கற்பனை செய்ததைப் போலவே மிகவும் நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலக ஒழுங்கை உருவாக்க பயன்படுவதாகவும் தனது செய்தியில் எழுதியுள்ளார் புதின். Putin in India காந்தி, ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதங்களை நினைவுகூர்ந்துள்ளார் புதின். அந்த கடிதங்களில் இருந்த உலகின் எதிர்காலம், சுதந்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் மக்களின் கண்ணியம் பற்றிய கருத்துகள் - ரஷ்யாவும் இந்தியாவும் மதிக்கும் கொள்கைகளுடன் நெருக்கமாக ஒத்துப் போவதை சுட்டிக்காட்டியுள்ளார். உலகத் தலைவர்கள் இந்தியா வருகையின்போது ராஜ் காட்டில் காந்தியின் நினைவை கௌரவிப்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது. அமைதி, ஒற்றுமை மற்றும் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தும் காந்தியின் போதனைகள் இன்றளவும் பொருத்தமானதாக இருப்பதை நினைவூட்டுவதாக இது அமைந்துள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் உத்தி சார்ந்த கூட்டுறவில் நீண்டநாட்கள் நிலைத்திருக்கும் சூழலில் இந்தப் பாரம்பரிய அஞ்சலி இரு நாடுகளும் கலாசார மற்றும் தத்துவார்த்த பிணைப்புகளையும் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. யானை, டிராகன் உடன் கரடியை விட புலி பொருத்தமாக இருக்கும் - விலங்கு சின்னத்தில் அரசியல் பேசிய புதின்

``இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன! - மோடி
உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். அவரின் வருகையைத் தொடர்ந்து டெல்லியில் ரஷ்யா - இந்தியா 23-வது உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னர் புதினும், பிரதமர் மோடியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன! ``கடந்த எட்டு தசாப்தங்களாக, உலகம் ஏராளமான ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. மனிதகுலம் பல சவால்களையும் நெருக்கடிகளையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இவை அனைத்திற்கும் மத்தியில், இந்தியா - ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரத்தைப் போல உறுதியாக உள்ளது. பரஸ்பர மரியாதை மற்றும் ஆழ்ந்த நம்பிக்கையில் நிற்கும் இந்த உறவு எப்போதும் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது. இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு புரிந்துணர்வுடன் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளது. இது ஏற்றுமதி, கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு கண்டுபிடிப்புகளுக்கு புதிய கதவுகளைத் திறக்கும். அதோடு, யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு FTA (Free Trade Agreement)-வை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு தரப்பும் பாடுபடுகின்றன. புதின் போன் காலுக்குப் பின், ஜெலன்ஸ்கியை நெருக்கும் ட்ரம்ப் - என்ன நடந்தது? இந்தியா - ரஷ்யா கூட்டாண்மையின் வலுவான தூண் எரிசக்தி பாதுகாப்பு! 25 ஆண்டுகளுக்கு முன்பு, அதிபர் புதின் இந்தியா - ரஷ்யா மூலோபாய கூட்டாண்மைக்கு அடித்தளமிட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உறவு, சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் அவர் இந்த உறவை தொடர்ந்து வளர்த்து வருகிறார். எரிசக்தி பாதுகாப்பு இந்தியா - ரஷ்யா கூட்டாண்மையின் வலுவான மற்றும் முக்கியமான தூண். இந்த வெற்றிக் கூட்டணியை நாங்கள் தொடர்வோம். ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி உலகம் முழுவதும் பாதுகாப்பான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதற்கு, முக்கியமான கனிமங்களில் நமது கூட்டுறவு மிக முக்கியமானது. இது தூய்மையான எரிசக்தி, உயர் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் புதுயுகத் தொழில்களில் நமது கூட்டாண்மைக்கு உறுதியான ஆதரவை அளிக்கும். இப்போது இந்திய கடற்படையினருக்கு துருவ நீரில் பயிற்சி அளிப்பதில் நாம் ஒன்றிணைவோம். இது ஆர்க்டிக்கில் (Arctic) நமது கூட்டுறவை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். பகவத் கீதை: மில்லியன் மக்களுக்கு உத்வேகமளிக்கும் நூல் - ரஷ்யப் பிரதமர் புதினுக்கு மோடி பரிசு இந்தியா நடுநிலையானது அல்ல! உக்ரைன் பிரச்னையில் இந்தியா தொடக்கத்திலிருந்தே அமைதிக்காக வாதிட்டு வருகிறது. இதில் அமைதியான மற்றும் நீடித்த தீர்வுக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்தியா எப்போதும் தனது பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளது. இது எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் நின்று வருகின்றன. அது பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, குரோகஸ் நகர கட்டடத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலாக இருந்தாலும் சரி. இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் மூல காரணம் தீவிரவாதம் ஒன்றுதான். ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி தீவிரவாதம் என்பது மனிதகுலத்தின் விழுமியங்கள் மீதான நேரடித் தாக்குதல் என்றும், அதற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை நம்முடைய மிகப்பெரிய பலம் என்றும் இந்தியா நம்புகிறது. எதிர்காலங்களில், நமது நட்பு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நமக்கு வலிமையைத் தரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையே நமது எதிர்காலத்தை வளப்படுத்தும். சமீப காலங்களில் நான் உலக சமூகத்தின் தலைவர்களுடன் பேசி இந்த பிரச்னையை விரிவாக விவாதித்த போதெல்லாம், இந்தியா நடுநிலையானது அல்ல என்று எப்போதும் கூறி வருகிறேன். இந்தியா தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அந்த நிலைப்பாடு அமைதிக்கானது. அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது. உலகம் அமைதிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினார். ``இந்தியா எண்ணெய் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் சிக்கல்தான்'' - ரஷ்ய அதிபர் புதின்

தமிழ்நாட்டுல எதுவுமே சரியில்லை - அவசர அழைப்பு; அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்!
தமிழகமே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சூடாகிப் போயிருந்த நேரத்தில், திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், பாஜக மாநில முன்னாள் தலைவரான அண்ணாமலை. 'தனிக்கட்சி தொடங்கப்போகிறார்.., நயினார் நாகேந்திரனால் ஓரங்கட்டுப்பட்டுவிட்டார்.., கும்பகோணத்தில் நடந்த அணிப்பிரிவு நிர்வாகிகள் சங்கமம் நிகழ்ச்சிக்கு, மனவருத்தத்தில் இருந்ததால்தான் அவர் வரவில்லை...' என்று அண்ணாமலை குறித்து பாஜக-வுக்குள் தகவல்கள் பரவிவரும் நிலையில், அவரது டெல்லி விசிட் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அண்ணாமலை அவசர அழைப்பு அண்ணாமலையின் டெல்லி விசிட் குறித்து நம்மிடம் பேசிய பாஜக-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பைக் கழிவுகளை, இடுவாய் கிராமம் மற்றும் சின்னக்காளிப்பாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தில் கலந்துக்கொள்ள, கடந்த டிச.4-ம் தேதி நேரம் கொடுத்திருந்தார் அண்ணாமலை. திருப்பூருக்கு அவர் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான், டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்தது. அமித் ஷாவின் வீட்டில் ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரிந்தவுடன், தன் நிகழ்ச்சிகளை ரத்துச் செய்துவிட்டு டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை. அதனால்தான், திருப்பரங்குன்றம் போராட்டத்தில் அவர் கலந்துக்கொள்ள முடியாமல் போனது. அமித் ஷாவின் வீட்டிற்கு, கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். முதலில் அமித் ஷாதான் பேசத் தொடங்கியிருக்கிறார். 'கட்சியும் கூட்டணியும் எப்படி இருக்கிறது...' என்று அவர் கேட்கவும், 'அமைப்புரீதியாக நாம் வலுப்பெற்று வருகிறோம். ஆனால், தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு இன்னும் பூத் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. 62 சட்டமன்றத் தொகுதிகளில் நாம் வலுவாக இருக்கிறோம். இப்போதிருக்கும் கூட்டணியை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தால், எதிர்பார்த்த ரிசல்ட் வராது. தே.மு.தி.க., பா.ம.க., அ.ம.மு.க போன்ற கட்சிகளையும் நாம் கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்றிருக்கிறார் அண்ணாமலை. அமித் ஷா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் 'கும்பகோணம் நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏன் வரவில்லை...' என்று பி.எல்.சந்தோஷ் கேட்கவும், 'எந்த அடிப்படையில் என்னை அங்கு வரச் சொல்கிறீர்கள்... கட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஆனாலும்கூட, ஒரு காரியகர்த்தாவாக என் பணியை நான் செய்துக் கொண்டிருக்கிறேன். கோவாவிலும் கேரளாவிலும் நீங்கள் கொடுத்த பணிகளை முகம் சுளிக்காமல் செய்து முடித்திருக்கிறேன். ஆனால், என் ஆதரவாளர்களைக் கட்சிப் பொறுப்பிலிருந்து தொடர்ந்து நீக்கி வருகிறார் நயினார் நாகேந்திரன். கும்பகோணம் நிர்வாகிகள் கூட்டத்திற்கு முதல் நாள்கூட, என் ஆதரவாளர்கள் சிலர் நீக்கப்பட்டனர். அதைச் சொல்வதற்காக உங்களை நான் தொடர்புகொண்ட போது, நீங்கள் அழைப்பை ஏற்கவில்லை. மரியாதை இல்லாத நிலையில், நான் எப்படி வருவது...' என்று சந்தோஷிடம் பொங்கியிருக்கிறார் அண்ணாமலை. திருப்பரங்குன்றம் : திமுக அமைச்சர் சொன்ன பொய்கள்.! - அண்ணாமலை காட்டம் அவரைச் சமாதானம் செய்த ஜெ.பி.நட்டா, 'தமிழகத்தில், நம்முடைய கூட்டணிக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்திருக்கிறோம். அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தித்தான் தேர்தலையும் சந்திக்கப் போகிறோம். இந்தச்சூழலில், உங்களுடைய ஆதரவாளர்கள் எடப்பாடியை விமர்சனம் செய்வது, கூட்டணிக்கு பங்கம் விளைவிக்காதா...' என்று கேட்கவும், 'நானே பல பேட்டிகளில், முதல்வராக எடப்பாடி பழனிசாமியை அமர வைப்பதற்கு கடுமையாக உழைப்போம் என்று சொல்லியிருக்கிறேன். பிறகு எதற்காக நான் உள்ளடி செய்யப்போகிறேன்... திமுக ஐ.டி விங்கைச் சேர்ந்த சிலர்தான், என் ஆதரவாளர்கள் போர்வையில் வதந்தியைப் பரப்புகிறார்கள்' என்று விளக்கமளித்திருக்கிறார் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை நடந்த விவாதத்தையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்ட அமித் ஷா, 'மாநிலத் தலைவராக நீங்கள் இருந்தபோது, என்னவெல்லாம் செய்தீர்கள்... இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதெல்லாமே எங்களுக்குத் தெரியும். உங்கள் மீதும் சில தவறுகள் இருக்கின்றன. அதைத் திருத்திக் கொள்ளப் பாருங்கள். உங்களால், கூட்டணிக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது. நான் டிச.14-ம் தேதிவாக்கில் சென்னை வரவிருக்கிறேன். அப்போது, தமிழகத்திலுள்ள சிறுசிறு சமுதாயத் தலைவர்களையும் இயக்கங்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையைப் பாருங்கள். நயினாரை மாநிலத் தலைவராக நியமித்ததற்குக் காரணமிருக்கிறது. உங்களுக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்படும்' என்று சொல்லியிருக்கிறார். திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்தும், தி.மு.க ஆட்சி குறித்தும் பேச்சு திரும்பியிருக்கிறது. 'தி.மு.க-விலுள்ள சிட்டிங் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதெல்லாம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர்களை தேர்தலுக்குள் 'டைட்' செய்தால், நம்மால் சுலபமாக அரசியல் செய்ய முடியும். தமிழகத்தில் எதுவுமே சரியில்லை... திருப்பரங்குன்றம் விவகாரத்திலேயே கூட, நீதிமன்றங்களுடன் திமுக மோதிக் கொண்டிருக்கிறது....' என்று அண்ணாமலை சொல்லவும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இதுவரை நடந்த விஷயங்களை பேட்டியாகக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் ஜெ.பி.நட்டா. அதைத்தொடர்ந்துதான், தமிழிசை செளந்திரராஜன், சக்கரவர்த்தி சகிதமாக கமலாலயத்தில் பேட்டிக் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. அமித் ஷா வீட்டில் நடந்தச் சந்திப்பில், அண்ணாமலை மீது சமீபகாலமாக எழுந்திருக்கும் சொத்துக்குவிப்பு சர்ச்சைகள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்கள். அதற்கு, தன் தரப்பு நியாயங்களைச் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம், எதிர்பார்த்தளவு சோபிக்கவில்லை. அவரது சுற்றுப்பயணத்தில் எழுச்சியுமில்லை. அதனை உணர்ந்துதான், அண்ணாமலையை அழைத்துப் பேசியிருக்கிறது டெல்லி. அவரிடம் சில அசைன்மெண்ட்டுகளும் அளிக்கப்பட்டுள்ளன... என்றனர் விரிவாகவே. அமித் ஷா, நயினார் நாகேந்திரன் அண்ணாமலையைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனும் விரைவில் டெல்லிக்கு அழைக்கப்படுவார் என்கிறார்கள் விவரமறிந்த பாஜக சீனியர்கள். இன்னும் இரண்டு வாரங்களில் பாஜக தேசிய தலைவருக்கான தேர்தலை நடத்திட திட்டமிட்டிருக்கிறதாம் டெல்லி. 'புதிய தலைவர் தேர்வான பிறகு, தேசியளவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த டெல்லி பயணத்தால், தனக்கிருந்த தடையெல்லாம் விலகிவிடும் என்று உறுதியாகவே நம்ப ஆரம்பித்திருக்கிறாராம் அண்ணாமலை. 'தடை விலகுமா...', என்பது இம்மாத இறுதியில் தெரிந்துவிடும்.! திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும் - அண்ணாமலை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம்; நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்! | Album
ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச
'அறிவாலய வசை, உடைந்து போன மனம்!' - தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்
மதிமுக, திமுக, அதிமுக என பல்வேறு கட்சிகளில் பேச்சாளராக முக்கியப் பொறுப்புகளில் இருந்த நாஞ்சில் சம்பத் இன்று விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கிறார். போயஸ் கார்டனில் உள்ள ஆதவ்வின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் பேசியவை இங்கே. அவர் கூறியதாவது, ``தம்பி விஜய்யை சந்தித்து பொன்னாடை அணிவித்து `நீயும் முதல்வன் ஆகலாம்’ புத்தகத்தை கொடுத்து தவெகவில் இணைந்தேன். ஆறு ஆண்டுகளாக எந்தக் கட்சியிலும் இல்லாமல் பெரியார், அண்ணாவின் லட்சியங்களை பேசிக் கொண்டிருந்தேன். விஜய்யை என்னை சந்தித்தவுடனேயே, 'நான் உங்களின் ரசிகன்!' என்றார். நாஞ்சில் சம்பத் வசைமாரி பொழிந்தார்கள் கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதால், அறிவாலயத்திலிருந்து வசைமாரி பொழிந்தார்கள். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள். உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாட வட சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு என்னிடம் தேதி வாங்கியிருந்தார். என் மனம் உடைந்து போனது கடந்த 28 ஆம் தேதி அந்த நிகழ்வில் பேசியிருந்தேன். அந்த நிகழ்வில் கரு.பழனிப்பன் என்னை நக்கல் செய்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு சுப.வீ என்னை திமுக மேடையில் வசைபாடினார். என் மனம் உடைந்து போனது. எந்த பரிந்துரைக்கும் நான் அவர்களிடம் சென்று நின்றது இல்லை. ஆனால், என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்து என் வயிற்றில் அடித்தார்கள். விஜய்க்கு ஆதரவாக பேசியதால் என்னை மிரட்டுகிறார்கள். நாஞ்சில் சம்பத் புதிதாக தொடங்கிய ஒரு அமைப்புக்கு பெரியாரையும் அம்பேத்கரையும் விஜய் கொள்கைத் தலைவராக முன்னிறுத்துகிறார். குலக்கல்வி சட்டத்தை எதிர்த்த இந்தியாவில் விடுதலைக்காக போராடிய காமராஜரையும் தலைவராக வைத்திருக்கிறார். லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக கொண்ட இயக்கம் தவெக. நாஞ்சில் சம்பத் தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு பாசறை நடத்த வேண்டும் என விஜய்யிடம் கூறினேன். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டு பிரிவுகளிடையே கலவரத்தை தூண்ட முனைகிறார்கள். அதில் விஜய் மௌனமாக இருப்பதே நல்லதுதானே. விஜய்யிடம் நீங்கள் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்கிறார்களே என கேட்டேன். அதற்கு விஜய், 'இங்கே ஆட்சி புரிபவர்களை வலுவாக எதிர்க்க வேண்டும். தேவை வரும்போது அவர்களையும் வலுவாக எதிர்ப்போம்' என்றார்.’ என முடித்துக்கொண்டார். TVK : 'விசுவாசம், தவிப்பு, சங்கடம்.!' - பனையூரில் தயங்கி நின்ற செங்கோட்டையன்!

அமெரிக்காவை அதிரவைத்த பேருந்து புறக்கணிப்பு போராட்டம்! 70 ஆண்டுகள் கடந்தும் கவனம்பெறும் `டிசம்பர் 5’
பேருந்துகள் என்பது வெறும் போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல. நவீன சமுதாயத்தின் கட்டமைப்பு. பேருந்துகள் என்பவை பலரது வாழ்வாதாரத்திற்கான கடத்து சங்கிலி, சாமானிய மக்களை வாழ்வின் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் இயங்கு சாதனம், விளிம்புநிலை மக்களை சமூக கட்டமைப்பிலிருந்து விடுவிக்கும் விடுதலை களம். 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், விஞ்ஞான வளர்ச்சியில் விண்வெளிக்கே ஏவுகணை ஏவும் இந்த காலகட்டத்தில், சாலை வசதி கேட்டும் , பேருந்து வசதி கேட்டும் அதிகார மையங்களில் மனு அளித்து போராடும் நிலைதான் இருக்கிறது என்பது மறுக்க முடியாதது. இன்றைக்கும் கிராமங்களில் பேருந்துக்கான போராட்டம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. 2021ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் பொடியன்குளம் கிராமத்திற்கென பேருந்து நிறுத்தமே இல்லாத நிலையில், மாற்று சாதியினர் வசிக்கும் பக்கத்து கிராமத்தில் சென்றுதான் பேருந்தைப் பிடிக்க வேண்டிய காட்சி நினைவிருக்கும். இத்திரைப்படத்தில் வரும் பேருந்துக்கான போராட்டம் என்பது ஒடுக்கப்பட்டோருக்கான சமத்துவ உரிமையை கோருகிறது. இந்த நிலை பல கிராமங்களில் இன்றும் நிலவும் சூழலில், உலகின் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமெரி நகரில் 70 ஆண்டுகளுக்கு முன்பு நிற பாகுபாட்டால், வெள்ளையினத்தவர் அமர வேண்டும் என்பதற்காக ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு ஒதுக்கப்பட்ட பேருந்து இருக்கையிலிருந்து எழ மறுத்த பெண்ணின் செயல், அடுத்த ஓராண்டு, அமெரிக்காவில் புரட்சிக்கான கனலை பற்ற வைத்தது. என்ன நிகழ்ந்தது? அன்றைய அமெரிக்காவில் பேருந்துகளில் வெள்ளை இனத்தவருக்கு என முன்பக்கங்களில் இருக்கையும் பின்புறத்தில் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு இருக்கையும் ஒதுக்கப்பட்டிருக்கும். டிசம்பர் 1,1955 அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமெரி என்ற நகரில் பேருந்து ஒன்றில் வெள்ளை இனத்தவர்க்கான இருக்கை முழுவதுமாக நிரம்பிவிட்ட நிலையில் ,வெள்ளை இனத்தவர்க்காக ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்த ரோசா பார்க்ஸை ஏழ பேருந்து ஓட்டுனர் கேட்டுக்கொண்டார். ஆனால் இதை கேட்க மறுத்த ரோசா பார்க், பயணத்திற்காக டிக்கெட் எடுத்துள்ளேன். இது எனக்கான இருக்கை, நான் எழமாட்டேன் என்று உறுதிப்பட கூறினார். இதனால் கோபமுற்ற பேருந்து ஓட்டுநர் காவலர்களை அழைத்து விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தினார். காவல்துறையோ சட்டப்படி நடக்காமல் அவருக்கு அபராத தொகை விதித்து கைது செய்தனர். இந்த நிகழ்வு அமெரிக்காவில் பெரும் புரட்சி தீயை பற்ற வைத்தது. மாண்ட்கோமெரியில் 70% பேருந்துகளை பயன்படுத்துவோர் ஆப்ரிக்க அமெரிக்க மக்கள். இந்த நிகழ்வால் பேருந்துகளை புறக்கணிக்க முடிவு செய்தனர். டாக்ஸிகளில் பயணம் செய்ய தொடங்கினர் . பணம் இல்லாதவர்கள் நடக்கத் தொடங்கினர். பேருந்தில் சென்று படிக்கும் நிலையில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் விடுதலைப் போராளி மாட்டின் லூதர் கிங் தலைமையில் இந்த போராட்டம் அமெரிக்கா முழுவதும் பரவியது. மேடைப் பேச்சுகள், துண்டறிக்கைகள் எனப் போராட்டங்கள் வேகமெடுத்தன. இந்த முடிவால் பேருந்து நிறுவனங்கள் நட்டத்தில் நடை போடத் தொடங்கின. ரோசா பார்க்ஸ் மீதான வழக்கு விசாரணையால் வேலை பறிபோனது. பொது இடங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு உரிய மரியாதையோடு இருக்கைகள் வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதி காட்டினார். டிசம்பர் 5, 1955 ல் தொடங்கிய பேருந்து புறக்கணிப்பு டிசம்பர் 20,1956 வரை,13 மாதங்கள், அதாவது 381 நாட்கள் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆப்ரிக்க அமெரிக்க மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. பேருந்துகளில் இரு வேறு பிரிவுகளுக்கு தனித்தனியாக இருக்கை இருப்பது சட்டப்படி குற்றம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மனிதன் எந்த நிறத்தில் இருப்பினும் சக மனிதரை மனிதர் மதிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமையை நிலைநாட்ட ரோசா பார்க்ஸ் தனது இருக்கையை தர மறுத்து போராடியது அமெரிக்க வரலாற்றில் ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் போராட்டத்தின் மைல்கல்.!

திருப்பரங்குன்றம்: `நீதித்துறை, இந்துத்துவா, திமுக - ஓரணியில் நின்று முறியடிப்போம்' - சீமான் அறிக்கை
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் விழாவில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் மலையின் உச்சியில் இருக்கக் கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்தது திமுக அரசு. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது. இதில் 'திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா?' எனக் கேள்வி எழுப்பியுள்ள சீமான், 'மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள் ஓர்மைப்படுவோம்!' என ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். சீமான் அறிக்கை மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுநாள்வரை பின்பற்றாத ஒரு நடைமுறையைச் சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற பிரிவினைகளுக்கே வழிவகுக்கும். இராமஜென்ம பூமியை வழிபடத்தான் போகிறோமென உச்ச நீதிமன்றத்தில் கூறிய இதே மதவாத கும்பல், பாபர் மசூதியை அயோத்தியில் என்ன செய்தது என்பதை நாடறியும். அதுபோல, மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணைநிற்பது வெட்கக்கேடானதாகும். திருப்பரங்குன்றம் கோவில் - தர்கா சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. மதம் கடந்த ஒற்றுமையைப் போற்றிக் காத்து வரும் மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதமோதலை உருவாக்குவதற்காகக் குறிவைத்து நடத்தப்படும் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத அரசியல் செயல்பாடுகள் யாவும் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட வேண்டியதாகும். முப்பாட்டன் முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் சிவன் கோயிலும், மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை. ‘உன் மதம் சிறந்ததென்றால் வழிபடு! என் மதமும் சிறந்ததது; வழிவிடு’ எனும் மதநல்லிணக்கக் கோட்பாட்டைப் பின்பற்றி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகச் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் மதுரை மண்ணின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்காவைக் குறிவைத்து, ‘சிக்கந்தர் மலை’ எனப் புதிய பெயரைப் புனைந்து, இசுலாமியர்கள் மலையை ஆக்கிரமிக்க முயல்வதாக அவதூறைப் பரப்பி, மதவுணர்வுகளைத் தூண்டக்கூடிய வேலையை இந்துத்துவ அமைப்புகள் செய்வது மிக ஆபத்தான அரசியலாகும். திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை என எந்த இசுலாமிய இயக்கமும் கூறாத சொல்லாடலை வலியத் திணித்து, திருப்பரங்குன்றம் மலைக்காகப் போராடுவதாகக் கூறும் பெருமக்களே! ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள மலைகள் எல்லாம் வேட்டையாடப்பட்டு, கனிமவளங்களாக அண்டை மாநிலங்களுக்கு அள்ளிச் செல்லப்படும்போது எங்கே போனீர்கள்? அப்போதெல்லாம் முருகன் மீதான உங்கள் இறைப்பற்று எங்கே போனது? தமிழ் வழிவந்த முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பல நூறு கோயில்களில் குடமுழுக்கும், வழிபாடும் செய்யக்கூட வழியற்ற நிலை தாய்த்தமிழ்நாட்டில் இருக்கிறதே? அதற்கெதிராக ஒருநாளும் நீங்கள் வீதிக்கு வந்து போராடியதில்லையே ஏன்? வாக்குவேட்டைக்காக சமூக அமைதியைக் கெடுக்க முயல்வதுதான் உங்களது ஆன்மீகப்பற்றா? வழிபாட்டுணர்வா? பேரவலம்! சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் முறை இசுலாமியச் சொந்தங்களிடையே பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனைச் சிக்கலாக்கி, அரசியல் ஆதாயம் தேட முற்படும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத்தவறிய திமுக அரசு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடச் சென்ற அபுதாஹீரைத் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்த காவலர்கள் மீது துறைசார்ந்து நடவடிக்கை எடுத்து, அங்கு பல ஆண்டுகளாக ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்யும் முறை இருக்கிறதென்பதை அரசுத்தரப்பு மக்களுக்கு எடுத்துரைத்திருந்தால் மதவெறியர்களின் அரசியல் சூழ்ச்சிகள் நடந்தேறியிருக்குமா? தும்பை விட்டுவிட்டு இப்போது வாலைப் பிடிக்கிற வேலையைச் செய்கிறது ஆளும் திமுக அரசு. ‘இந்துக்களின் விரோதி’ என மதவாதிகள் செய்யும் அரசியல் பரப்புரைக்குப் பயந்து, சமரசம் செய்துகொள்ளும் திமுக அரசின் கையாலாகாத்தனமே இந்தளவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. திருப்பரங்குன்றம்: திமுகவை கேள்வி எழுப்பும் சீமான் நாடு விடுதலை பெற்ற நாளில் எந்த நிலையில் வழிபாட்டுத்தலங்களும், அதன் தன்மையும் இருந்ததோ அதே நிலையே தொடர வேண்டுமென்கிறது 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டம். அச்சட்டத்தின்படி, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கெனவே இருந்த வழிபாட்டு முறைகளும், நடைமுறைகளுமே தொடருவதே சரியானதாக இருக்கும். அந்த வகையில், காலங்காலமாக தீபமேற்றும் இடத்தைவிடுத்து, தர்காவுக்கு அருகில் புதிய இடத்தில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற ஒன்றாகும். பொதுமக்கள் தங்களது மனஅமைதிக்காகவும், மெய்யியல் நம்பிக்கைக்காகவும் வழிபடும் வழிபாட்டுத்தலங்களையே பதற்றத்துக்குரிய இடமாக மாற்றுவது இழிவான அரசியலாகும். ‘நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமன்றம் எனும் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டால், அரசியலமைப்புச்சட்டம் தோல்வி அடைந்ததாகப் பொருள் என்கிறார்’ அண்ணல் அம்பேத்கர். அத்தகைய நிலையில், தற்காலச்சூழல் மாறியிருப்பது கெடுவாய்ப்பானதாகும். மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்துச் சமத்துவத்தை நிலைநாட்ட மண்ணின் மக்கள் தமிழர் எனும் இன உணர்வோடு திரள்வதே ஓர்மைக்கான ஒற்றைப் பெருவாய்ப்பாகும். திருப்பரங்குன்றம் மலையை வைத்து மதுரையில் மதமோதலை உருவாக்கி, மக்களைப் பிளவுபடுத்த முற்படும் சதிச்செயல்களை சாதி, மதம் கடந்து மொழியால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற இன அடையாளத்தோடு ஒற்றுமை உணர்வுடன் ஓரணியில் நின்று முறியடிப்போம்! என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். Seeman: காவல்துறையும் நீதித்துறையும் தனியார்மயமாகும்..! - கொந்தளித்த சீமான்

Indigo: மன்னிப்பு கேட்ட இண்டிகோ ; `இன்றிரவு முதல் விமான சேவைகள் சரியாகும்!’ - DGCA தகவல்
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இண்டிகோ நிறுவனம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கொண்டு வந்த விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்பட்டது. குறிப்பாக விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம், வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதிகளால் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. விமான சேவையின் பாதிப்பால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இதனைத்தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் சில புதிய விதிகளைத் திரும்பப்பெறுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதாவது புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டிற்கும் தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப்பெறுகிறோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. மேலும் “இன்று இரவு முதல் அனைத்து விமான அட்டவணைகளும் சரிசெய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானம் ரத்து செய்யப்பட்ட சூழலில், பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் தானாகவே முழு தொகையை திருப்பி அளிக்கும். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமையை நேரடியாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் விமான சேவை பாதிப்புக்காக இண்டிகோ நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறது. இதுத்தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கடந்த சில நாட்களாக உங்களுக்கு இருந்த சிரமங்களை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது. எங்களின் செயல்பாடுகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவருவோம். எங்கள் குழுக்கள் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துடன் இணைந்து வழக்கமான செயல்பாடுகளை மீட்டமைக்க முயற்சித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம்: ஆடு, கோழி பலியிட அறநிலையத்துறை எதிர்ப்பு ஏன்? - திமுகவை கேள்வி எழுப்பும் சீமான்
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் விழாவில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் மலையின் உச்சியில் இருக்கக்கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்தது திமுக அரசு. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது. இதில் திமுக அரசு மற்றும் மதவாத சக்திகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 'இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் சீமான் அறிக்கை: திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயமும், சிக்கந்தர் தர்காவும் பல ஆண்டுகளாக இருக்கையில், இரு சமயத்தவர்களும் எவ்விதப் பிணக்குமின்றி தங்களது நம்பிக்கைகளின்படி பன்னெடுங்காலமாக வழிபாடு செய்து வரும் நிலையில் இப்போது அதனைச் சிக்கலாக மாற்றி, பூதாகரப்படுத்தியது யார்? லட்சம் பேர் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வும், சித்திரைத் திருவிழாவும் சிறு சலசலப்புக்கும் இடங்கொடாவண்ணம் சமூக நல்லிணக்கத்தோடு சிறப்புற நடைபெறும் மதுரை மண்ணை மதப்பதற்றம் மிகுந்த பகுதியாக மாற்றி நிறுத்தியது யார்? பெரும் மதச்சிக்கலாக உருவெடுக்காவண்ணம் தடுத்து, தொடக்க நிலையிலேயே இருதரப்பையும் அழைத்து, ஒருமித்த முடிவுக்குக் கொண்டு வந்து தீர்வைப் பெற்றுத் தராது ஊதிப் பெரிதாக்க ஆளும் திமுக அரசு துணைபோனதேன்? சிக்கந்தர் தர்காவுக்கு ஆடு, கோழிகளை நேர்ந்து விடுதலும், அங்கு இறைச்சிகளை சமைத்து உண்ணுதலும் மத நல்லிணக்கத்தோடும், மிக இயல்பாகவும் நடந்தேறி வரும் நிலையில், திடீரென காவல்துறையினர் ஆடு, கோழியினைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்ததன் பின்னணி என்ன? அக்காவல்துறை அதிகாரியின் செயல்பாட்டைக் கண்டித்து, அவர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்காததேன்? திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் இறைச்சி உணவு சமைத்து உண்ணுவதற்கு எவ்விதத் தடையுமில்லை என அறிவிப்பாணை விடுவதற்குத் தயங்குவதேன்? கடந்த பிப்ரவரி 3 அன்று இச்சிக்கலை மையப்படுத்தி பாஜக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அன்றைய தினமே நீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்று, மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது? 144 தடையுத்தரவு இடப்பட்டிருக்கும் நிலையில் எப்படி இது சாத்தியமானது? பாஜகவின் கொடிகளுடன் கோயிலுக்குள் பாஜகவினர் அத்துமீறி செல்வதற்கு எப்படி அனுமதித்தது காவல்துறை? திருப்பரங்குன்றம் கோவில் - தர்கா கோவையைப் போல, மதுரையையும் மதப்பதற்றம் மிகுந்தப் பகுதியாக மாற்றுவதற்கு திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைச் சிக்கலாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் கூட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், அறநிலையத்துறை அமைச்சகம் நியாயத்தின் பக்கம் நிற்காது பாஜகவின் தரப்பை வலிமைப்படுத்துவதுபோல நடந்துகொள்வதேன்? யார் சொல்லி இப்படி செய்கிறார் அமைச்சர் சேகர்பாபு? என்ன செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்? இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக? இச்சிக்கல் தொடர்பான வழக்கில், தர்காவில் இறைச்சி உணவு உண்ணுகிற பழக்கம் காலங்காலமாக இருக்கும் நடைமுறையென திமுக அரசின் சார்பில் வாதிடாததேன்? மலையின் மீது ஆடு,கோழி பலியிட அறநிலையத்துறை எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறது? அமைதிப்பேச்சுவார்த்தையில், “ஆடு,கோழிகளைப் பலியிட்டால் மலையின் புனிதத்தன்மை கெட்டுவிடும்” என்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். ‘சிவன் மலை’ என்கிறார் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன். திமுக அரசு திட்டமிட்டு மதப்பூசலை உருவாக்க நினைக்கிறதா? திருப்பரங்குன்றம் மலை தர்கா சிக்கல் குறித்து விவாதிக்க மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோதும் அதற்குப் பொறுப்பேற்றுப் பதில்சொல்லாது முதல்வரும், அமைச்சர்களும் கடந்துபோனதேன்? சேகர் பாபு 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டமானது, வழிபாட்டுத்தலம் நாட்டு விடுதலையின்போது என்ன மதத்தன்மையைக் கொண்டிருந்ததோ அதே நிலை நீடிக்கவே வழிவகை செய்கிறது. அந்தடிப்படையில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு, கோழியைப் பலியிட்டு சிக்கந்தர் தர்காவில் நடந்தேறி வரும் வழிபாட்டு முறை மீது இப்போது திடீரென திமுக அரசின் அறநிலையத்துறை தடைவிதிக்க முற்படுவது சட்டவிரோதம் இல்லையா? தனது ஆளுகைக்குக் கீழ் இருக்கும் அரசு அதிகாரிகளை சரியாக வழிநடத்த வேண்டியதும், நிர்வாக மேலாண்மை செய்ய வேண்டியதும் ஆளும் திமுக அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும். திமுக அரசின் மோசமான நிர்வாகத்தால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் முதல் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்கிற சிக்கல்வரை எல்லாவற்றிலும் அதிகார வர்க்கம் செயலிழந்தும், தவறான பாதையிலும் செல்கிறது. இதற்குத் முழுப்பொறுப்பு கொண்ட மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின். அவர்கள் வெறுமனே அதிகாரிகளைக் கைகாட்டித் தனது பொறுப்பையும், கடமையையும் தட்டிக்கழிப்பது நியாயமா? சிக்கந்தர் தர்காவை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோமென கொக்கரித்து சங் பரிவார் கூட்டம் அவதூறுகளைப் பரப்பி, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்து விடும் நிலையில், இசுலாமிய மக்களின் வழிபாட்டுரிமைக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய திமுக அரசு கள்ளமௌனம் சாதிப்பதும், அறநிலையத்துறை மூலமாக எதிர்நிலைப்பாடு எடுப்பதும் பச்சைத்துரோகம் இல்லையா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். திருப்பரங்குன்றம்: நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் விவகாரம்: ``நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்'' - எம்.பி கனிமொழி
திருப்பரங்குன்ற விவகாரம் தமிழகம் மட்டுமன்றி, நாடாளுமன்றம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ‘தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத சக்திகள் முயற்சி’ என ஒரு தரப்பினரும், ‘இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசு’ என்று இன்னொரு தரப்பினரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். டி.ஆர்.பாலு இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி தி.மு.க எம்.பி-க்கள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தி.மு.கவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கினார். இதேபோல் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். இந்நிலையில், இரு அவைகளிலும் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸை ஏற்க முடியாது என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அதை மறுத்துள்ளார். இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கனிமொழி பேசுகையில், ``நீதிமன்ற தீர்ப்பிலே குறிப்பிட்டப்பட்டிருந்தது போல, கோயில் நிர்வாகமும், அறநிலையதுறையும் சேர்ந்து கார்த்திகை தீபத்தை மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் கோயில் தீபத் தூணிலே ஏற்றியிருக்கிறார்கள். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் திடீரென்று எந்த மதத்திற்கும் சம்பந்தமே இல்லாத, ஆங்கிலேயர் காலத்திலே வைக்கப்பட்ட நில அளவை கல் மீது ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இது இந்து மதத்திற்கு எதிராக, இந்து மக்களின் மனநிலையை உண்மையிலேயே புண்படுத்தக்கூடிய செயல். கோயிலுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கல்லிலே தீபம் ஏற்றப்பட வேண்டும் என, பிரச்னைகளை உருவாக்குவதற்காகவே ஒரு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம்: வன்முறையைத் தூண்டும் விதம் பேசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்- பா.ரஞ்சித் நீதியரசர் சுவாமிநாதன் தேவையில்லாமல் தலையிட்டு தீர்ப்பு எனும் கட்டளைகளை பிறப்பித்திருக்கிறார். தமிழ்நாடு காவல் துறையை தாண்டி, மத்திய போலீசையும் அனுப்பியிருக்கிறார். இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க அங்கே மத கலவரத்தை உருவாக்க துடிப்பது தெரிகிறது. அங்க வாழும் பொதுமக்களுக்கு கூட அச்சத்தை ஏற்படுத்ததும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை, கண்கூடாக பார்க்கிறோம். பா.ஜ.க தலைவர்கள் முதல் பா.ஜ.கவைச் சார்ந்தவர்களின் சமூக ஊடகங்கள் வரை எல்லோரும் 'திருப்பரங்குன்றம் இன்னொரு அயோத்தியாவாக மாற்ற வேண்டும்' எனப் பேசுகிறார்கள். அவர்கள் என்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கிரண் ரிஜிஜு இன்று நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னையை நாங்கள் எழுப்பிய போது, பாராளுமன்றத்தின் பொறுப்பு அமைச்சர் கிரண் ரிஜு, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவைப் பார்த்து, 'நீங்கள் பேசுவது உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல' என்று மிரட்டும் வகையில் பேசியிருப்பது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமில்லாமல், ஜீரோ நேரம் உறுப்பினர்களின் நேரம். அந்த நேரத்தில் அமைச்சர் முருகன் தேவையில்லாமல் மிக நீண்ட ஒரு உரையை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். அவர் உரையில் பல பொய் பிரசாரங்களை அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பேசினார். தமிழக அரசின் மீதும், தமிழக மக்கள் மீதும் ஒரு காழ்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான், அவருடைய உரை அமைந்திருந்தது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து பா.ஜ.க-வின் அரசியல் வியூகம் மத கலவரத்தை உருவாக்குவது தான் என்பதை நாம் பல மாநிலங்களின் உதாரணங்களை வைத்து அவதானிக்க முடியும். அமித் ஷா தமிழ்நாட்டில் அவங்கள் எவ்வளவு முயற்சி செய்தும், அவர்களுக்கு வாக்களிக்க தமிழ் மக்கள் தயாராக இல்லை. இதைப் புரிந்து கொண்டுதான், ஒரு மத கலவரப் பிரச்னையை உருவாக்கி அரசிற்கு கெட்ட பெயரை உருவாக்கி விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் முதலில் தமிழர்களாக தங்களை உணர்ந்தவர்கள். திருப்பரங்குன்றம் : திமுக அமைச்சர் சொன்ன பொய்கள்.! - அண்ணாமலை காட்டம் அடுத்து அவர்களுக்கு யார் தங்களுக்காக பாடுபடுகிறார்கள், பெரும்பான்மை மக்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு யார் உழைக்கிறார்கள், யார் மக்களை பிளவுபடுத்தி ஆபத்திலே தள்ள நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டவர்கள். அதனால், இதுபோன்றப் பிரச்னைகளை உருவாக்குவது எந்த காலத்திலும் பிரச்னைகளை உருவாக்குபவர்களுக்கு பயன்படாது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திலே அத்தனை கட்சிகளும் எங்களோடு இணைந்து போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டார்கள். எங்களோடு நின்றார்கள். மணிப்பூர் கலவரம் திருப்பரங்குன்றம் விவகாரம் மாதிரி, நீதிமன்றத்தை பயன்படுத்தி மணிப்பூரிலும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகுதான் அங்கு கலவரம் வெடிக்கும் சூழல் உருவானது. நீதிமன்றத்தை பயன்படுத்தி கலவரங்களை உருவாக்குவது மிகவும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதை மக்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு, இந்த ஆட்சியில் எத்தனையோ கோயில்களில் கும்பாபிஷேகம், திருவிழா எனப் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளையும் தொடர்ந்து அறநிலையத்துறை செய்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் மக்களுக்கு இடையூறுகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள் நாங்கள் அல்ல. ஆனால் இப்போது திருப்பரங்குன்றத்தில் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழலை உருவாக்கி, அரசியல் குளிர்காய்வதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவரைக்கும் எந்த காலத்திலும் இந்துக்கள் திருப்பரங்குன்றத்துக்கு போக முடியாத ஒரு சூழ்நிலை இருந்ததே இல்லை. கோயில் செல்பவர்கள் கூட எல்லா இடத்துக்கும் சென்றுவிட்டுதான் வருகிறார்கள். அப்படியான இணக்கமான சூழலைதான் நாம் தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் ஆனால், இப்போது யாருமே அங்கு நிம்மதியாக போக முடியாத ஒரு நிலையை பா.ஜ.க உருவாக்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பக்தர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்திவருவதால், பக்தர்கள் கோயில் சென்றுவருகிறார்கள். இது எங்களின் ஈகோ பிரச்சனை அல்ல. ஒரு அளவீட்டு கல் மேல் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் இந்துகளின் மனதை புண்படுத்தும். ஆகம விதிகள் குறித்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்கள், அந்த ஆகம விதிகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கக்கூடிய வகையில், அடுத்த நாளும் தீபத்தை ஏற்றுவதும் இந்துகளின் மனதைப் புண்படுத்தும். எங்கள் மீது பழி சுமத்த வேண்டும் என நினைக்கக்கூடியவர்கள், உண்மையிலேயே மக்களை புண்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டு மக்களை தன் அரசியலுக்காக ஒவ்வொரு நாளும் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றே ஒன்றைக் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்... தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. மத பிரச்சனைகள் இல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருக்கிறது. பா.ஜ.க ஆட்சி இருக்கக்கூடிய எந்த மாநிலத்திலாவது மதநல்லிணக்கமும், அமைதியும் இருக்கிறதா? அப்படியானால் மத பிரச்னைகள் உருவாக்குவது யார்? அப்படிப்பட்ட பிரச்னைகள் இல்லாமல், மனிதர்கள் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை திமுக ஆட்சி உருவாக்கி தந்திருக்கிறது. அதை இவர்கள் குலைக்க பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள். என்றார். முருகன் கோயிலில் தரிசனம்; பள்ளிவாசலில் உரையாடல்! - திருப்பரங்குன்றத்தில் திருமாவளவன்

திருப்பரங்குன்றம் : திமுக அமைச்சர் சொன்ன பொய்கள்.! - அண்ணாமலை காட்டம்
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்த வழக்கில் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார். இந்த தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த அவர் உத்தரவிட்டும், மாநில அரசு செயல்படுத்தவில்லை. தீர்ப்பை மேல்முறையீடு செய்வதாக தெரிவித்துள்ள அரசு, அதனை நிறைவேற்றாததற்கான காரணங்களை தெரிவித்தது. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ``இதுதொடர்பாக 2014ம் ஆண்டு இரு நீதிபதிகளின் டிவிஷன் அமர்வு அளித்த தீர்ப்பை அரசு பின்பற்றுவதாக” கூறினார். மேலும் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் திருப்பரங்குன்றம் பிரச்னையை வைத்து மத மோதலை உருவாக்க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம்: நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்? இந்த நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசே மத மோதலை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டியதுடன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பில் தவறு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ரகுபதி சொன்ன பொய்கள் - 1862 முதல் இருக்கும் பிரச்னை அண்ணாமலை, நீதி அரசர் அவர்களுடைய தீர்ப்புக்குப் பிறகு அதை மதிக்காமல், ஒரு மத மோதலை உருவாக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் திராவிட முன்னேற்றக் கழக அரசு இறங்கி இருக்கிறது. மதுரை உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பு, அதன் பிறகான நீதிமன்ற அவமதிப்பு உங்களுக்கு தெரியும். நான் கொஞ்சம் பின்னாடி இருந்து ஆரம்பிக்கிறேன். 1862-லிருந்து இது ஒரு ஆவணப்படுத்தப்பட்ட பிரச்னையாக இருக்கிறது. 1862, 1912 ஆண்டுகளில் மலையின் உச்சியில் விளக்கு அமைக்க முயற்சி செய்தபோது ஆங்கிலேயே அரசு மதக் கலவரம் வரக் கூடும் எனக் கூறி மறுத்திருப்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் 1923-ம் ஆண்டு நெல்லித்தோப்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சமமான உரிமைகொண்ட பகுதியாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் மலை உச்சியில் இருக்கும் தர்கா மற்றும் வழியில் உள்ள படிகட்டுகள் மட்டும்தான் இஸ்லாமியர்கள் கையில் இருப்பது. மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம் எனக் கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போதைய மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கின்றனர். நீதிமன்றம் இந்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. 1930 காலகட்டத்தில் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிரிவி கவுன்சில் 1923 தீர்ப்பை உறுதி செய்தது. மலையில் குவாரி வந்தபோதும், மரம்வெட்ட வந்தபோதும் கோயில் நிர்வாகம் இடத்தை பாதுகாத்தது. 1990 காலகட்டத்தில் இந்து முன்னணி உச்சியில் உள்ள தூணியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை போராட்டமாக நடத்தினர். அதன்பிறகு சமீபத்தில் ஒரு பக்தர் உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கேட்கிறார். கோயிலின் EO அதனை மறுக்கிறார். அதன்பிறகு ராம ரவிக்குமார் என்ற பக்தர் மதுரை கிளையில் மனு கொடுக்கிறார், அதன்படி டிசம்பர் 1ல் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு தீர்ப்பை வழங்குகிறார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியின் தீர்ப்பு சரியானது நெல்லித்தோப்பு, படிகட்டுகள் மற்றும் சிக்கந்தர் தர்கா இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்பதில் நீதிபதி தலையிடவில்லை. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வேண்டுமென்றே சில பொய்களை சொல்லியிருக்கிறார். 'இந்த பிரச்சினை 2014லேயே முடிந்துவிட்டது. அப்போதே டிவிஷன் பென்ச் உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்ற தீர்ப்பளித்துவிட்டனர். நீதிபதி தவறான தீர்ப்பை வழங்கியிருகிறார்' என்றவிதத்தில் ரகுபதி பேசியிருந்தார். ஆனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த தீர்ப்பையும் குறிப்பிட்டே தீர்ப்பு வழங்கியிருந்தார். அந்த 2014 மனுவில் மனுதாரர் மலையின் உச்சியில் தீபம் ஏற்றக் கோரியிருந்தார். ஆனால் மலை உச்சி இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதனால் நீதிபதி 2017ம் ஆண்டு தீர்ப்பிலும் அந்த கோரிக்கையை நிராகரித்தார். ஆனால் இப்போது மனுதாரர் உச்சியில் உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற அனுமதி கேட்கிறார். சிக்கந்தர் தர்கா்காவில் இருந்து சில 50 மீட்டர் தூரத்தில்தான் தீபத்தூண் உள்ளது. இதில் ஏற்றதான் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதேப்போல 1996ம் ஆண்டு தீர்ப்பையும் திமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். அந்த தீர்ப்பு அந்த ஆண்டுக்காக வழங்கப்பட்டது. 1996, 2014, 2017 தீர்ப்புகள் வேறுவேறு கோரிக்கைகளுக்காக வழங்கப்பட்டது. ஆனால் ரகுபதி இவற்றை சேர்த்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தவறான தீர்ப்பை வழங்கியதுபோல சித்தரிக்கிறார். மலையின் உச்சியில் தர்கா் இருக்கிறது. தீபத்தூண் சிறிய உச்சியில் இருக்கிறது. இதில்தான் தீபம் ஏற்ற 1.12.2025ல் அனுமதி வழங்கப்பட்டது. என்கிறார். காவல்துறை அனுமதிகொடுக்கவில்லை என 'சாக்கு' சொல்லக் கூடாது - விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்!

Thiruparankundram issue: சனாதன தீர்ப்பு -நீதிபதி GR Swaminathanஐ விளாசும் நீதியரசர் Hariparanthaman
Indigo: விமான சேவை பாதிப்பால் அவதியுற்ற பயணிகள்; விதிமுறைகளைத் திரும்ப பெற்ற DGCA
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இண்டிகோ நிறுவனம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது. குறிப்பாக விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம், வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதிகளால் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. விமான சேவையின் பாதிப்பால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் , புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டிற்கும் தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப்பெறுகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம்: வன்முறையைத் தூண்டும் விதம் பேசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்- பா.ரஞ்சித்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம், மாநில அளவில் பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது. இதில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று மீண்டும் உத்தரவிட்டதையடுத்து, தமிழக அரசு அந்த உத்தரவுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவோடு இரவாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இரண்டு நாள்களில் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் இவற்றுக்கு மத்தியில், ``மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முயல்கின்றன. 2014-ம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின்படி வழக்கமாக எங்கு தீபம் ஏற்றப்படுமோ அங்குதான் தீபம் ஏற்றப்படுகிறது. அந்தத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யாமல் தனியாக மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி வாங்கினால் அதை எப்படி நிறைவேற்றுவது என அமைச்சர் ரகுபதி நேற்று விளக்கமளித்தார். மறுபக்கம், பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, ``உயர் நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பைத் திரித்து அமைச்சர் பொய் சொல்கிறார். மத மோதலை ஏற்படுத்த தமிழ்நாடு அரசுதான் முயல்கிறது என இன்று விமர்சித்திருக்கிறார். திருப்பரங்குன்றம்: மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை - கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் இந்த நிலையில் திரைப்பட இயக்குநரும், நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனருமான பா. ரஞ்சித் , ``சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது. பா.ரஞ்சித் அதன்படியே மக்களிடையே சுமூகமான நல்லிணக்கம் பேணப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கில் புதிய குழப்பங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ப்பாக பாரதிய ஜனதாவும் அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக இதைக் கையிலெடுத்திருக்கிறார்கள். தர்காவை அப்புறப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அயோத்தியாக மாற வேண்டுமென பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்களும் இந்துத்துவவாதிகளும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப்… — pa.ranjith (@beemji) December 5, 2025 மேலும், சமூக நல்லிணக்கம் சிதையும் அபாயம் உள்ள இத்தகைய வழக்குகளில் இந்தப் பின்னணியை மனதில் வைத்தே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். பன்முகத்தன்மையைச் சிதைத்து, சிறுபான்மை சமூகங்கள் மீது குறி வைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சங் பரிவார அமைப்புகளைக் கடுமையாக எச்சரிப்பதோடு, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள், செயல்படுகிறவர்களைக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசைக் கோருகிறது என்று வலியுறுத்தியிருக்கிறார். திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்... சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ - க.கனகராஜ் | களம் 1

மக்களவையில் திருப்பரங்குன்ற விவகாரம்: பாஜக VS திமுக இடையே நடந்த காரசார விவாதம்!
திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் வழக்கம்போல இந்த ஆண்டும் ஏற்றப்பட்டது. எனினும் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் சிலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்து அனுமதி பெற்றிருந்தனர். எனினும் அந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. ஏன் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை என்று இந்து அமைப்புகள், பாஜகவினர் ஆர்ப்பாட்டத்திலும், சட்டப்போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம்: மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை - கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்து அமைப்பினர் திருப்பரங்குன்ற மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றியாக வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான சட்டப்போராட்டம் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், இன்றைய மக்களவைக் கூட்டத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு மற்றும் பாஜக எம்.பி முருகன் இருவரிடையே இதுதொடர்பான விவாதம் காரசாரமாக நடந்தது. கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்தனர். திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து மக்களவையில் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, திருப்பரங்குன்ற சுப்பிரமணியசுவாமி கோவிலில் பல ஆண்டுகால மரபுப்படி கடந்த டிசம்பர் 3ம் தேதி உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், மக்களிடையே அமைதியையும், மதநல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் சில இந்து அமைப்புகள் கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்தனர். அதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் நீதிபதி ஒருவர். நாட்டை ஆளும் கட்சி மதரீதியான கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது, நீதிபதிகளையே கட்டுப்படுத்தும் அளவிற்கு அராஜகங்களைச் செய்துவருகிறது. என்று பாஜகவை குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம் போலீஸ் பாதுகாப்பு திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா? இதற்குப் பதிலளித்த பாஜக எம்.பி. எல் முருகன், திருப்பரங்குன்றத்தில் மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறித்திருக்கிறது தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தும் திமுக அரசு. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறது. திமுக அரசிற்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா? இந்தியச் சட்டம் மக்கள் ஒவ்வொருவருக்கும் வழிபாட்டு உரிமையை வழங்கியிருக்கிறது. அந்த அடிப்படை உரிமையை மறுத்து சட்டத்திற்கு எதிரான வேலையைச் செய்திருக்கிறது திமுக அரசு என்று பேசியிருக்கிறார். டி.ஆர்.பாலு, எல்.முருகன் இதையடுத்துப் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி நீங்கள் தாராளமாகப் பேசலாம். ஆனால், நீதிபதியை கட்சியுடன், அமைப்புடன் தொடர்புப்படுத்திப் பேசுவது தவறு. நீதிமன்றத்தை அவமதிக்கும் பேச்சு இது. நீதிபதிகுறித்து எம்.பி. டி ஆர் பாலு பேசியதை மக்களவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

Indigo: மத்திய அரசின் அதிகார நோக்கமே இண்டிகோ நிறுவனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் - ராகுல் காந்தி
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இண்டிகோ நிறுவனம் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை கொண்டு வந்த DGCA விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மத்திய அரசின் தனி அதிகார நோக்கமே இண்டிகோ நிறுவனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம். விமான நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள் விமான தாமதங்கள், சேவை ரத்துகளால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் 'மேட்ச் ஃபிக்சிங்' செய்யாமல் நியாயமான போட்டிகள் நடைபெற வேண்டும்” என்று ராகுல் காந்தி பதிவிட்டிருக்கிறார். Indigo Cancelled : 'அவதியுறும் பயணிகள்; அவஸ்தைப்படும் ஊழியர்கள்' - சென்னை விமான நிலைய ஸ்பாட் விசிட்

'இதுதான் திராவிட மாடலா?' - தலைமைச் செயலகம் நோக்கி தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்த காவல்துறை
சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 ஐ சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று குறளகம் அருகே இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற 800 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து அந்த மண்டலங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 2000 தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ரிப்பன் பில்டிங் வெளியே போராட்டத்தை தொடங்கினர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் போராடி தூய்மைப் பணியாளர்கள் கைதாகியிருந்தனர். போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில் உயர் நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் இன்று தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிராட்வே குறளகம் முன்பிருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்று முதல்வரிடம் மனு கொடுக்க திட்டமிட்டிருந்தனர். குவிக்கப்பட்ட காவலர்கள் இதனால் முன்னெச்சரிக்கையாக இன்று காலை 8 மணி முதலே குரளகம் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசாரும் போராட்டக்காரர்களை கைது செய்ய 30 க்கும் மேற்பட்ட வேன்களும் பேருந்துகளும் குவிக்கபட்டது. சரியாக 11 மணிக்கு பேரணியை தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் முதல்வருக்கு எதிராகவும் மாநகராட்சி ஆணையருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பிக் கொண்டே முன் நகர்ந்தனர். 'இதுதான் திராவிட மாடலா...இதுதான் சமூக நீதியா...' 'மாநகராட்சி ஆணையர் ராம்கி நிறுவனத்தின் புரோக்கராக செயல்படுகிறார்...' போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். குறளகம் சிக்னலில் அவர்களை மறித்த காவல்துறையினர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களை பேருந்துகளில் ஏற்றி அப்புறப்படுத்தினர். காவல்துறையின் தரப்பில் தலைமைச் செயலர் சந்தித்து மனு கொடுக்க ஏற்பாடு செய்து தருவதாக சமாதானம் பேசப்பட்டிருக்கிறது. Sanitary Workers : கொளத்தூரில் முதல்வரை எதிர்த்து தூய்மைப் பணியாளரை போட்டியிட செய்வோம்! - கு.பாரதி
திருப்பரங்குன்றம்: மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை - கோவில் நிர்வாகத்துக்கு கடிதம்
திருப்பரங்குன்ற மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோவிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு இந்து அமைப்புகள் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்றிருந்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தார். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? ஆனால், மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என மறுத்தது தமிழ்நாடு காவல்துறை. இதை மீறி மலை உச்சிக்குச் செல்ல முயற்சி செய்த இந்து அமைப்பினர் தடுக்கப்பட்டதால் காவல்துறை - இந்து அமைப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் மீது சிலர் தாக்குதலும் நடத்தினர். இந்தப் பதற்றமான சூழலில் அன்று மதுரை மாவட்ட ஆட்சியரால் 144 உத்தரவு போடப்பட்டு இப்பிரச்னை அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை முடிந்தாலும் பரவாயில்லை திருப்பரங்குன்ற மலை உச்சி தீபத்தூணில் விளக்கு ஏற்றியாக வேண்டும் என இந்து அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், கார்த்திகை நாள் அன்று மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலில் எப்போதும் போல தீபம் ஏற்றப்பட்டது. மற்ற நாட்களில் மலையில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்று அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பட்டர்கள் கோவில் ஆணையருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள் திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு திருப்பரங்குன்றம்: 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு அதில், சிவாகமங்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது சொல்லப்பட்டிருக்கின்றது. அத்தகைய திருக்கார்த்திகையன்று அதிவாசங்களுடன் கூடிய தீபத்தை திருக்கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், பிரகாரங்கள், திருக்கோவில் சமீபத்தில் உள்ள மலைகள், கிரிவலப் பாதைகள் ஆகிய இடங்களில் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களாக அமைகின்றது. மேலும் கார்த்திகை மாதம் வருகின்ற கார்த்திகை நட்சத்திரத்திலோ அல்லது பௌர்ணமியிலோ தீபம் ஏற்றுவது உத்தர காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ளது. இதர நாட்களில் செய்யப்படுவது விஷேடமாக சொல்லப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? அருள்மிகு ஆண்டவர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையர் | நிர்வாக அதிகாரி அவர்களுக்கு திருக்கோயில் ஸ்தானீக பட்டர்கள் எழுதிக்கொண்டது. இந்த ஆண்டும் 03.12.2025 புதன்கிழமை அன்று மாலை 6 மணியலவில் இத்திருக்கோவில் வழக்கப்படி திருக்கோவிலுக்குள் பால தீபம் ஏற்றிய உடன் அதே நேரத்தில் வழக்கமாக ஏற்றக்கூடிய உச்சிபிள்ளையார் கோவிலில் தீபமண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு பின்பு சுவாமி புறப்பாடாகி, பதினாறுகால் மண்டபம் எதிரே உள்ள இடத்தில் சொக்கமாண் ஏற்றி சுவாமிக்கு சாற்றப்பட்டது என்ற விபரத்தினை இதன் மூலம் தெறிவித்துக்கொள்கிறோம். மற்ற நாட்களில் மலை மீது தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டிருக்கிறது.

அதிமுக: தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை - ஓ.பன்னீர்செல்வம்
நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜ.க-விடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவம் குறைந்தது. குறிப்பாக, தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கோரியும், ஓ.பி.எஸுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்த அதிருப்தியால் என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி சென்னையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய ஓ.பி.எஸ், 'வரும் 15-ம் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும்' என்று கூறினார். இதனிடையே பா.ஜ.க-வின் அழைப்பின் பேரில் தனது மகனுடன் டெல்லி சென்றதாகக் கூறப்படுகிறது. Ahmedabad Plane Crash - அமித் ஷா டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. மேலும் டெல்லியில் முகாமிட்டிருந்த ஓ.பி.எஸ், பாஜகவைச் சேர்ந்த மற்ற தலைவர்களைச் சந்தித்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், சென்னை வந்த அவர், ``தமிழக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன் என்றார். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இயக்கத்தை, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வழிநடத்தி நிலை நிறுத்தினார்கள். அந்த நிலை மீண்டும் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதுதான் கழகத்தின் அடிப்படை தொண்டர்களின் எண்ணம் என்பதை டெல்லியில் தெரிவித்திருக்கிறேன். நான் எந்தச் சூழலிலும் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை. தவெக-வில் இணைந்திருக்கும் செங்கோட்டையனை நானும் தொடர்புகொள்ளவில்லை. அவரும் என்னிடம் பேசவில்லை. ஓ.பி.எஸ் என்னுடைய அடுத்தக்கட்ட நகர்வு தமிழக மக்கள், கழகத் தொண்டர்கள் எண்ணப்படி இருக்கும். தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. இன்னும் ஆறு மாதம் இருக்கிறது, பொறுமையாகப் பேசலாம். அதிமுக-விலிருந்து பலர் கட்சி மாறுகிறார்கள் என்றால், இது ஜனநாயக நாடு யார் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், அதிமுக தொண்டர்களின் பலம் எந்தச் சூழலிலும் பழுதுபடாது. அதிமுக எத்தனையாகப் பிரிந்திருந்தாலும் எங்கள் நோக்கமும், கொள்கையும் ஒன்றுதான். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுசேர வேண்டும் என்றுதான் டெல்லி சென்று அமித் ஷாவிடம் சொல்லிவிட்டு வந்தேன் எனப் பேசியிருக்கிறார். ``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

Indigo issue: சென்னை விமான நிலையத்தில் என்னதான் நடக்குது? | Full Details | Vikatan

கொங்கு அரசியலில் பரபரப்பு: திமுக அமைச்சரை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி! - காரணம் என்ன?
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கொங்கு திருப்பதி கோவில் அமைந்துள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட கோவில் அப்புறப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. இதனால் கடந்த மூன்று வருடங்களாக கோவில் பூட்டப்பட்டிருந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் முத்துசாமியின் முயற்சியால், இக்கோவில் இந்து அறநிலையத்துறை வசம் ஏற்கப்பட்டது. கடந்த 24.11.2025 அன்று சுதர்சன யாகம் நடத்தப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு கோவில் திறக்கப்பட்டது. நேற்று பௌர்ணமி மற்றும் நட்சத்திர பூஜை கோவிலில் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சுவாமி தரிசனம் இந்த நிலையில், நேற்று காலை கொங்கு பெருமாள் கோவிலுக்கு குமாரபாளையம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி அதிமுக நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார். பின்னர், கோவிலில் சிறிது நேரம் காத்திருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்கு எம்எல்ஏ சந்திரகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கோவிலுக்கு வந்தனர். அமைச்சர் முத்துசாமி வணக்கம் தெரிவிக்க, அவரை முன்னாள் அமைச்சர் தங்கமணி கை கொடுத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். பின்னர், இருவரும் இணைந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தை அமைச்சர் முத்துசாமி மற்றும் தங்கமணி அரைமணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு இருவரும் தனித்தனியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அமைச்சர் முத்துசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி இந்த சந்திப்பு தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நீண்டகாலமாக பூட்டி இருந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று திறந்துள்ளது. கோவில் வளாகத்தில் மேலும் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொகுதியின் எம்.எல்.ஏ தங்கமணியுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அரசியல் எதுவும் பேசவில்லை என்றார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து, இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் அங்கிருந்து வருவார்கள் என்று கூறிய நிலையில், அமைச்சர் முத்துசாமியை முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்து அரைமணி நேரம் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
`ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி' - குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிப்பதற்காக ஆணுறைகள் மற்றும் பிற கருத்தடைப் பொருட்களின் விலையை உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளாக வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் போன்றவை, அண்மையில் அறிவிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு வரிச் (Value-added Tax - VAT) சட்டத்தின் கீழ், வரி விலக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதிகரிக்கும் பாலியல் நோய்கள் சீன அரசு 'ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை' என்ற கொள்கையை வலியுறுத்தி வந்தபோது இந்த வரி விலக்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தற்போது ஒரு ஆணுறை $0.60 (இந்திய மதிப்பில் சுமார் 50 ரூபாய்) என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. இது ஆஸ்திரேலியாவின் சில்லறை விலையில் பாதியாகும். ஆனால் வரி விதிப்புக்குப்பிறகு இந்த நிலை எப்படியாக மாறும் எனக் கூற முடியாது. தற்போதைய தகவல்கள் படி 13% வரிவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Chinese Students இந்த வரி விதிப்பு, பெண்கள், இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ஒரு பின்னடைவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், இது பாலின சமத்துவத்தைப் புறக்கணிப்பதோடு, கருத்தடை மிகவும் தேவைப்படுவோருக்குக் கிடைப்பதை மேலும் கடினமாக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் நோக்கில், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களுக்கு கருத்தடைப் பொருட்களைக் கிடைக்கும்படி வைத்திருப்பது மிகவும் முக்கியம். சில நாடுகள் இளைஞர்களுக்கு ஆணுறைகளை இலவசமாகக் கூட கொடுக்கும் இடத்துக்கு நகர்ந்துள்ளன. ஆனால், இதற்கு வரி விதிப்பது, ஆணுறை கிடைப்பதை தடுப்பதோடு, நோய்த்தொற்று தடுப்பு முயற்சிகளையும் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் வெளியான ஓர் ஆய்வு, சீனாவில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பும், இறப்பு விகிதமும் சமீபத்திய ஆண்டுகளில் உயர்ந்து வருவதைக் காட்டுவது குறிப்பிடத்தக்கது. சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசின் மக்கள்தொகை கொள்கை மக்களைப் பற்றியது அல்ல தற்போது பிறப்பு விகிதம், 'மக்கள்தொகைக் கட்டுப்பாடு' என்ற நிலையில் இருந்து 'கருவுறுதலை ஊக்குவித்தல்' என்ற நிலைக்கு சீனா மாறியுள்ளது. சீனாவின் கடுமையான 'ஒரு குழந்தை கொள்கை' ஒரு தசாப்தத்திற்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. 2016-ல் 'இரண்டு குழந்தை கொள்கை' எனவும், பின்னர் 2021-ல் 'மூன்று குழந்தை கொள்கை' என்றும் அது மாற்றப்பட்டது. கருத்தடைப் பொருட்கள் வரி விலக்கை இழந்த நிலையில், திருமணத் தகவல் மையங்கள் இப்போது புதிதாக வரி விலக்கு அளிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. சீன அரசு ஊடகங்கள், பெண்கள் பல்கலைக்கழகப் படிப்புக் காலத்திலேயே திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்து வருகின்றன. இது பெண்களின் கல்வி மற்றும் தொழில் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் என்று அமைப்புகள் எச்சரிக்கை விடுக்கின்றன. இந்த புதிய வரி விதிப்பு ஒரு பொருளாதாரச் திருத்தம் மட்டுமல்ல, குடும்பம், திருமணம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை அரசு அணுகும் விதத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய அரசியல் மாற்றம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். Chinese Pregnant Woman சீனாவின் அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் படித்துக்கொண்டே பெற்றோருக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றியும், வளாகத்தில் குழந்தைகளைப் பெறுவதன் சமூக நன்மைகளைப் பற்றியும் செய்தி வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன. குறைந்த வயதிலேயே திருமணம் மற்றும் பெற்றோருக்குரிய அழுத்தம், எதிர்காலத்தில் பெண்களின் கல்வி முடிவுகளை எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்விகளை இது எழுப்புகிறது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறைந்த வயது பெற்றோர்களை உருவாக்குவது இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான சரியான வழியாக இருக்க முடியாது எனக் கருதுகின்றனர். சீனாவின் மக்கள் தொகை கொள்கை ஒருபோதும் மக்களைப் பற்றியது அல்ல. ஆனால் இந்தமுறை சீன அரசின் செயல்பாடுகள் மக்கள் தொகையை அதிகரிப்பதை நோக்கி இருக்கிறதா அல்லது பெண்களை குழந்தை பெற்றெடுக்கும் 'வளமாக' மாற்றுகிறதா என்ற கேள்வி சீன இளைஞர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சீனா: இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம் - சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு!

``மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது..? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி
திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. திருப்பரங்குன்ற மலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆர்.டி.ஓ தகவலின் படி மலை உச்சியில் இருக்கும் சர்வே கல்லில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றம் இந்நிலையில் இந்து அமைப்பான இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், 'இந்த ஆண்டு திருப்பரங்குன்ற மலை உச்சியில் இருக்கும் தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும்' என மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் இருக்கும் தூணில் தீபமேற்ற உத்தரவிட்டிருந்தார். நூற்றாண்டு பாரம்பரிய வழக்கத்தை தொடரும் வகையிலும், 2014-ம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், சட்ட ஒழுங்கு சிக்கலைக் கருத்தில் கொண்டும் திருப்பரங்குன்ற கோயில் நிர்வாகம் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் வழக்கம் போல கார்த்திகை மகாதீபம் ஏற்றியது. உச்சியில் இருக்கும் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்ய திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. தற்போது மதுரை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. இதற்கிடையில், மதுரை மற்றும் கோவை மாவட்டங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இதற்கு கோவை மற்றும் மதுரையில் போதுமான மக்கள் தொகை இல்லாததே காரணம் எனவும் மத்திய அரசு கூறியது. மதுரை - மெட்ரோ மத்திய அரசின் இந்த நிராகரிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. அதே நேரம், பாஜக-வினர் 2026-ம் ஆண்டு தேர்தலில் பாஜக - அதிமுக ஆட்சி அமைத்தால் மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ திட்டத்தைத் கொண்டு வருவோம் எனக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ இரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்! - இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது! எனக் குறிப்பிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம்: நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

OPS-க்கு, Amit shah தந்த உத்தரவாதம், பின்னணியில் TVK ரோல்? | Elangovan Explains

Thiruparankundram கோயிலில் பாரத் மாதா கி ஜே - என்ன நடந்தது? | Kerala-வில் EPS ; Delhi-யில் OPS IPS

Thiruparankundram Issue: கார்த்திகை தீபம் சர்ச்சையும் பின்னணியும் | Justice G R Swaminathan| Decode
பகவத் கீதை: மில்லியன் மக்களுக்கு உத்வேகமளிக்கும் நூல் - ரஷ்யப் பிரதமர் புதினுக்கு மோடி பரிசு
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதற்குப் பிறகு முதல் முறையாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருக்கிறார். உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பல்வேறு கட்ட முயற்சிகள், இறுதியாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டதில் வந்து நின்றது. அதைத் தொடர்ந்து மெல்ல கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைக்கத் தொடங்கிய இந்தியாவுக்குத்தான் தற்போது புதின் வருகை தந்திருக்கிறார். Presented a copy of the Gita in Russian to President Putin. The teachings of the Gita give inspiration to millions across the world. @KremlinRussia_E pic.twitter.com/D2zczJXkU2 — Narendra Modi (@narendramodi) December 4, 2025 இந்தியா வந்த புதினை பிரதமர் மோடி நேரில் சென்று ஆரத் தழுவி வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து பிரதமர் இல்லம் வரை இருவரும் ஒரே காரில் பயணித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று இரவு அதிபர் புதினுக்குச் சிறப்பு விருந்து ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. அப்போது பிரதமர் மோடி அதிபர் புதினுக்கு பகவத் கீதையைப் பரிசாக வழங்கினார். அது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``ரஷ்ய மொழியில் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகமளிக்கிறது எனப் பதிவிட்டிருக்கிறார். India - Russia: இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் ரஷ்ய அதிபர் புதின்- பிரதமர் மோடி சொன்ன தகவல்!

'10 ஆண்டுகளில் 106 வழக்குகள் மட்டுமே' - லஞ்ச ஒழிப்புத்துறை குறித்த RTI; வெளியான அதிர்ச்சி தகவல்
விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினரால் சுமார் 10 ஆண்டுகளில் வெறும் 106 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை) என்பது தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதைத் தடுத்திடவும், ஊழலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் உச்சபட்ச அமைப்பாகும் இது. மேலும், அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் லஞ்சம் மற்றும் ஊழல்கள் குறித்து புகார்கள் வந்தால், அதனை உரிய முறையில் விசாரணை செய்வதோடு, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், ஊழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ``நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்'' - குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள் RTI ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைவான அளவே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பத்திரப் பதிவுத்துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வருமான வரித்துறை, வணிகவரித்துறை, காவல் நிலையங்கள் என அரசுத்துறை சார்ந்த பகுதிகளில் நீக்கமற லஞ்சம் பெருகியுள்ளதாக பொது மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ‘அரசு ஊழியர்களே லஞ்சம் வாங்குங்கள், பிடிபட்டால், வேலையே பார்க்காமல் சம்பளம்!’ - ஊக்குவிக்கும் அரசு! தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியான தகவல்கள் இந்தநிலையில், 10 ஆண்டுகளில் 106 வழக்குகள் மட்டுமே பதிவானதாக வந்த தகவலால் சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த உமாராணி என்பவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களைக் கேட்டிருந்தார். அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திலிருந்து பதில் வந்துள்ளது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2014 முதல் தற்போது வரை எத்தனை லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு, 106 வழக்குகள் எனப் பதில் வழங்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் எனக் கேட்டதற்கு, 29 வழக்குகளில் 46 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. RTI 'விருதுநகர் நகராட்சியில் 2014-15 இல் சாலை அமைப்பதில் ஊழல் ஏதும் நடைபெற்றதா? அதில் யாருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?' என்ற கேள்விக்கு, 'குற்ற வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. முதல்நிலை விசாரணை பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டது' எனத் தெரிவித்துள்ளனர். எனவே, லஞ்சம், ஊழல் தடுப்பு தொடர்பாகப் போதிய விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு தரப்பில் ஏற்படுத்த வேண்டும். அரசுத் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். லஞ்சம் தொடர்பான புகார்களை அளிப்போருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

முதல்வரின் மக்கள் செல்வாக்கை குறைக்க பல வழிகளில் நெருக்கடி தருகிறது ஒன்றிய அரசு - உதயநிதி
தி ருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், கலைஞர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது, ``திருவண்ணாமலை மாவட்டத்தில், நான் திறந்து வைக்கின்ற மூன்றாவது கலைஞர் சிலை இது. இப்படி, தமிழ்நாடு முழுக்க கலைஞரின் சிலையைத் திறந்து வைத்துக்கொண்டிருக்கின்றோம். இது வெறும் நிகழ்ச்சிக்காகவோ அல்லது கொண்டாட்டத்துக்காகவோ நடத்தப்படக்கூடியது அல்ல. கலைஞரின் கொள்கைகளை, அவரின் சாதனைகளை, புகழை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கின்ற நிகழ்ச்சியாகத்தான் பார்க்கின்றோம். நம் தலைவரின் தலைமையில், நாம் ஓரணியில் நிற்கிறோம். ஆனால், நம் எதிரே நிற்கின்ற `அ.தி.மு.க எத்தனை அணியில் நிற்கிறார்கள்’ என்று யாருக்குமே தெரியாது. `அந்த கட்சியை யார் கைப்பற்ற போகிறார்கள்’ என்கிற போட்டியில்தான் அத்தனை அணிகளாக அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள். `எடப்பாடி பழனிசாமியை எப்படி தோற்கடிக்கலாம்’ என்று ஒவ்வொரு அணியும் அ.தி.மு.க-வில் போட்டி போட்டுக்கொண்டு வேலை பார்க்கிறது. ஏனெனில், அ.தி.மு.க தொண்டர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்திருக்கிறார். ஆரணியில், உதயநிதி ஸ்டாலின்... `அமித்ஷா-வின் காலடியில் யார் முதலில் விழுவது’ என்று அ.தி.மு.க அணிகளுக்கிடையே மிகப்பெரிய போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், பாசிச பா.ஜ.க-வையும், அதன் அடிமை அ.தி.மு.க-வையும் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் ஏற்றுக்கொள்ளப் போவது கிடையாது. வெறும் வெறுப்பு பிரசாரத்தை மட்டுமே செய்கிற ஒன்றிய பாசிச பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருக்கிறது. அந்தக் கூட்டணி அமைந்து எட்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால், அந்தக் கூட்டணியை நம்பி ஒரு இயக்கம்கூட போகவில்லை. அங்கு இருக்கிறவர்கள்தான் ஒவ்வொருத்தராகப் பிய்த்துக்கொண்டு போகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எட்டு மாதங்களுக்கு முன்பு `பிரசாரத்துக்குப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு பஸ்சை எடுத்துக்கொண்டு கிளம்பினார். `அந்த பஸ்சில் போய் பிரசாரம் செய்வாரா?’ என்று பார்த்தால், ஒவ்வொரு தொகுதியாகப்போய் அ.தி.மு.க-வில் இருப்பவர்களையே திட்டிக்கொண்டு இருக்கிறார். திருப்பரங்குன்றம்: நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம்! உதாரணத்துக்கு, தேனி பக்கம் போனால் ஓ.பி.எஸ்-சை திட்டுவார். கோபிக்குப் போனால் செங்கோட்டையனைத் திட்டுவார். டெல்டா பகுதிக்குப் போனால் டி.டி.வி.தினகரனைத் திட்டுவார். இப்படித்தான் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால், `அமித்ஷாவை யார் அதிகமாகப் பாராட்டி பேசுவது’ என்பதில் மட்டும் அ.தி.மு.க அணிகளுக்குள் ஒற்றுமை இருக்கிறது. சொந்தக் கட்சியினரைத் திட்டிவிட்டு அமித்ஷா-வின் காலை பிடித்துக்கொண்டு அவரைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, இந்தியாவில் அவர்களின் கொள்கை `ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி’ என்பதுதான். அப்பேர்ப்பட்ட ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து நிற்கக்கூடிய, கேள்வி கேட்கக்கூடிய ஒரே இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் தெம்பு தைரியத்துடன் நின்று கொண்டிருக்கிறது. மாநில உரிமை, மொழி உரிமை, சமூகநீதியைக் காக்க நம் கழகம் என்றைக்கும் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கும். அந்தப் போராட்ட உணர்ச்சியை நமக்கெல்லாம் ஊட்டிய தலைவர் தான் நமக்கு முன்பு சிலையாக நின்று கொண்டிருக்கிறார். கலைஞர் காட்டிய வழியில்தான் நம்முடைய கழகத் தலைவர் திராவிட மாடல் ஆட்சியையும் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார். ஆரணியில், உதயநிதி ஸ்டாலின்... இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக நம் தலைவரும், சிறந்த மாநிலமாக நம்முடைய தமிழ்நாடும் விளங்கியிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து, நம் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளையும் பெருக்கிக் கொண்டு வருகிறார். முதலமைச்சருக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கைக் குறைக்கத்தான் ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் நெருக்கடியைக் கொடுக்கிறது. தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்றே நிதிச்சுமையை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். நூறுநாள் வேலை வாய்ப்புக்கான நிதி கொடுப்பதில்லை; கல்விக்கான நிதியை பறிக்கிறார்கள்; புதிய ரயில்வே திட்டங்களைக் கேட்டால், அதையும் கொடுப்பதில்லை. நிதி ஒதுக்கீட்டில் பா.ஜ.க ஒன்றிய அரசு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்கிறது. `தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் பா.ஜ.க-வை ஏற்க மாட்டார்கள்’ என்று தெரிந்தேதான் பா.ஜ.க இன்றைக்கு தமிழ்நாட்டை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்தே தான் நம் முதலமைச்சர் திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறார்’’ என்றார். பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி

பாமக: மாம்பழம் சின்னத்தை முடக்காமல் இருக்க, தேவையான ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன - திலகபாமா
'பா.ம.க கட்சியையும், சின்னத்தையும் முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாஸுடன் உள்ள சிலர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்குப் பதிலடியாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது' என்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநில பொருளாளர் திலகபாமா பேசியிருக்கிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த திலகபாமா கூறுகையில், ஆவணங்களின் அடிப்படையில் பா.ம.க-வின் தலைவர் அன்புமணிதான் எனத் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இது பா.ம.க சொந்தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. பா.ம.க கட்சியையும், சின்னத்தை முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாஸுடன் உள்ள சிலர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்கள் அவர்களுக்குப் பதிலடியாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பின்னரும் தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்துள்ளது மோசமான செயல் அறநிலையத்துறையை யார் இன்று முடுக்கி விட்டார்கள். திலகபாமா இதற்கு தமிழக மக்கள் சார்பில் வருத்தம் தெரிவிப்பதுடன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். பா.ம.க-வின் நிறுவனராக மருத்துவர் ராமதாஸை ஏற்றுக் கொள்கிறோம். 40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை, பாட்டாளி சொந்தங்கள் இணைந்து வளர்த்தெடுத்திருக்கிறார்கள். கட்சியை அடுத்த தலைமுறைக்குப் பத்திரப்படுத்தி கொடுப்பதற்கும், தமிழகத்தின் தலைமுறையைக் காப்பதற்கும் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் அன்புமணி இருக்கிறார். பாசப் போராட்டத்தையும் தாண்டி, தமிழக மக்களுக்காக உழைப்பதற்கு அவர் முறையான வழியில் சென்று கொண்டிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் வெறும் அதிகாரத்தைக் கைப்பற்ற போராடவில்லை, மக்களுடன் அவர் இருப்பதால் அதிகாரம் அவர் கையில் வந்து சேர்கிறது. சின்னத்தை முடக்காமல் இருப்பதற்கு தேவையான ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது. சதிகாரர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்” எனத் தெரிவித்தார். அன்புமணி கையில் பா.ம.க... கைவிரித்த தேர்தல் ஆணையம்... என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும் - அண்ணாமலை
வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ``திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், அப்பகுதியில் பா.ஜ.க, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே நேற்றிரவு பதட்டம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதோடு, நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதனை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கத் தீர்ப்பளித்தது. 'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி அதன்படி இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 144 தடை உத்தரவை ரத்து செய்து, ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றக்கோரி பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்தனர். இந்த நிலையில், போலீஸின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை , நீதிமன்ற உத்தரவுகளை தி.மு.க அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். The anti-Hindu DMK government has once again willfully defied the court’s order by preventing devotees from lighting the sacred Karthigai Deepam lamp atop the Thiruparankundram temple hill. Vehemently condemn the TN Police for the arrest of @BJP4TamilNadu State President Thiru… pic.twitter.com/aXkvvY8xMP — K.Annamalai (@annamalai_k) December 4, 2025 இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை, ``இந்து விரோத திமுக அரசு, திருப்பரங்குன்றம் கோயில் மலையில் பக்தர்கள் புனித கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுத்து, நீதிமன்ற உத்தரவை மீண்டும் ஒருமுறை வேண்டுமென்றே மீறியிருக்கிறது. அதே வேளையில், பா.ஜ.க மாநில நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச். ராஜா மற்றும் பிற நிர்வாகிகளை கைது செய்ததற்காக தமிழக காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்து விரோத தி.மு.க அரசு நீதிமன்றத்தின் உத்தரவுகளை மேலும் மீறாமல் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு; மனுவில் கூறப்பட்டிருப்பது என்ன? | Live

நாட்டை விற்க போகிறோமா? இல்லை, நாட்டை வியக்க வைக்க போகிறோமா? #தேர்தல்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் தேர்தல் ': உங்கள் பார்வை என்ன? படித்தவுடன் மனசு 36 வருடங்களுக்கு முன்னோக்கிச் சென்றது... வாக்காளர்கள்... வாக்காளராக நம் கடமை என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா??? அரசியல்வாதியின் சூதாட்டத்தில் பகடைக்காய் இல்லை . நாட்டை விற்க போகிறோமா? இல்லை.. நாட்டை வியக்க வைக்க போகிறோமா? விடை, வினா.. இரண்டும் வாக்காளர் கையில். வாக்கு உரிமையாக! 'மான்டெஸ்க்யூ'என்ற அறிஞர் 'சட்டங்களின் ஆன்மா 'என்ற நூலில் தன்னுடைய அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்காளர்கள் என்று பெருமையாக குறிப்பிடுகிறார். உண்மை . பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல் நம் கையில் உள்ள வாக்கு என்ற மாபெரும் ஆயுதத்தைக் கொண்டு சாதி, மதம், இனம் பாராமல் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டைக் கட்டமைக்க நாம் உறுதி மேற்கொள்வது அவசியம். நம் உரிமை , நம் ஓட்டு என்பதற்கிணங்க நாட்டையும், நம்மையும் ஆளக்கூடிய நபரை தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் வாக்காளரான நமக்கு உண்டு. அதை உரிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான நல்ல பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது என்பதும் உறுதி. தேர்தல் நம் சிந்தனை 5 ஆண்டு காலம் நம்மை ஆளப்போகும் அரசியல் ஆளுமையை தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டியது அவசியம். பணம் செலவழித்தால் போதும் தேர்தலையும், வாக்காளர்களையும் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மனநிலையும், செலவழித்த பணத்தை திரும்பப் பெற பல மடங்கு ஊழல் என்ற நிலையும் இங்கு சர்வசாதரணமாக உள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தல் துறைக்கு முன்னோடியாக இருந்த உத்திரமேரூர் கல்வெட்டு என்ன சொல்கிறது தெரியுமா? போட்டியிடுபவருக்குரிய தகுதிகள் தேர்தல் விதிமுறைகளை மிகச்சரியாக பயன்படுத்துபவரை தேர்ந்தெடுப்பதே சரி என்று கூறுகிறது. உண்மையான ஜனநாயகத்திற்கு ஓட்டு போடுதல் அவசியம். வாக்காளர்களின் சக்தி அளவிட முடியாதது. நாடு முழுக்க பாட்டாளி மக்கள் பரந்துபட்டு இருக்கின்றனர். இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து அவர்களுக்கான வாக்கு உரிமையை அறவழியில் பதிவிட்டு, தனி மனித உரிமைகளுக்கும், தரமான செயல் முறைகளுக்கும், வழிவகை செய்து எவர் ஒருவர் தன்னையே அர்ப்பணிக்கிறாரோ,அவரை தேர்ந்தெடுப்பது மிகவும் சாலச்சிறந்தது. அப்பொழுதுதான் எதிர்கால இந்தியா ஏற்றம் பெறும். வாக்களிப்பவர்கள் மேற்கொள்ளும் ஒருவிரல் புரட்சியினால் வாய்மை வலிமை பெறும். வாக்குரிமை மதிக்க பெறும். குடவோலை முறை வேட்பாளர்களின் வாய் வாக்குகளும் நிஜமாகும். ஊழலுக்கு கைகொடுக்காமல், கும்பிட்டு வாழாமல் நமது உரிமை காப்போம். சிந்தித்து வாக்களிப்போம். யார் வந்தால் நாடு செழிக்கும் என்பதை யோசித்து நம் வாக்குகளை செலுத்துவோம் வாக்குரிமையை தவறவிட்டால் வாழ்வுரிமை தவற நேரிடும். தயவுசெய்து தேர்தல் நாளன்று வீட்டில் உட்கார்ந்து தூங்கிப் பொழுதைக் கழிக்காமல் உங்களது உரிமையை கடமையை செய்து வா( பா)ருங்கள்... மனதிற்கு மகிழ்ச்சி வரும்.. எதையோ சாதித்தது போல் ஒரு பெருமிதமும் உடன் வரும்... அது மட்டுமல்ல உங்களுக்கே உங்களுக்கென்று இசைஞானி தன் ஹார்மோனியத்தால் இசையமைத்து பாடல்பாட அது உங்கள் காதுகளில் ரீங்காரமிடும் உங்களைத் தாலாட்டும். 'ஒற்றை விரல் நீலமையால்' நம் உரிமையை மீட்டு எடுப்போம். வாக்காளராக தமது பங்களிப்பை 100% செயலாற்றுவோம்.. 36 வருடங்களுக்கு முன்பு.. 'தேர்தல்' என்ற தலைப்பில் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசி முதல் பரிசு வாங்கியது நினைவுக்கு வருகிறது.. (வந்தது) கூடவே 1989 ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக வாக்களித்ததும் நினைவுக்கு வருகிறது! என்றென்றும் அன்புடன் ஆதிரை வேணுகோபால் தேர்தல்

இடைத்தேர்தல் - ஓட்டுக்கு இரண்டு ரூபாய்! - திருப்பத்தூர் பார்முலா தெரியுமா?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் முந்தைய வட ஆற்காடு மாவட்டம் .. பின்னர் வேலூர் மாவட்டமாகி.. காலப்போக்கில் நிர்வாக ரீதியாக அதுவும் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தற்போது திருப்பத்தூர் தனி மாவட்டமாக இருக்கிறது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்ற தமிழ்நாட்டின் எட்டாவது சட்டமன்றத் தேர்தலில் ,பிரதமர் இந்திரா காந்தியின் மரணம், எம்.ஜி.ஆரின் உடல்நலக்குறைவு ஆகியவற்றுக்கு மத்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - காங்கிரஸ் கூட்டணிஅமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். நூற்றாண்டு விழா... எம்.ஜி.ஆரின் அசத்தல் புகைப்பட கண்காட்சி... படங்கள்: உ.பாண்டி 1984 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற Y.சண்முகம் சில மாதங்களில் மரணம் அடைய , 1985 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது . எங்களின் பூங்குளம் கிராமம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு இருந்தது (தற்போது வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ளது) இடைத்தேர்தல் ஜுரம் அப்போதே ஒவ்வொரு கிராமத்திலும் அனல் பறந்தது. அடிக்கடி அம்பாசிடர் காரில் யாராவது கிராமத்திற்குள் வருவதும் , திண்ணைகள் மீது ஏறிக்கொண்டு பேசுவது என்று தினசரி விருந்தினர்கள் வரும் விழாக்கள் போன்று இருந்தது . பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சார்பாக எஸ் .பி. மணவாளனும் தி.மு.க சார்பில் முந்தைய வேட்பாளர் சுந்தரம் நீக்கப்பட்டு G. சண்முகமும் போட்டியிட்டனர் . முன்னோட்டம் போதும் ..விஷயத்திற்கு வருவோம்.. அந்த காலகட்டத்தில் எங்கள் உறவினர் ஒருவர் குறிப்பிட்ட கட்சியில் ஊரில் பெரிய மனிதராக வலம் வருவார். அவரை சுற்றி எப்போதும் ஊர் பெருசுகள் சில பேர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். எம்.எல்.ஏ அல்லது எம்.பி. என்று யார் வந்தாலும் அவர் வீட்டு திண்ணையில் தான் அமர்ந்து பேசுவார்கள் . நாங்களும் அடிக்கடி அவர் வீட்டிற்கு செல்வதால் அந்த இடைத் தேர்தலின் போது நடந்த சில நிகழ்வுகள் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் கடந்து போய்க் கொண்டிருந்தோம் . இந்நிலையில் 1985 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் , எங்கள் உறவினர் என்னைப் போன்ற வாக்குரிமை இல்லாத சிறுவர்களையும் இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக வயல் வரப்புகளில் நடந்து சென்று புங்கை, புளிய மரம் என்று ஏதாவதொரு மரத்தடியில் அமர்ந்து விடுவார். 1985-ல் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர் வயலும் வாழ்வும் ஒன்றிய எங்கள் பூங்குளம் கிராமம் பரந்து விரிந்து கிடக்கும். வீடுகள் ஆங்காங்கே பெரும்பாலும் வயலைச் சார்ந்து இருக்கும் ஆதலால் மக்கள் நடமாட்டம் ஆங்காங்கே பரவிக்கிடக்கும். உடன் அழைத்து சென்ற எங்களை அருகாமையில் இருக்கும், சின்னப்பையன் , ஆறுமுகம் , அரசக்கவுண்டர் , சீனி , பிரகாசம் என்று அந்தந்த வீட்டில் இருப்பவர்கள் பெயர்களை சொல்லி அந்த வீட்டையும் காட்டி போய் அழைத்து வரச் சொல்வார் . நாங்களும் வரப்பு வெளிகளில் உற்சாகமாக ஓடிசெல்வோம் நாங்கள் போய் வீட்டில் உள்ள பெரியவர்களை... உறவினர் பெயர் சொல்லி.. மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்.. உங்களை வரச் சொன்னார் என்று சொன்னவுடன் அவர்களும் மரியாதை நிமித்தமாக வந்து விடுவார்கள்.. அதுவரை எங்களை அழைத்துச்சென்ற உறவினர் , எங்களுக்கே தெரியாமல் வேஷ்டியில் சுருக்கி சுற்றி வைத்திருக்கும் இரண்டு ரூபாய் (!) பண்டல்களை பிரித்து , அவரவர்களின் வீட்டில் உள்ள ஓட்டு எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ரூபாய் 2, 4, 6, 8 என்று எண்ணிக்கைக்கு தகுந்தவாறு இரண்டு ரூபாய் தாள்களை கொடுத்து.. மறக்காமல் நம்ம கட்சிக்கு ஓட்டு போடுங்க .. போன முறையே தோத்துட்டோம் இந்த முறை ஜெயிக்க வேண்டும் என்று சொல்வார். எங்களுக்கு அப்போதெல்லாம் இது ஓட்டுக்கு பணம் என்பது புரியாது. இதேபோன்று கிட்டத்தட்ட ஆறு ஏழு நாட்களுக்கு மேலாக கிராமத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றி வந்து கட்சி சார்பாக ஓட்டுக்கு இரண்டு ரூபாய் வீதம் கொடுத்து முடித்து விட்டார் . தினசரி இந்த பண பட்டுவாடா முடிந்தவுடன் எங்களுக்கு நாலணா , எட்டணா என்று கொடுத்து தின்பண்டம் வாங்கிக்க சொல்வார். என்னதான் இப்படி பண பட்டுவாடா நடந்தாலும் ,அந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட எஸ்.பி.மணவாளன் தான் வெற்றி பெற்றார். திருப்பத்தூர் கொஞ்சம் விவரம் தெரிந்து எங்களுக்கு வாக்குரிமை கிடைத்த பிறகு பழைய நினைவுகளை நினைக்கும் போது...தெரியாமலேயே ஒரு தவறான விஷயத்திற்கு நம்மை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டோம். அதன் பிறகு மாநிலத்தில் ஆங்காங்கே எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் எனக்கு திருப்பத்தூர் இடைத்தேர்தல் மனதில் நிழலாடும். என்னதான், ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்ற திருமங்கலம் ஃபார்முலா , இருபது ரூபாய் டோக்கன் என்ற ஆர் .கே. நகர் பார்முலா என்று காலத்துக்கு ஏற்றபடி கவனிப்புகள் மாறிக்கொண்டே வந்தாலும் 1985 ம் ஆண்டு கால கட்டத்திலேயே ஓட்டுக்கு இரண்டு ரூபாய் கொடுத்து வாக்கு சேகரித்த அகராதி திருப்பத்தூர் இடைத்தேர்தலுக்கு உண்டு என்பதை அறியாத வயதில் கண்டு புரியும் வயதில் தெரிந்துகொண்டோம். இந்த தேர்தல் பிரசாரத்தின் போது ஒரே நேரத்தில் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் பூங்குளம் கிராமத்திற்குள் நுழைய , ஆளுங்கட்சி கெத்தில் அமைச்சர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட எதிர்கட்சி என்பதால் டி.ராஜேந்தர் ஊர் எல்லையில் நிறுத்தப்பட்டதால் இரண்டு கட்சியினருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் ஊர் எல்லையில் நின்றவாறு பேசிய டி.ராஜேந்தர் ஆளுங்கட்சியின் அசுர பலத்தை சுட்டி காட்டி பணக்கார வீட்டு கல்யாணத்தில் போய் பத்து ரூபாய் மொய் வைப்பதை காட்டிலும் (எதிர் கட்சிகளுக்கு குறைவான எம்.எல்.ஏ க்கள் இருப்பதை சுட்டி காட்டி) ஏழை வீட்டு கல்யாணத்தில் இரண்டு ரூபாய் மொய் வைப்பது எவ்வளவோ மேல் .. கடைசிவரை நன்றி உடையவர்களாக இருப்பார்கள் என்று சென்டிமென்டலாக பேசியதை அனைவரும் கை தட்டி ரசித்தது ஞாபகம் இருக்கிறது. இடைத்தேர்தல்களில் உருவாகும் பல்வேறு பார்முலாகளுக்கு இந்த இரண்டு ரூபாய் பார்முலா தான் முன்னோடி என்பது என்னை போன்றவர்களுக்கு பிற்பாடு புரிந்தது . - அதிஷ்யன் மேதாவி தேர்தல்

திருப்பரங்குன்றம்: நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறவேற்றாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவினர் கைது இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் விதமாக செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ரகுபதி. 2014 தீர்ப்பை சுட்டிக்காட்டிய ரகுபதி ரகுபதி, கார்த்திகை திருநாளை ஒட்டி திருப்பரங்குன்றம் பகுதியில் எழுந்த சர்ச்சை இன்றைக்கு தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. மதவாத சக்திகள், இந்துத்துவா அமைப்புகள் தமிழ்நாட்டில் காலூன்ற எதைக் கையிலே எடுப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் என்பது தமிழ்க் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படும் திருவிழாவே தவிர, இந்தியாவில் இருக்கிற இந்துக்களுடைய பண்டிகை அல்ல. உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் கார்த்திகை திருவிழாவை கொண்டாடுவார்கள். இதில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையுமே கிடையாது. எனப் பேசினார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாதது குறித்துப் பேசியவர், இப்பொழுது திடீரென்று திருபரங்குன்றத்திலே கார்த்திகை தீபத்தை ஒட்டி ஒரு பிரச்னையை கிளப்பி இருக்கிறார்கள். நீதிமன்றத்தை அணுகி ஒரு உத்தரவை வாங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். 2014 ஆம் ஆண்டு நீதி அரசர்கள் பவானி சுப்பராயன் அவர்களும் நீதி அரசர் கல்யாண சுந்தரம் அவர்களும், 'எந்த இடத்திலே வழக்கப்படி கார்த்திகை தீபத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறோமோ, அதே இடத்திலேயே தான் ஏற்ற வேண்டும்' என ஒரு தீர்ப்பை தந்திருக்கிறார்கள். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டிலே நடக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள். 2014ம் ஆண்டு இரண்டு நீதிபதிகளின் டிவிஷன் பென்சால் கொடுக்கப்பட்ட தீர்ப்பை மேல்முறையீடு செய்யாமல் புதிதாக ஒரு ஒற்றை நீதிபதி தீர்ப்பளித்து, வழக்கத்தை மாற்ற வேண்டுமென்றால் அதை நாங்கள் எப்படி நிறைவேற்ற முடியும். அப்படி அனுமதித்தால் தமிழக அரசின் மீது என்ன குற்றச்சாட்டு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் 2014ம் ஆண்டு தீர்ப்பின்படி நடந்துகொள்கிறோம். எனப் பேசினார். Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ``திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், அப்பகுதியில் பா.ஜ.க, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே நேற்றிரவு பதட்டம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதோடு, நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதனை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கத் தீர்ப்பளித்தது. அதன்படி இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 144 தடை உத்தரவை ரத்து செய்து, ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி , தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க தி.மு.க நாடகமாடுவதாக விமர்சித்திருக்கிறார். மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.… — Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) December 4, 2025 தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, ``மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று பதிவிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணி; நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது! | live
'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி
திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்களை பேட்டிக்காக அணுகினோம். அவர் பேசியவை. பெ.சண்முகம் திருப்பரங்குன்றத்தில் மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டிருக்கிறார். தமிழக அரசின் வாதங்கள் நீதிமன்றத்தில் எடுபடாமல் போயிருக்கிறதே? நீதிமன்றத்தின் உத்தரவை கடுகளவும் ஏற்க முடியாது. தாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்கிற பிடிவாதத்தில் இயந்திரத்தனமாக நீதிபதிகள் இந்த வழக்கை அணுகுகின்றனர். வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டுவிட்டு, தர்காவுக்கு அருகே புதிய இடத்தில் தீபத்தை ஏற்ற இப்போது என்ன தேவை இருக்கிறது? அதை இந்த நீதிமன்றம் ஆய்ந்து பார்க்க வேண்டாமா? நீதிபதி தான் கூறிய உத்தரவை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டுமென மத்திய தொழில்பாதுகாப்பு படையையே அனுப்புகிறார். இப்படி ஒவ்வொரு நீதிபதியும் கிளம்பினால் இதற்கான எல்லைதான் என்ன? அரசியல் சாசனப்படி சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கையில் இருக்கிறது. பதட்டமான சூழல் ஏற்படும் போது இந்த அரசை கைக்கட்டி வேடிக்கைப் பார்க்க சொல்கிறீர்களா? இப்படி ஒவ்வொரு நீதிபதியும் ஒரு உத்தரவைப் பிறப்பித்து ஒரு படையை அனுப்பினால் அது மாநிலங்களின் அதிகாரத்துக்குதான் கேடு விளைவிக்கும். நீங்கள் அவர்கள் கூற்றுப்படியே யோசித்துப் பாருங்கள். திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு ஆகமவிதிப்படி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பார்கள். அந்த நாள்தான் முடிந்துவிட்டதே. இன்று ஏற்றப்போவது சுவாமிநாதன் தீபம். தன்னுடைய உத்தரவை தமிழக அரசு பின்பற்றாதது அவருக்கு கோபம். அந்த நீதிபதியின் பிடிவாதக் குணத்துக்காக ஏற்றும் தீபம். நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. தமிழக அரசுக்கும் எங்களுக்கும்தான் பிரச்னை. அரசு நீதிமன்றத்தை பின்பற்றியிருந்தால் எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது என வலதுசாரிகள் கூறுகிறார்களே? இதை எப்போது சொல்கிறார்கள்? இன்றைக்குதான் சொல்கிறார்கள். மதவாதிகள் எப்போதும் இப்படித்தான் தந்திரமாக சூட்சமமாக பேசுவார்கள். நேற்று அவர்களை மலைக்கு அனுமதித்திருந்தால், அயோத்தியில் நடந்ததுதான் இங்கேயும் நடந்திருக்கும். சிக்கந்தர் தர்காவின் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றிவிட்டு அந்த தர்காவையே இல்லாமல் ஆக்கியிருப்பார்கள். திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் உச்சநீதிமன்றத்தில் உறுதி கொடுத்துவிட்டுதான் பாபர் மசூதியை நோக்கியும் சென்றார்கள். ஆனால், எதையாவது மதித்தார்களா? ஒருவேளை அவர்களை மலைக்கு மேல் அனுமதித்திருந்தால் இன்று தமிழகம் எப்படியிருந்திருக்கும்? இவ்வளவு நாள் முஸ்லீமுக்கும் எங்களுக்கும் பிரச்னை என்றுதானே அவர்கள் பேசி வந்தார்கள்? அந்த விதத்தில் தமிழக அரசு நேற்றைய சூழலை திறம்பட சமாளித்து பதட்டத்தை தணித்தது. தொடர்ச்சியாக வலதுசாரி அமைப்புகள் மதுரையை தங்களின் இந்துத்துவா சோதனைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்களே. அதைப் பற்றிய உங்களின் எண்ணம் என்ன? பலவிதமான கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் பாஜகவால் தமிழகத்தில் அரசியல்ரீதியாக எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. அதனால்தான் அயோத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி பல மாநிலங்களில் அரசியல் லாபத்தை அறுவடை செய்ததைப் போல இங்கேயும் முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு கோவில். அந்த விதத்தில் திருப்பரங்குன்றத்தையும் அயோத்தியாக மாற்ற வேண்டும் என்கிற அவர்களின் தீய நோக்கம் என்றைக்கும் பலிக்காது. பெ.சண்முகம் திமுக அரசுதான் வலதுசாரிகளை இவ்வளவு பெரிதாக வளர இடம் கொடுக்கிறது. இது அவர்களும் அரசியல்ரீதியாக பலனை கொடுக்கிறது என ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறதே? இது மேம்போக்கான பார்வை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் அரசியலைத் தாண்டி நீண்ட கால நோக்கத்தோடு நுணுக்கமாக தீவிரமாக செயல்படுபவை. ஒரு ஊரில் 'வெறுங்கையோடு வாங்க வெள்ளிக்குடத்தோடு போங்க...' என ஒரு போஸ்டர் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். கோவிலில் கலசம் தூக்குவதற்காக அழைப்பு விடுக்கும் போஸ்டர் அது. வெள்ளிக்குடம் கிடைக்கும் என நூற்றுக்கணக்கான பெண்கள் செல்வார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கும் அரசியல் அவர்களுக்கு தெரியாது. இந்த மாதிரி தந்திரமாக நுணுக்கமாக ஏராளமான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். சாம, பேண, தான, தண்டம் என எல்லாவிதத்திலும் அவர்களுக்கு முயற்சிக்கிறார்கள். மத்திய அரசில் ஆட்சியில் இருக்கிறார்கள். அதிகாரம் கையில் இருக்கிறது. அளவுக்கதிகமான பணம் இருக்கிறது. அதனால் தமிழகத்தில் நுழைய கடுமையான முயற்சிகளை எடுக்கத்தான் செய்வார்கள். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீங்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். அடுத்தக்கட்டமாக இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய பல்வேறு தீர்ப்புகள் பாரபட்சமானதாகவும் ஒரு தரப்பாகவும் இருந்திருக்கிறது. குறிப்பாக,அவை மதவாத சக்திகளுக்கு ஆதரவானதாக இருந்திருக்கிறது. அது அரசியல் சாசனத்துக்கும் அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கும் எதிரானது. அதனால் அவர் நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவை. தலைமை நீதிபதியை சந்தித்து சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து வலியுறுத்துவோம். மதுரை மக்கள் இந்த விவகாரத்தை எப்படி அணுகுவதாக பார்க்கிறீர்கள்? நேற்று பதட்டத்தை ஏற்படுத்திய அந்த கும்பலில் பெரும்பாலானோர் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். பொதுமக்கள் வழக்கம்போல கோவிலுக்கு செல்லத்தான் வந்தார்கள். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். பாரத் மாதா கீ ஜே என கோஷம் போட்டவர்களை காவல்துறை அப்புறப்படுத்துகையில் அங்கே எப்படியொரு கைத்தட்டல் கேட்டதென்று. மதுரையின் பொதுமக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்களின் வெறுப்பரசியலுக்கு அவர்கள் இரையாகமாட்டார்கள். பெ.சண்முகம் மதம் சார்ந்த இந்த மாதிரியான விவகாரங்கள் 2026 தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக ஏற்படுத்தாது. 2021 லும் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில்தான் இருந்தார்கள். என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதேதான் இப்போதும். சேராத இடம்தனில் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததை போல நிற்கிறது அதிமுக. மாநிலமே விவாதிக்கும் இந்த விவகாரத்தில் மக்கள் பக்கம் நின்று பேசாமல் இருக்கிறது அதிமுக. குறுகிய தேர்தல் லாபங்களுக்காக நீண்ட கால அடிப்படையில் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்காமல் இருப்பது மோசமான அணுகுமுறை.

திருப்பரங்குன்றம்: ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு
ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும். ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் ஆனால், கார்த்திகை தீபம் தினமான நேற்று (டிசம்பர் 3) வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வலதுசாரி அமைப்பினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறான சூழலில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ``CISF வீரர்களின் பாதுகாப்புடன் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று நேற்று மாலை உத்தரவிட்டார். அதன்படி CISF வீரர்களுடன் மனுதாரர் தரப்பினர் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஆயத்தமாகினர். அதேவேளையில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினரின் ஆர்ப்பாட்டம் அதிகரிக்கவே போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது கலவரமாக மாறுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். மறு உத்தரவு வரும் வரையில் 144 தடை தொடரும் வகையில் இது அமல்படுத்தப்பட்டது. திருப்பரங்குன்றம் மறுபக்கம், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நீதிமன்ற அமர்வு, ``ஏதோவொரு உள்நோக்கத்துடன் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF பாதுகாப்புக்கு செல்ல உத்தரவிடப்பட்டது என்று குறிப்பிட்டு மாநில அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் என்றும் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அதன்படி, உடனடியாக இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``மதுரை காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உடனடியாக காணொளி மூலம் ஆஜராக வேண்டும் என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார். அதோடு, ``ஆஜராகவில்லையென்றால் கடுமையான உத்தரவைப் பிறப்பிக்கவும் தயங்க மாட்டேன் எனவும் எச்சரித்தார். அதன்படி விசாரணையில் ஆஜரான காவல் ஆணையர் லோகநாதனிடம், ``நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா? என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வியெழுப்பினார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதற்கு, ``பேரிகார்டுகளை அமைத்து பிற்பகல் 3:30 மணி முதல் நடவடிக்கை எடுத்தோம். ஆனால், கூட்டம் அதிகமாகி பிரச்னை ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார் என்று காவல் ஆணையர் பதிலளித்தார். விசாரணை முடிவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், ``தீபம் ஏற்றுவதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார். திருப்பரங்குன்றம்:``கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை UAPA-வில் கைது செய்யவேண்டும் - திருமாவளவன்

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!
சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரசு சொன்ன காரணம் இது அரசியல் தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மெட்ரோ மேலும் கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS (விரைவான பேருந்து போக்குவரத்து) ஆகியவை பொருத்தமானதாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி? என தமிழக அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய அமைச்சர் பதில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் தோஹான் சாகு இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் திமுக எம்.பி தயாநிதி மாறன். அதற்கு பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் தோஹான் சாகு, திட்டத்தில் விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள்

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மண்டு கருப்பசாமி கோவில் முன்பு அமைந்துள்ள காலி இடத்திற்காக கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துகளிடையே பல வருடங்களாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தக் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தீபம் ஏற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பெருமாள் கோவில்பட்டி கிராமத்திற்கு மட்டும் நேற்று 144 தடை உத்தரவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பிறப்பித்தார். உயர்நீதிமன்றம் மதுரை கிளை இதனால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், 144 தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்றைய விசாரணையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். விசாரணையின் போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை எழுத்து மூலமாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு இன்று வர உள்ளதால் 144 தடை உத்தரவு இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

OPS - TTV Dinakaran-ன் அடுத்த மூவ்? | Journalist SP Lakshmanan Interview

காங்கிரஸ் குறி வைக்கும் 40 தொகுதிகள்; திமுக கூட்டணியில் எந்தெந்த இடங்களை எதிர்பார்க்கிறது?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தரப்பு மீண்டும் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாமென விரும்புகிறது. விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூர் தலைமையிலான ஒரு பிரிவினர் த.வெ.க-வுடன் செல்லலாமெனக் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இப்படியான சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் சறுக்கலைக் கொடுத்தது. இதில், அகில இந்தியத் தலைமை அப்செட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ் இதற்கிடையில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காகக் குழு ஒன்றை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். அதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்தக் குழுவை மாணிக்கம் தாக்கூர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள், 'செல்வப்பெருந்தகை தன்னிச்சையாகக் குழுவை அறிவித்துவிட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர். TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்! இந்தச்சூழலில் காங்கிரஸின் ஐவர் குழு தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து பேசியது. அப்போது, வரும் தேர்தலில் 40 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும். அதிலும் தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் தொகுதிகளை மாற்றக் கூடாது. நம் கூட்டணி பலமாக இருந்தால்தான் பா.ஜ.க-வை தமிழகத்துக்குள் கால் ஊன்ற விட முடியாது எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதற்கு முதல்வர் ஸ்டாலின், தி.மு.க சார்பில் தேர்தல் பேச்சுவார்த்தைக்கு அறிவிக்கப்படும் குழுவுடன் பேசிக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்து அனுப்பி வைத்ததாகக் கூறப்பட்டது. அண்ணா அறிவாலயம் இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசும் சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், கடந்த தேர்தலில் பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோழிங்கர், ஈரோடு (கிழக்கு), உதகமண்டலம், விருத்தாச்சலம், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, கிள்ளியூர், தென்காசி, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றோம். இந்த முறை அந்தத் தொகுதிகளை வழங்க வேண்டும். செல்வப்பெருந்தகை மேலும் செய்யூர், மதுராந்தகம், கே.வி.குப்பம், ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி, ஆத்துார், ஓமலுார், சேலம் தெற்கு, சங்ககிரி, நாமக்கல், கோபி, ஊட்டி, சூலுார், கோவை தெற்கு, உடுமலைபேட்டை, விருத்தாசலம், கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, பாபநாசம், மேலுார், மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தத் தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் வெற்றிபெறுவதற்கு எளிதாக இருக்கும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். என்றனர். காங்கிரஸ்: ப. சிதம்பரத்தின் திட்டமும் ஐவர் குழு சந்திப்பும்; அறிவாலயத்தில் நடந்தது என்ன?!

24 C